Search This Blog

Sep 7, 2011

ஈத் பெருநாள் பரிசாக - புனித குரான் பற்றிய இணையதளம்

 இஸ்லாமிய நண்பர்களின் ஈத் பெருநாள் இன்று..
 அவர்களுக்கு ஈத் பெருநாள் பரிசாக இஸ்லாமியர்களின் புனித குரான் பற்றிய இணையதளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன். அத்துடன் அதன் சிறு
 விளக்கமும்படங்களும் உங்களின் பார்வைக்காக இணைத்து இருக்கின்றேன். நீங்களும் இந்த வெப்தளத்திற்ககு சென்று பார்த்து விட்டு இந்த இணையதளத்தை எனது ஈத் பெருநாள் பரிசாக பெற்றுக்கொள்ளுங்கள். மேலும் உங்கள் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஈத் பெருநாள் பரிசாக இந்த வெப்தளத்தை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். மதங்களை கடந்து மனித நேயம் வளர வாழ்த்துக்கள். இந்த தளத்தை பார்வையிடஇங்கு கிளிக் செய்யவும்.www.tanzil.info  


  இந்த இனணயதளம் இஸ்லாமியர்களுக்கு மிக  பயனுள்ளது. திருகுரானை கற்று கொள்பவர் களுக்கு மிக மிக பயனுள்ளது இந்த தளம். நீங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதன் மேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு கீழு்கண்ட விண்டோ தெரியும், 

தேவையான மொழியைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

இதில் Search பகுதிக்கு சென்று நமக்கு தேவையானவற்றை எழுதுக்களின் மூலம் தேவையான 
ஆயத்துகளை தேடிக்கொள்ளலாம்அரபி டைப் தெரியவில்லை என்றால் அருகில் இருக்கும் 
 Roots  மூலமாக  அரபிஎழுதுக்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


Browse பகுதியில் நமக்கு தேவையான சூராக்கள்,ஆயத்துக்கள்,பக்கங்களை தேடிக்கொள்ளலாம். 
அதுமட்டுமின்றி அருகில் காணப்படும் (-),(+)மூலமாக எழுத்துருக்களை பெரியதாகசிறியதாக   
  அமைத்துக் கொள்ளலாம்,Recitation பகுதியில் நமக்கு பிடித்தமான ஓதுபவர்களின் பெயர்களை
தேர்ந்தெடுக்கொள்ளலாம் அதன் அருகில் காணப்படும் பெருக்கல் குறி என்பது ஒதுப்படுகின்ற  
வரிகளை ஒருதடவை கேட்க நினைத்தால் பெருக்கல் குறியை ஒரு முறையும் இரண்டு  
அல்லது மூன்று தடவை கேட்க நினைப்பவர்கள் விருப்பதிற்கேற்ப அதில் கிளிக் செய்து  
தேர்வு செய்து கொள்ளலாம்.


Translation பகுதியில் சென்று தமிழை தேர்வு செய்துமேலே காணப்படும்Quran பகுதியில் கிளிக்
செய்தால்ஒதப்படும் ஆயத்துகளின் மேல் Mouse  வைத்தால்அதன் விளக்கம் தமிழில் தெரியும்,  
 மேலே காணப்படும்Translation பகுதியில் கிளிக் செய்தால் குரான் முழுவதையும் தமிழில் காணலாம்.
.
Translation பகுதியில் கீழ் காணப்படும் .Fixed Translation Box என்பது ஓதுகின்ற போது தானாக  
அதன் விளக்கம் அருகில் தெரியும். Translation on Mouse ஓவர்  என்பது ஓதப்படுகின்ற போது  Mouse ஆயத்துகளின் மேலே வைத்தால் தமிழில் விளக்கம் தெரியும்


Quran என்ற பகுதிக்கு சென்று அரபி எழுத்துகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளாலம்




ஆங்கிலத்திலும் நீங்கள் விளக்கங்கள் பெறலாம்.



Display Options  சென்றும் எழுத்துருக்களின் அளவு  மற்றும் Align  செய்து கொள்ளலாம்முயற்சி 
செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். மதம் சம்பந்தமான பதிவு என்பதால் இதில்
ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன்.

வாழ்க வளமுடன்.
நன்பர் வேலன் அவர்களுக்கு நன்றியுடன் .......தளத்தை அறிமுகம் செய்த நண்பர் முஹம்மது நியாஜ் அவர்களுக்கும் நன்றி..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

  1. Very Good link and information. Thanks

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் என்ற தங்களின் பாராட்டுக்கும், கருத்து பின்னூட்டத்திற்கும் எனது வந்தனமும், வாழ்த்தும் நண்பரே ஞானா அவர்களே!!!

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!