சித்தர்களை அறிந்துகொள்வோம்:-
சித்தர்கள் யாவரும் சாதி மத வேறுபாடுகளை ஒழிக்கப் தங்களின் சிந்தனைகளை, அனுபவங்களை பாடல்களாக பாடிச் சென்றுள்ளனர். உலகம் யாவுமே மனித குலம் ஒன்றே எனவும், ஒருவனே தேவன் என்பதனையும் உபதேசித்து மூட நம்பிக்கைகளை விரட்ட பாடியுள்ளார்கள். இக்கருத்தை வலியுறுத்திப் பாடியதாலேயே அவர்களின் பாடல்களும், வாழ்கை வரலாறும் திட்டமிட்டே ஒதுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.
சித்தர்களின் பாடங்களின் பொருளை உணர்வதற்கு முதலில் தன்னை உணரவேண்டும். தன் உயிரை அறிய வேண்டும். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பதினெட்டு நிலைகளையும் தெரிந்து கடக்க வேண்டும். அனைத்திற்கும் அடிப்படையான ஓங்காரத்தையும், எட்டிரண்டையும் முழுமையாக உபதேசம் பெறவேண்டும். ஐந்தெழுத்தின் உண்மைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். பிராணாயாமம், வாசியோகம் போன்ற யோகக் கலைகளை கற்க்கவேண்டும். மேலும் யாவிற்கும் மேலான ஒரேழுத்து இரகசியத்தையும், மெய்ப்பொருள் உண்மையையும் உணர்ந்திருந்தால் சித்தர்களின் பரிபாஷையைப் புரிந்துகொள்ளலாம். இவைகளை சித்தர் பாடல்களில் மிகவும் விரிவாக விளக்கியும் கூறியுள்ளார்கள். ஆதலால் இவைகளை விரிவாக தெரிந்து கொள்ள, பின்வரும் உண்மைகளைப் படித்து அறிந்து கொள்ள வேண்டி, அட்டவணைப் படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒன்பது வாசல் கொண்ட நமது உடம்பில் உள்ள 96 தத்துவங்கள்:-
அறிவு.......................................... 1
இருவினைகள்............................ 2 (நல்வினை, தீவினை)
மூவாசைகள்............................... 3 (மண், பொன், பெண்)அந்த கரணங்கள்....................... 4 (மனம், புத்தி, அகங்காரம், சித்தம்)
பஞ்சபூதங்கள்............................. 5 (பிரிதிவி,பூமி,நிலம்,மண்/அப்பு,ஜலம்,நீர்,புனல்/தேயு,அக்னி,நெருப்பு /அனல்,வாயு,கால்,காற்று,கனல்/ஆகாயம்,வெளி,வானம்,விசும்பு)
பஞ்ச ஞானேந்திரியங்கள்..........5 (மெய், வாய், கண், மூக்கு, செவி)
பஞ்ச கன்மேந்திரியங்கள்..........5 (வாக்கு,வாய்-பாணிகை-பாதம்,கால்-பாயுரு,மலவாய்-உபஸ்தம்,கருவாய்)
பஞ்ச தன்மாத்திரைகள்..............5 (சுவை,ரசம்-ஒளி,ரூபம்-ஊறு,ஸ்பரிசம்-ஓசை,சப்தம்-நாற்றம்,கந்தம்)
பஞ்சகோசங்கள்...........................5 (அன்னமயம்,பிராமணயம்,மனோமயம்,விஞ்ஞானமயம்,ஆனந்தமயம் கோசம்
மூன்று மண்டலங்கள்.................3 (அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்)
குணங்கள் ...................................3 (ராஜசம், தாமசம், சாத்வீகம்)
மலங்கள்......................................3 (ஆணவம், கன்மம், மாயை)
பிணிகள்.......................................3 (வாதம், பித்தம், சிலேத்துமம்)
ஏடணை........................................3 (லோக ஏடணை, அர்த்த ஏடணை, புத்திர ஏடணை)
ஆதாரங்கள்..................................6 (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா)
அவஸ்தைகள்.............................5 (சாக்கரம்,நனவு-சொப்பனம்,கனவு-கழுத்தி,உறக்கம்-துரியம்,நிஷ்டை-துரியாதீதம்-உயிர்ப்படக்கம்.)
தாதுக்கள்.....................................7 இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம், சுரோனிதம்.
ராகங்கள்......................................8 காமம்,குரோதம்,லோபம்,மோகம்,மதாம்,மாச்சரியம்,இடம்பம்,அகங்காரம்.
தசநாடிகள்..................................10 இடகலை,இடபக்க நரம்பு/பிங்கலை,வலபக்க நரம்பு/சுழுமுனை,நடுநரம்பு/சிகுவை,உள்நாக்கு நரம்பு/புருடன், வலக்கண் நரம்பு/ காந்தாரி, இடக்கண் நரம்பு/ அத்தி,வலச்செவி நரம்பு/அலம்புடை, இடச்செவி நரம்பு/சங்கினி, கருவாய் நரம்பு/குகு, மலவாய் நரம்பு.
தசவாயுக்கள்.............................10 பிராணன், உயிர்க்காற்று- அபானன், மலக்காற்று-வியானன், தொழிற்காற்று-உதானன், ஒலிக்காற்று-சாமாணன், நிரவுக்காற்று-நாகன், விழிக்காற்று-கூர்மன், இமைக்காற்று-கிருகரன், தும்மல் காற்று- தேவதத்தன், கொட்டாவிக் காற்று-தனஞ்செயன்,வீங்கள் காற்று.....ஆக கூடுதல் 96 தத்துவங்கள் ஆகும்.
ஓம்அ + உ + ம் = உகாரம், அகாரம், மகாரம் ஓம் என்பதே வாளையாகும். ஒம்காரத்தினுள்ளே அனைத்தும் ஒடுங்கி ஒம்காரத்தினாலேயே யாவும் தோன்றி நடந்து வருகின்றது. இதனை உபதேச வாயிலாக உட்பொருளை அறிந்து கொள்ளல் வேண்டும். வாளையின் அட்சரம் ஆ = ஹூ, ஹீ,(அ,உ,இ,கூ, கீ.)
....................மேலும் பயணிப்போம்...கே எம் தர்மா.....
உண்மையை உலகறிய செய்யவேண்டும் , தொடர்க......
ReplyDeleteமிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் நண்பர் பவன் அவர்களே!!!!நிச்சயம் தொடரும்...இந்த தொடர்... நன்றி தங்களின் மேலான கருத்துக்கும், பாலோயர் லிஸ்டில் தங்களை இணைத்தமைக்கும். கே எம் தர்மா
ReplyDeleteஎனது இந்த பிளாகர் தளத்தில் பாலோயர் லிஸ்டில் தங்களை இணைத்தமைக்கு மிக்க நன்றி பிரிய சிநேகன் மற்றும் சேகர் கண்ணாயிரம் அவர்களே!!!
ReplyDeleteஇந்த பிளாகரில் பாலோயர் லிஸ்டில் தங்களை இணைத்தமைக்கு மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் நட்புக்களே டானியல் மற்றும் முருகசாமி,R அவர்களே!!!
ReplyDelete