Search This Blog

Sep 30, 2011

கண்ணீர்-படித்ததில் பிடித்தது.

கண்ணீர்

குடும்பத்து பாங்கான
அழகுடன்
அறிவையும்
அழகான
வாழ்க்கையும்,
அனைத்து
வளங்களும்
கிடைத்திருந்த
இல் வாழ்க்கையில்
உன் மணவாளனுடன்
அன்புடனே
ஆனந்தத்துடன்
வாழ்ந்துகொண்டிருந்தாய்
தெருவே
உனக்கு கிடைத்த
வாழ்க்கையை
பெருமை பேசிகொண்டிருந்ததே,

ஆனால், அது இன்றோ
நிலைத்திருக்கவில்லயே,
கூடா நட்புடன்
கூடி, போட்டி மது குடிக்கும்
போட்டியில் கலந்துகொண்டு
உன் மணவாளன்
மறித்த செய்தி
கண்டு மயங்கி தான் விழுந்தாயே,

இது என்ன கொடுமை
இவர்கள் போட்டிக்கு
உன் மாங்கல்யமும்,
வாழ்க்கையும்,
வாழ்வின் மொத்த
மகிழ்ச்சியையும்
முற்றிலும் பறித்துவிட்டார்களே,

ஐந்து வயது  மகனுடன்
நீ கலங்கிய கண்ணீர்
கல் நெஞ்சையும்
கலங்கடித்துவிட்டதே,
இனி வாழ்வை
வெல்ல நீ
எதிர்கொள்ளும் சவாள்கள்
எத்தனை, எத்தனை
சொல்லி தீர்ந்திடுமா சோகம்,

உன் திருமண  நாளில்
வாழ்த்து சொன்ன என் நெஞ்சம்
உன் முகத்தில் நான் கண்ட
முக மகிழ்ச்சி
இனி நான் காண்பேனா,
வாழ்த்து சொன்ன நெஞ்சம்
இன்று எழுதிட வார்த்தைகள் இன்றி
கலங்கி நிற்கிறது
,
உன் தோட்டத்து பூக்களை
நீ பார்க்கையிலே
மனம் கலங்கி நிற்பாயே
அதை நினைக்கையிலே
வாடுது என் நெஞ்சமே
வாடிய  மனதுடன்!!!

ஆ,ரவிந்திரன்,  எனது வரிகள்.by Ravindran Ravi on Thursday, September 29, 2011 at 7:33pm

அன்பு முகநூல் நண்பர் ரவீந்திரன் ரவி அவர்களின் கண்ணீர் வரிகளை படிக்கும் பொழுது கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன. படித்ததில் பிடித்த வரிகள் . வாழ்த்துக்கள் அன்பு நண்பரே ரவீந்திரன் ரவி அவர்களே!! வாழ்க வளமுடன்.!!!

3 comments:

  1. [ma]" வாழ்த்துக்கள் நண்பரே ரவீந்திரன் ரவி அவர்களே"[/ma]

    ReplyDelete
  2. என்னுடைய எழுத்திற்க்கு, தாங்கள் செய்திருக்கும் இந்த முயற்சிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் அய்யா.

    ReplyDelete
  3. [ma]மிக்க மகிழ்ச்சி நண்பரே ரவீந்திரன் ரவி அவர்களே!!! உங்களின் தொகுப்புக்களை தனியாக எனக்கு அனுப்பி வைக்கவும். தேர்ந்தெடுத்த கவிதை வரிகளை எனது பிளாகரில் பதிவு செய்து தங்களுக்கு இணைப்புக் கொடுக்கின்றேன். மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும்!!!!![/ma]

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!