
பகவத் கீதையிடம் காந்திஜியின் பக்தி:
பகவத் கீதை எனக்கு வழிகாட்டும் துணை. எனக்குச் சந்தேகம் தோன்றும் போதெல்லாம் புரட்டிப் பார்த்துக் கொள்ளும் அகராதியைப்போல பகவத் கீதை ஆயிற்று. தெரியாத ஆங்கிலச் சொற்களின் பொருளை அறிவதற்கு நான் அகராதியைப் புரட்டுவதுபோல், எனக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கும் சோதனைகளுக்கும் உடனே பரிகாரங்களைக் கண்டு கொள்ள இந்த ஒழுக்க நெறி அகராதியைப் புரட்டுவேன்.
சமபாவம் (சமத்துவம்), அபரிக்கிரகம் (உடமை வைத்துக் கொள்ளாமை) போன்ற சொற்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. சமபாவத்தை எப்படி வளர்த்துப் பாதுகாப்பது என்பதே பிரச்சனை. சிலர் நம்மை அவமதிப்பவர்கள்; மற்றும் சிலர் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்; நேற்று சக ஊழியர்களாக இருந்தவர்கள்; இன்று அர்த்தமில்ல்லாத எதிப்புகளைக் கிளப்புகிறார்கள்; இவர்கள் அல்லாமல் எப்போதுமே நல்லவர்களாக இருந்து வருபர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லோரையுமே ஒருவர் சமபாவத்துடன் நோக்குவது என்பது எப்படி? உடமை எதுவுமே இல்லாதுப்பது எவ்வாறு? நம் உடம்பே ஓர் உடமையல்லவா? மனைவியும், பிள்ளைகளும் உடைமைகள் அல்லவா? என்னிடம் அலமாரி நிறைய இருக்கும் புத்தகங்களை எல்லாம் நான் கொளுத்தவேண்டுமா? எனக்கு இருப்பவற்றை எல்லாம் விட்டுவிட்டுக் கடவுளை பின்பற்ற வேண்டுமா?
இதற்கெல்லாம் உடனே நேரான பதில் கிடைத்தது. " என்னிடம் இருப்பவற்றை எல்லாம் நான் துறந்து விட்டாலன்றிக் கடவுள் நெறியை நான் பின்பற்ற முடியாது' என்பதே அந்த பதில்.
ஆங்கில சட்டத்தைக் குறித்து நான் படித்திருந்ததும் எனக்கு உதவியது. சமநீதியின் தத்துவத்தைக் குறித்து ஸ்நெல் தந்த விளக்கம் என் நினைவுக்கு வந்தது.
கீதையின் உபதேசத்தை மேலும்

மோட்சத்தை விரும்புகிறவர்கள் தமது உடைமைகள் விஷயத்தில் தர்மகர்த்தா போன்று நடந்து கொள்ள வேண்டும். தர்மகர்த்தாவின் ஆதிக்கத்தில் எவ்வளவுதான் சொத்துக்கள் இருந்தாலும் அதில் ஒரு சிறிதும் தனக்குச் சொந்தமானதல்ல என்று அவர் எண்ணுவதைப் போல எண்ண வேண்டும் என்பதே அதன் பொருள்.
உடமையின்மைக்கும் எல்லோரையும் சமமாகப் பாவிப்பதற்கும், நடத்தையில்

காந்திஜியின் சத்திய சோதனையிலிருந்து.... நன்றி.ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம்.
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!