NAVARATRI GOLU STEPS & DOLLS .
In Southern states of Tamil Nadu and to a lesser extent in Andhra Pradesh and Karnataka, the festival of Navrathri is called Kolu or Navratri Golu, where women set up decorated planks in a corner of the house and decorating it with dolls which are collected over the years.
The origin of the word Kolu can be traced to Tamil Kolu or Telugu Koluvai, which means a sovereign sitting in his royal durbar. As per belief the concept of arranging these Navrathri dolls on the plank is to depict that Goddess Mahishasuramardini is sitting in her Kolu, prior to the slaying of the demon Mahishasura.
The dolls are only decorated during these ten days but the collection of dolls may have started over years. These dolls can be very simple to very complicated ones as per ones likes. Every year women enthusiastically arrange these dolls as per their tastes. They either remodify the existing dolls with some new additions or they add couple of new dolls to the existing stacks to decorate the plank every year.
These Navratri dolls are arranged in several tiers. Maximum no of tiers in which dolls are arranged are 9 depending on time and space constraints.
Steps 1-3: These steps are dedicated to— are devoted to the Gods. So all the different idols of
various Gods are arranged here. The kumbham or the ceremonial jar for holy water, which is a conical vessel, is filled with fresh water. A silk cloth covers the mouth of the vessel, a coconut and mango leaves are placed on top of it. This is kept on the first step.
Steps 4-6: The next three steps are devoted to saints like Sai Baba, great men like Swami Vivekananda, demigods and even national leaders who have sacrificed their lives for the country.
Steps 7: Various sets such as the marriage set and pongal set, which signify the various human activities, are placed on the seventh step.
Steps 8: The eighth step is devoted to various businesses and crafts, say the Chettiar dolls (equivalent of Sethji)—a businessman and his wife are placed and their commodities like rice, pulses in cups and other utensils are kept in front of them.
Step 9: The ninth step is the last stage where the traditional wooden dolls called Marapachi — the male and female dolls that are dressed in colorful and shining clothes — are placed. Dolls of animals, birds, reptiles and other forms of evolution are also kept on this step.On the 10th night after the ceremonial arti and prayers, the dolls are put to ‘sleep.’ And the next day, the exhibits are packed carefully in cloth or paper and preserved for use the next year. Another novel trend is the concept of `community kolus’, when many women, unable to keep kolu in their homes, join hands and put up a Navratri kolu in a common place.
Arranging Navrathri Kolu is also an event in itself it means inviting neighbors, friends and other relatives to visit your home and view the Kolu decorated. Pleasantries and small gifts are exchanged amongst women generally women exchange coconuts, cloths and sweets amongst themselves. Sumangali (married) women also exchange bags containing a small mirror, turmeric, comb, beetle leaves with supari.
நவராத்திரி கொலு படிகளும் பொம்மைகளும்:-
தமிழகம், ஆந்திரம் மற்றும் கர்நாடக சில பகுதிகளில், வருடம் முழுமையும் சேகரிக்கப்பட்ட கொலு பொம்மைகளை அலங்கரிக்கப்பட்ட கொலு படிகளில் குடும்பத்தலைவிகள் தங்களின் கற்பனைத் திறனுக்கேற்ப அலங்கரித்து வைப்பதே கொலு பொம்மை காட்சியாகும். கொலு என்பது, மகிஷாசுரனை வதம் செய்வதற்கு முன்னர் மகிஷாசுரமர்த்தினி கொலுவிருக்கும் ராஜ தர்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நவராத்திரி கொலு பொம்மைககளை ஐந்து, ஏழு, மற்றும் ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் படிகளை அமைத்து அலங்கரித்து வைப்பர். இந்த கொலு பொம்மை அலங்கரித்தல் பத்து நாட்களுக்கு மட்டுமே. ஆனால் பொம்மைகளை ஆண்டு முழுமையும் சேகரித்து வைப்பார்கள். ஒவ்வொரு வருடமும் பொம்மைகளை அதிகரித்துக் கொண்டே செல்வர்.
பெரும்பாலும் ஒன்பது படிகளில் இதனை அலங்கரித்து, முதல் மூன்று படிகளில் அனைத்து கடவுள்களுக்காகவும், முதல் படியில் புனித நீருடன், பட்டுத் துணியால் மாவிலை மற்றும் தென்னங்குருத்து போன்றவைகளால் அலங்கரிக்கப்பட்ட கலசகும்பகளுக்கு முதல் படியையும் ஒதுக்கி வைப்பர். நான்கு முதல் ஆறு வரையுள்ள மூன்று படிகளை ஸ்ரீ சாய், விவேகானந்தர், ரமணர் போன்ற மகான்களுக்கும், துணை கடவுள்களுக்கும், தேசத்திற்கு தங்களை அற்பணித்த தலைவர்களும் அலங்கரிக்கப் பட்டு வைக்கப் படுவார்கள். ஏழாவது படியில் வாழ்க்கையை பிரதிபலிக்கும் திருமண செட்டுகள், பொங்கல் செட்டுகள் போன்றவைகள் இடம் பெறுகின்றன. எட்டாவது படியில் நவதான்ய வியாபார செட்டியார் பொம்மை, மற்றும் பல்வேறு பொருள்கள் அடங்கிய பொம்மைகள், பல்வேறு வணிக சம்பந்தப்பட்ட பொம்மைகள் இடம்பிடிக்கின்றன. கடைசியாக ஒன்பதாம் படியில் மரபொம்மைகளும், அலங்கரிக்கப்பட்ட ஆண், பெண் மற்றும் விலங்குகள், பறவைகள், பல்வகை ஊர்வன போன்றவைகளின் பொம்மைகள் வைக்கப்படுகின்றன.
பத்தாம் நாள் இரவு வழிபாடு மற்றும் ஆரத்தி முடிந்தவுடன் இந்த பொம்மைகள் கிடக்கை வசத்தில் இருத்தப் படுகின்றன. மறுநாள் இவைகளை பாதுகாப்பாக பேப்பர் மற்றும் துணிகளுக்கு இடையில் அடுக்கி அடுத்த வருட கொலுவிற்கு சேமித்து வைக்கப் படுகிறது. இவ்வாறு தனியாக கொலு வைக்க முடியாதவர்கள் ஒன்று கூடி, பொது இடத்தில் கொலு வைப்பதும் உண்டு. இந்த நவராத்திரி கொலு விழா அமைப்பது உறவினர்கள், நண்பர்கள், அண்டை அயலார்களை நமது வீட்டிற்கு கொலுவினை காண அழைத்து பல சிறு பரிசுப் பொருள்களை வழங்கி அளவளாவி பாட்டுக்கள் பாடி தங்களின் திறமைகளை மற்றவர்கள் காண செய்வார்கள். சுமங்கலி பெண்கள் மஞ்சள் கும்குமம் வளை. சீப்பு, கண்ணாடி வெற்றிலைபாக்கு மற்றும் தேங்காய் பழம் போன்றவை களையும் பரிமாறிக் கொள்வார்கள். இந்த நவராத்திரி விழா பெண்களுக்கும், திருமண பருவம் கண்ட யுவதிகளுக்கும், சிறுமிகளுக்கும் ஒரு வரபிரசாதமாக அமைந்துள்ளது.
கொலுபடிகளும், பொம்மைகளும் என்பதனைக் கண்டோம் , மேலும் நவராத்திரியின் மற்ற அம்சங்களை காண பயணிப்போம் நண்பர்களே !!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!