Search This Blog

Jun 25, 2011

இந்துமத வரலாற்று தொடர்பாகம்-6 !!! இந்துமதம் அக்கா, வேதம் தம்பி!


இந்துமத வரலாற்று தொடர்பாகம்-6 !!! கடவுள் உருவாக்கிய மதம்!! உலகின்முதல் மதம் இதுதானா...? இந்துமதம் அக்கா, வேதம் தம்பி!
by Keyem Dharmalingam on Friday, May 27, 2011 at 7:34pm
குருஜியின் அருளாசியுடன்....

இந்துமத வரலாற்று தொடர்பாகம்-6 !!!
கடவுள்உருவாக்கிய மதம் !!!
உலகின்முதல்மதம்இதுதானா...?
இந்துமதம் அக்கா, வேதம் தம்பி !

கடவுளுக்கு உருவம் கொடுத்து வழிபடுவது என்பதே மனதை ஒரு நிலை படுத்தும் யோக மார்க்கத்திற்கு ஒரு எளிய வழியாகும்.  இந்த உருவ வழிபாட்டு முறையை வேதங்கள் சிறப்பித்து கூறவில்லைஆனால் வேதகாலத்திற்கு முற்பட்ட இந்திய சமூகம் உருவ வழிபாட்டை குறிப்பாக லிங்க வழிபாடு சிவ வழிபாடு ஆகியவைகளை ஆழமாக கொண்டிருந்தனர்.  இந்த ஆழமான உருவ வழிபாடு வேதங்களில் அவ்வளவாக வற்புறுத்த படாததை பார்க்கின்ற போது அது மிகவும் காலம் தாழ்ந்து வேதங்களில் சேர்க்க பட்டிருப்பது புலனாகும். இதனாலும் உருவ வழிபாடுடைய இந்து மதம் வேத காலத்திற்கு முற்பட்டது என்பது உறுதியாகும். 

 பராக்கிரம் பொறுந்திய செயற்கய செயல்களை புரிந்த மனிதர்களை தெய்வ நிலைக்கு உயர்த்தி வழிபடும் வழக்கம் வேதகாலத்தில் இல்லை.  ஆனால் சிந்து வெளியில் கிடைகின்ற சில முத்திரை சித்திரங்களில் மனிதனை தெய்வமாக வழிபடும் தன்மை இருந்திருப்பதாக அறிய முடிகிறது.  இந்த தன்மையே பிற் காலத்தில் மக்களை  காப்பாற்ற கடவுள் மனிதனாக இறங்கி வரும் அவதாரக் கொள்கையாக வேதங்களில் பேசப்படுகிறது

இதற்கு உதாரணமாக அங்கிரஸ் என்ற மகரிஷியின் வாழ்க்கை விபரம் வேதத்தில் கூறப்பட்டதில் இருந்து அறிந்து கொள்ளலாம்பகவான் விஸ்ணு  அவதாரங்கள் பல எடுத்திருந்தாலும் அந்த அவதாரங்கள் எல்லாமே வேதங்களில் விவரிக்கப் படவில்லை.  அண்ட சராசரங்கள் அனைத்தையும் மூன்று அடிகளால் அளந்த வாமன அவதாரத்தை பற்றிய சிறு குறிப்பும் வராக அவதாரத்தை பற்றிய சிறு குறிப்புகளுமே வேதத்தில் காணப்படுகிறதுஆகவே இந்து மதத்திலுள்ள அவதாரக் கொள்கை என்பது வேதகாலத்திற்கு முற்பட்டதாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்களுக்கு தனித்தன்மையும் தனி உருவமும் இல்லை.  அதாவது தேவதைகளை அருவமாக வழிபடுவதே  வேத மரபாகும்.  அதனால் வேதக் கடவுளான இந்திரன், வருணன், வாயு, அக்னி இவைகளுக்கு தனிப்பட்ட வகையில் எந்த உருவமும் ஆதியில் கொடுக்கப் படவில்லை.  இன்று சிலை வடிவங்களால் காட்சி அளிக்கும் அந்த தெய்வ உருவங்கள் மிக சமீப காலத்திலேயே உருவாக்கப் பட்டது ஆகும்.  ஆனால் சிவனுக்கும் அம்பிகைக்கும் கொடுக்கப்பட்டுள்ள உருவங்கள் வேதத்திற்கு மிகவும் முற்பட்ட உருவங்கள் ஆகும்.  அது மட்டுமல்ல வேதங்கள் ஆலைய வழிபாட்டை வலியுறுத்தவே இல்லை

தனிதனி குழுக்களாகவோ அல்லது சமுதாய கூட்டங்களாகவோ மனிதர்கள் ஒருங்கிணைந்து வேள்விச் சடங்கை செய்யச் சொல்லி தான் வேதங்கள் வற்புறுத்து கின்றன.  ஆனால் பூர்வ கால இந்திய மக்கள் உருவ வழிபாட்டை முதன்மையாக கொண்டவர்களாகவும் வழிபாட்டுக்கு என்று தனி இடத்தை  தேர்ந்தெடுத்து செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆதிகால மக்கள் ஆலய வழிபாட்டை மேற் கொண்டவர்களாக இருந்தாலும் கூட பின்னர் வந்த வேதகால கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர்கள் ஆலய வழிபாட்டை கைவிட்டுவிட்டனர் என்றே தோன்றுகிறது. இதனால்தான் ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் மற்றுமுள்ள  பழைய புராணங்களிலும் ஆலயங்களை மன்னர்கள் புதிதாக உருவாக்கியதாகவோ மக்கள் அதில் சென்று வழிபாடு நடத்தியதாகவோ எந்த குறிப்பும் இடம் பெறவில்லை. 

இதை விட முக்கியமான இன்னொரு ஆதாரம் உள்ளது.  அது சிந்து நதி பள்ளத்தாக்கு நாகரீகத்தில் மிகத் தெளிவாகக் காணும் வேதத் தொடர்பில்லாத தன்மையை நமக்கு உள்ளங்கை நெல்லிக் கனிபோல் எடுத்து காட்டுகிறது.  அதாவது இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறையாகும்.  இந்தியாவின் பூர்வ குடிகள் தெற்கே வாழ்ந்த போதும் சரி வடக்கே நகர்ந்த போதும் சரி இறந்தவர்களை தாழிகளில் வைத்து புதைக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தனர்எப்பொழுதுமே அவர்கள் இறந்த உடல்களை எரித்து விட வில்லை.  புதைத்தே வைத்தனர்.  ஏன் அப்படி அவர்கள் செய்தார்கள் என்பதில் ஒரு உண்மை தெளிவாக ஒளிந்து கிடக்கிறது.

ஆதிகால மக்கள் உடலைவிட்டு உயிர் பிரிந்ததும்  உயிரின் வேலை முடிந்து விடுவதாக கருதவில்லை.  உலகை விட்டு சென்ற உயிர் மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் என்று அவர்கள் நம்பினார்கள்அப்படி வருகின்ற போது உயிர்கள் வாழ்வதற்கு உடல்கள் தேவை என்பதினால் அந்த உடலை எரிக்காமல் புதைத்து வைப்பதே சிறந்த வழி என்று கருதினார்கள்.  இன்று கூட ஆன்மீக உயர் நிலையை அடைந்த ஞானிகளின் உடலை எரிக்காமல் புதைப்பதும் அந்த நம்பிக்கை யினால்தான்

வேதங்களை நெறியாகக் கொண்ட மக்கள் உடல்களை புதைப்பது இல்லை எரித்து விடுவார்கள்.  ஏன் என்றால் வேதங்கள் உயிர்களின் மறு வருகையை பற்றி எதுவும் கூறவில்லை. வேதங்கள் மறுபிறப்பை பற்றி எதுவும் சொல்லவில்லை என்றாலும் இந்து மதத்தின் ஆதாரக் கொள்கையாக இருப்பது மறுபிறப்பு கொள்கையாகும்வேத காலத்திற்கு முற்பட்டகாலத்திலிருந்தே மறு பிறப்பு பற்றிய சிந்தனைகள் இந்து மக்களிடையே ஆழமாக வேறூன்றி இருப்பதனால் இந்து மதம் வேதக் கொள்கைகளை தனக்கு ஆதாரமாக கொண்டிருந்தாலும் கூட வேதம் சாராத கொள்கைகளையும் தனக்குள் அடக்கி இன்று வரை நிலைத்து வருகிறது. 

இங்கு நாம் வேதத்தில் இல்லாத கருத்துக்களும் நடை முறைகளும் இந்து மதத்தில் இருக்கிறது என்று சொல்வது வேதம் வேறு இந்து மதம் வேறு என்று சொல்வதற்காகவோ வேதங்களை குறைத்து மதிப்பிடுவதற்காகவோ அல்ல.  இந்து மதம் என்பது வேதத்தை விட தொன்மையானது மனித சமூகத்தன் முதல் மதமாக இருப்பது என்பதை நிலை நிறுத்தி காட்டு வதற்காகத்தான். 

சரித்திர ஆசியர்கள் குறிப்பிடுவது போல் வேதகால மக்கள் வெளியிலிருந்து உள்ளுக்குள் வந்தவர்களாக இருந்தாலும் திருமண பந்தங்கள் மூலமாக உள்ளூர் மக்களோடு இரண்டற கலந்து விட்டதனால் எப்படி அவர்களும் இந்தியாவின் பூர்வ குடிகளாக இருக்கிறார்களோ அதே போன்றே பூர்வ குடிகளின் கருத்துக்கள் வேதங்களில் கலந்து வேதங்களை  இந்து மதத்தின் ஆதாரங்களாக ஆக்கி கொண்டது.  பூர்வ சிந்தனைகளும் வேத சிந்தனைகளும் கலந்து காலங்கள் பல கடந்து விட்டதனால் வேத காலத்திலிருந்து தான் இந்து மதம் தோன்றியிருக்கலாம் என்று நாம் தவறுதலாக கருதி வருகிறோம் உண்மை நிலை முன்பே இருந்த மதத்தில் வேதங்கள் கலந்து அதை செழுமை உடையதாக்கியது என்பதாகும்.   ..............மேலும் பயணிப்போம் 7-ஆம் அத்தியாயத்தில்.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!