- மறைக்காமல் சொல்லுங்கள் நம் நாட்டில் ஊழலை நிச்சயமாக ஒழிக்க முடியுமா?....முருகன் காஞ்சிபுரம்
ஊழல் என்ற உடன் பல லட்சம் கோடிகளை கொள்ளை அடிக்கப்படுவதை மட்டும் தான் நாம் சிந்திக்கிறோம் ஆனால் அவைகள் மட்டும் ஊழல் அல்ல.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்லும் போதே ஒரு கொயர் பேப்பர் வாங்கிகொடுக்கப் படுகிறதே அப்படி பட்ட அல்ப விஷயத்திலிருந்தே ஊழல் உற்பத்தியாக ஆரம்பித்து விடுகிறது
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் பயிர் மூட்டைகளை பாதுக்காக்க வேண்டிய இரவு காவலருக்கே விவசாயிகள் லஞ்சம் கொடுக்கிறார்கள். இந்த இடத்தில் வாங்குபவனும் கொடுப்பவனும் அதை சட்ட விரோதம் என்று நினைக்க வில்லை பரஸ்பரம் கடமையாகவே நினைக்கிறார்கள்
அந்த அளவு ஊழலும் லஞ்சமும் மக்களின் வாழ்க்கையோடு கலந்து விட்டது.
இது அவ்வளவு சீக்கிரம் ஒழிந்து விடுமென்று நினைக்க முடியாது. எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது போல் தொடர்ச்சியான அறிவுருத்தலாலும் கடுமை யான தண்டனைகளாலும் ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
ஆனாலும் திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் மனிதர்களின் மனம் நேர்மை வழியில் வரும் வரை ஊழலை ஒழிப்பது குதிரை கொம்பே ஆகும்.

தன்னலமற்ற தியாக தலைவர்களை நமது நாடு இனி பார்க்குமா?...முருகன் காஞ்சிபுரம்
இந்த கேள்விக்கு நிறைய பேர் இந்த காலத்தில் தியாகம் செய்யும் தலைவர்கள் கிடைப்பது அறிது இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்று பதில் தருகிறார்கள். இதில் எனக்கு உடன்பாடு கிடையாது காரணம் அக்கால மக்கள் தான் நல்லவர்கள் இக்காலத்தவர் யாருமே நல்லவர்கள் இல்லை என்பது பரிதாபக்கரமான கற்பனையாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் மாற்றான் மனைவியை மோகிப்பவன் மது அருந்தியவன் சூதாட்டத்தில் ஈடுப்பட்டவன் இருந்ததனால்தான் வள்ளுவர் தமது திருக்குறளில் இவைகளெல்லாம் கூடாது என்று அறிவுறுத்துகிறார்.
எனவே கெட்டவன் என்பவன் இன்று புதியதாக தோன்றியவன் அல்ல நல்லவனும் எப்போதுமே தோன்றாமல் இருப்பதும் அல்ல. இன்றைய தேதியில் கூட அப்பழுக்கற்ற தியாக தலைவர்கள் நமது நாட்டில் நிறைய பேர் உள்ளனர் நமது துரதிஷ்டம் அவர்களை யாரும் அடையாளம் கண்டு ஊக்குவிப்பது இல்லை.
மக்களாகிய நாம் என்று நல்ல மனிதரைதான் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப் போம் என்ற உறுதி கொள்கிறோமோ அன்று தான் தியாகத்தலைவர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள் அவர்களை நாமும் நாடும் பார்க்க முடியும்.
நன்றியும், குருஜியின் அருளாசியுடன்...அன்பு கே எம் தர்மா...

No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!