சிவவாக்கியம் (501-505)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -501அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
என்னை அற்ப நேரமும் மறக்கிலாத நாதனே
ஏகனே இறைவனே இராச ராச ராசனே
உன்னை அற்பநேரமுமொழிந்திருக்க லாகுமோ
உனது நாமம் எனது நாவிலுதவி செய்த ஈசனே.
அற்பனான இந்நாயேனை கண் இமைக்கும் நேரங்கூட மறக்காது என்னுள் இருக்கும் என் குருனாதனே! ஏகப் பொருளாகிய ஒருவனே! யாவிற்கும் மேலான இறைவனே! எனக்குள் கோனான இராசனாகி யாவர்க்கும் மேலான இராச ராசனே! ஒரு நொடி நேரங்கூட நீ இல்லாது இவ்வுடம்பில் நான் இருக்க முடியுமோ? ஆகையால் உனது நாமமான நமசிவய என்ற அஞ்செழுத்தை எனது நாவில் மறக்காது ஓதவும் எனக்கு உபதேசித்து உதவி செய்த என் ஈசனே. உன்னை ஒரு கணநேரங்கூட மறக்காது உன்னையே நானடைய உதவி செய் ஈசா.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -502

எல்லையற்று நின்ற சோதி ஏகமா யெரிக்கவே
வல்ல பூரணப்ரகாச யோக போக மாகியே
நல்ல வின்ப மோன சாகரத்திலே அழுத்தியே
நாடொணாத அமிர்தம் உண்டு நானழிந்து நின்ற நாள்.
எல்லையற்ற பரம்பொருளே நமக்குள் சோதியாக நின்று ஏகமாய் எரிந்து கொண்டிருக்கிறது. அது எல்லாம் வல்ல பூரணப் பொருளாகி பிரகாசம் பொருந்தி மிளிர்வதை அறிந்து கொள்ளுங்கள். அதிலேயே வாசி யோகத்தைத் தரும் மௌனத்தில் இருந்து திருப்பாற்கடலாகிய இடத்திலேயே நினைவை அழுத்தி தியானம் செய்யுங்கள். அதனால் நான் என்ற ஆணவம் அழிந்து நானே அதுவாகி நின்ற நாளில் எவரும் நாடிக் கிடைக்காத அமிர்தம் அருந்தி இறவா நிலையை அடைந்திடுங்கள். .

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -503
ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை
ஊணைக்காட்டி உம்முளே உகந்து காண வல்லிரேல்
ஊண காய மாளலாம் உலகபார மாளலாம்
வான நாடு மாளலாம் வண்ண நாடரானையே
.
சித்தர் சிவவாக்கியம் -503
ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை
ஊணைக்காட்டி உம்முளே உகந்து காண வல்லிரேல்
ஊண காய மாளலாம் உலகபார மாளலாம்
வான நாடு மாளலாம் வண்ண நாடரானையே
.
எல்லா மனிதர்களுக்கும் ஒரே அளவில் ஆனவாறு அமைந்திருப்பது மெய்ப்பொருள். அகண்டம் முழுதும் நிறைந்த அளவிட முடியாத சோதியை உங்கள் உடம்பிற்குள்ளேயே ஊமை எழுத்தாக நின்றதை கண்டு கொண்டு அதையே உகந்து இருந்து, காணும் அப்பொருளையே தியானித்து ஞானம் பெற்று வல்லவர் ஆகுங்கள். அதனால் இந்த உடம்பையும் உயிரையும் காத்து ஆளலாம். உலகம் யாவையும் அன்பால் ஆட்சி செய்யலாம். வானக தேவராகி வானுலகம் ஆளலாம். இது ஐவண்ண பாதத்தில் இருந்து நம்மை ஆளும் ஈசன் ஆணையாக உண்மை.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 504
நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து
கத்தியே கதறியே கண்கள் மூடி என் பயன்
எத்தனை பேர் எண்ணினாலும் எட்டிரண்டும் பத்தலோ
அத்தனுக்கிது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே

நித்தமும் மணி ஒலித்து வீட்டின் மூலையில் இருக்கும் பூசை அறைதனில் பூசைகள் செய்து உரக்கக் கத்தி ஒதுவதாலும் கதறுவதாலும் கண்கள் மூடியபடி அமர்ந்து இருப்பதாலும் என்ன பயன் கண்டீர்கள். எத்தனை பேர்கள் எந்தனை முறை எண்ணினாலும் எட்டும் இரண்டும் பத்துதானே. உண்மை அறியாது நீங்கள் இவ்வாறு செய்யும் பூசைகளை நமையீன்ற அத்தனாகிய ஈசன் ஏற்பானா? அறிவை அறியாத மனிதர்களே! எட்டும் இரண்டுமாகிய ஆகாரத்தையும், உகாரத்தையும் தம்மில் அறிந்து பத்தாம் வாசலில் இருக்கும் ஈசனையே பற்றியிருந்து வாசியினால் நாத ஒலியை மணி ஓசை போல ஒலிக்கச் செய்து ஒளியான சோதியில் சேர்த்து கண்களை மூடி தியானித்து இருந்திடுங்கள். இதுவே ஈசனுக்கு ஏற்ற உகந்த பூசை.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 505
எட்டிரண்டு கூடியே இலிங்கமான தேவனை
மட்டதாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல்
கட்டமான பிறவியென் கருங்கடல் கடக்கலாம்
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே.
எட்டாகிய அகாரமும் இரண்டாகிய உகாரமும் கூடியே இலிங்கமாக ஆகியுள்ளது. அதிலே இருந்து ஆளும் தேவனான ஈசனை, எல்லோர்க்கும் பொதுவாக ஒன்றாக உனக்குள் உள்ள மெய்ப்பொருளை மதித்து அதையே நோக்கி தியானித்து இருந்திடுங்கள். மிகவும் கஷ்டமான பிறவி என்ற கருங்கடலை கடந்து ஈசன் திருவடியில் சேரலாம். ஈசனுக்கு விருப்பமான ஆகாய வெளியில் ஈசனோடு இசைந்து இருந்து கண்டு கொள்ளுங்கள்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை களை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!