Search This Blog

Jan 18, 2012

சைவத் திருமுறைகள்: முன்னுரை



சைவத் திருமுறைகள்: முன்னுரை:
தமிழ் நாட்டில் நிலவும் சைவசமயத்தின் முதன்மை நூல்களைச் சைவத் திருமுறைகள் என்று கூறுவது மரபு. அவற்றைப் பன்னிரண்டாகப் பகுத்துள்ளனர். சைவத் திருமுறைகள் என்ற இப்பதிவில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய சைவ சமய இலக்கியங்கள் யாவை என்பன பற்றியும்  திருமுறைப்பகுப்பு, பகுப்பில் இடம் பெற்றுள்ள சைவ நூல்கள் - அவற்றின் ஆசிரியர்கள்- நூல் எழுந்த காலம் - நூலின் அமைப்பு - உள்ளீடு - இலக்கிய வரலாற்றில் அந்நூல்கள் வகிக்கும் இடம் - சைவ சமய வளர்ச்சியில் அவற்றின் பங்கு பற்றியும் காண உள்ளோம். 

தேவாரம் மற்றும் திருவாசகம் (மூன்றாவது பதிவிலும்), பெரியபுராணம் (நான்காவது பதிவிலும்) விரிவாக அறிமுகம் செய்யப்படுவதால் எஞ்சிய திருமுறைகளும் அவற்றில் இடம்பெற்றுள்ள நூல்களும் இப்பதிவின் தொடராகக் காணலாம்.

சைவ சமயத்தின் முதன்மை நூல்களைச் சைவத் திருமுறைகள் என்று கூறுவது மரபு. அவற்றைப் பன்னிரண்டாகப் பகுத்துள்ளனர். இப்பதிவுகளில், திருமுறை என்பதன் விளக்கம், திருமுறைகளின் பெருமை, அவை ஓதப்படும் முறைகள் ஆகியவை விளக்கப் படுகின்றன.
 

சைவத் தமிழ் இலக்கிய வரலாற்றில் திருமுறைகள் பெறும் இடம், மற்றும் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், யாப்பு, இசை ஆகியவற்றிற்குச் சைவத் திருமுறைகள் ஆற்றியுள்ள பங்களிப்பு - இவற்றை இப்பதிவுகள் அறிமுகப்படுத்துகிறது.

மேலும் நாம் காணவிருப்பது:
(1)
தமிழ் நாட்டுச் சைவப் பெருமக்களால் பெரிதும் போற்றப்படும் சைவத் திருமுறைகள் யாவை என்பதை இனம் காணலாம்.
 

(2) தமிழ் இலக்கிய வரலாற்றுச் சூழலுக்குச் சைவ சமயம் தந்த இலக்கியக் கொடையை அடையாளங் காணலாம்.
 

(3) சைவ சமயம் சார்பாக எழுந்த புதிய இலக்கிய வடிவங்களை அறிந்து அவற்றை உரியவாறு வகைப்படுத்தலாம். 

(4) சைவம் வளர்த்த தமிழ் இசைப் பரப்பை இனங்கண்டு தமிழ் இசை மரபைப் போற்றிப் பாதுகாக்க வழி காணலாம்.

(5) பாடத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும் திருமுறைப் பனுவல்களைப் பொருள் உணர்ந்து ஓதும் முறைமையைக் கடைப்பிடிக்கலாம்.

(6) சைவசமயம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய பெருங்கொடைகளை இனங்கண்டு, மேலும் இவ்வகையில் சமயத்தை மொழி வளர்ச்சிக்கு உரியவாறு பயன் படுத்தலாம்.

(7) சைவ இலக்கியங்களில் காணப்படும், வழிபாட்டு எல்லைக்கு அப்பாற்பட்ட அன்பினையும் மனித நேயத்தையும் இனங்கண்டு மனித உறவுகளை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளலாம்.

(8) சைவம் ஏற்றுப் போற்றிய முருக வழிபாடு, விநாயகர் வழிபாடு முதலியவற்றை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் கண்டு தெளியலாம்.

வழங்கியவர்::
பெயர் : முனைவர். இரா. செல்வக் கணபதி
கல்வித் தகுதி : வித்துவான் 2.D தமிழ், எம்.ஏ., பி.எட்., பி.எச்டி.,
பணி நிலை : தமிழ்த்துறைத் தலைவர் - முதல்வர்(ஓய்வு)
ஆய்வுத்துறை
:
சைவ சமயம் - தத்துவம் - வரலாறு
வெளியீடுகள் : 10 நூல்கள் 100க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்.
பிற ஈடுபாடுகள் : பேச்சு - எழுத்து





எனது இந்த முயற்சி தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் ஆற்றும் ஒரு சிறு தொண்டாகவே எண்ணுகின்றேன். இப்பதிவில் காணப்படும் குற்றங்களைப் பொறுத்தருளவும், என்னை செம்மைபடுத்த திருத்தம் செய்தருளவும் வேண்டுகின்றேன். இப்பதிவிற்கு உதவிகரமாக அமைந்துள்ள வலை தலங்களுக்கும், தமிழ் இணைய கல்வி கழக வெளியீடுகளுக்கும் மிக்க வந்தனங்களுடன் கே எம் தர்மா..

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!