கவிதை- இலக்கணம்(எழுத்து, அசை, சீர், தளை, அடி, மோனை, எதுகை) - அறிந்துகொள்ள-மென்பொருள்.
நான் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழியைப்போல இனிய மொழி எங்கும் கண்டதில்லை என பாரதியார் கூறினார். அந்த பெருமைமிக்க தமிழ்மொழியின இலக்கணத்தை எளிதில் அறியும் முறையை இன்று காணலாம். இந்த தளம் செல்ல நீங்கள் இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வலைத்தளம் : http://www.virtualvinodh.com/avalokitam
இதில நீங்கள் எழுதிய அல்லது இலக்கணம் அறிய விரும்பும் செய்யுளை உள்ளீடு செய்யவும். உள்ளீடு செய்யும் சமயம் எழுத்துபிழை இல்லாமல் உள்ளீடு செய்யவும்.
நான் திருக்குறளை உள்ளீடு செய்துள்ளேன்.
இதில் முதலில் உள்ள எழுத்தில் கிளிக் செய்ய இதில் உள்ள உயிர் எழுத்து -மெய்எழுத்து-உயிர்மெய் எழுத்து-ஆயுத எழுத்து எவ்வளவு உள்ளது என தெரியவரும்.
அடுத்துள்ள டேபினை கிளிக் செய்ய அசை சீர் அறிந்துகொள்ளலாம்.
அடுத்துள்ள டேபினை கிளிக் செய்ய இதில் உளள தளைகளை அறிந்துகொள்ளலாம்.
அடுத்துள்ள டேபினை கிளிக் செய்ய இதில் உள்ள அடியை அறிந்துகொள்ளலாம்.
அடுத்துள்ள டேபினை கிளிக் செய்ய இதில் உள்ள மோனை அறிந்து கொள்ளலாம்.
அடுத்துள்ள டேபினை கிளிக் செய்ய இறுதியாக இதில் உள்ள எதுகையை அறிந்துகொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தளத்தை பயன்படுத்தி எளிய முறையில் இலக்கணம் அறிந்துகொள்ளலாம். மேலும் இதனை உருவாக்கியவர் திரு.virtualvinodh-இந்தியாவில் -தமிழ்நாட்டில்-சென்னையில் உள்ளவர். அவருக்கு நமது சார்பாக பாரட்டுதல்களும் நன்றிகளும். ஆசிரியர் தினத்திற்கு தமிழ் ஆசிரியர்களுக்கும் நமது பதிவுலக ஆசிரியர்களுக்கும் இந்த பதிவினை சமர்ப்பிக்கின்றேன். வாழ்க வளமுடன்.
வேலன்.
கவிதை எழுதும் நண்பர்களின் பார்வைக்கு வேண்டி இப்பதிவினை அன்புடன் பகிர்கின்றேன். வந்தனமும் வாழ்த்துக்களுடன்... கே.எம் தர்மா.....மேலும் பயணிப்போம் நண்பர்களே!!!!
வணக்கம் நண்பரே,
ReplyDeleteமிக மிக பயனுள்ள தகவல்,உங்களை போன்றவர்களால் மட்டுமே ஆகும் செயல்.மிக்கநன்றி.
என்றும் நட்புடன் சேகர்.
நண்பர் சேகர் அவர்களே!!!
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் எங்கு கிடைத்தாலும்(பட்ட அறிவு மற்றும் பட்டாய அறிவு)எனது அன்பு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அலாதி இன்பம்.மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் தங்களின் கருத்து பின்னூட்டத்திற்கு.
அன்புடன் கே எம் தர்மா...