சிவவாக்கியம் (441-445)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -441 அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
உண்மையான தொன்ற தோன்றை யுற்று நோக்கியும்முளே
வன்மையான வாசியுண்டு வாழ்த்தி யேத்த வல்லிரேல்
தண்மை பெற்றிருக்கலாம் தனமும் வந்து நேரிடும்
கன்ம தன்மமாகும் ஈசர் காட்சி தாணுங் காணுமே
உண்மையான அதுவாகிய மெய்ப்பொருள் ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்றையே உற்று நோக்கி தியானியுங்கள். உங்களுக்குள் எல்லா வல்லமையும் உள்ள வாசியை ஊதி சிவகதியை ஏற்றி வாழ்த்தி இருத்த வல்லவர்களானால் எல்லா நல்ல தன்மைகளும் வாய்க்கப் பெற்று இருக்கலாம். தனமும், தவமும் தானாகவே வந்து சேர்ந்திடும். இதுவே கர்மாவாகிய கடமையும் தர்மமும் ஆகும். சோதியாகிய ஈசன் காட்சி கிடைக்கும். தனக்குள்ளே தவமிருந்து காணுங்கள். .
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -442

பாலனாக வேணுமென்று பத்தி முற்று மென்பரே
நாலு பாத முண்டத்தில் நனைந்திரண்டடுத்ததால்
மூல நாடி தன்னில் வன்னி மூட்டி யந்த நீருண
எவளார் குழலியூடே யீசர் பாத மெய்துமே
அம்மையின் பாலனாக வேணுமென்றால் மெய்யான பக்தியிலேயே உடலும் உயிரும் முற்றியிருக்க வேணும் என்பார்கள். நான்கு இதழ் கமலமாகிய மூலாதாரத்தில் மூண்டெழும் குண்டலினி சக்தியை சூரிய சந்திர கலையால் அக்னி கலையை எழுப்பி மூலநாடியான சுழுமுனையில் சேர்த்து வலத்தில் உள்ள வன்னியிலியே நின்று தவத்தால் தீமூட்டி அதனால் நாம் கேட்டதையெல்லாம் கொடுக்கவல்ல ஏவலார் குழலியான வாலையின் அருளால் அமிர்தத்தை உண்டு, பேரின்பம் பெற்று ஈசனின் திருவடி அடையலாம்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -443
எய்து நின்னை அன்பினா லிறைஞ்சி யேத்த வல்லிரேல்
எய்து முண்மை தன்னிலே இறப்பிறப்ப கற்றிடும்
மையிலங்கு கண்ணிபங்கன் வாசி வானிலேறி முன்
செய்த வல்வினகளுஞ் சிதறு மஃது திண்ணமே.
சித்தர் சிவவாக்கியம் -443
எய்து நின்னை அன்பினா லிறைஞ்சி யேத்த வல்லிரேல்
எய்து முண்மை தன்னிலே இறப்பிறப்ப கற்றிடும்
மையிலங்கு கண்ணிபங்கன் வாசி வானிலேறி முன்
செய்த வல்வினகளுஞ் சிதறு மஃது திண்ணமே.
அடைய வேண்டிய ஈசனை அவன் பாதத்திலேயே நின்று அன்பினால் நெக்குருகி கெஞ்சி அழுது அறிவு உணர்வு நினைவு என்ற மூன்றையும் இணைத்து அவனையே மனதில் இருத்தி நினைந்து தியானம் செய்ய வல்லவரானால் தன்னிலேயே மெய்ப்பொருள் கிடைக்கப் பெற்று அதனால் இறப்பும், பிறப்பும் அகற்றிவிடும். மை தீட்டிய அழகிய கண்களை உடைய உமையம்பிகையின் வலப்பாகத்தில் பங்கு கொண்ட ஈசன் வாசியில் ஆகாயத்தில் ஏறி நின்றிடுவான். அவன் அருளால் இறப்பில் மட்டுமில்லாது முன் செய்த கொடிய வினைகள் யாவும் வாசியால் சிதறி ஓடிவிடும். இது நிச்சயம்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 444
திண்ணமென்று சேதி சொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணலன்புளன் புருகி அறிந்து நோக்கலாயிடும்
மண்ணதிர விண்ணதிர வாசியை நடத்திடில்
நண்ணியெங்கள் ஈசனும் நமதுடலில் இருப்பேனே.

இதுவே நிச்சயமாய் நிலை கிடைக்கும் வழி என்று வாசியோகம் செய்யும் செம்மையானவர்களே! கேளுங்கள், அண்ணலாகிய இறைவன் அன்பே சிவமாய் அன்பெனும் குடில் புகும் அரசனாக இருக்கின்றான் என்பதை அறிந்து அன்பினால் உருகி மெய்ப் பொருளையே நோக்கி தியானம் செய்திடுங்கள். மண்ணும் விண்ணும் அதிர வாசியை நடத்திடுங்கள். நன்மையையே தரும் எங்கள் ஈசன் நம்மை ஆட்கொண்டு எப்போதும் நமது உடலிலேயே இருந்து இறவா நிலை தருவான்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 445
இருப்பனென் எட்டெண்ணிலே இருந்து வேறதாகுவான்
நெருப்பு வாயு நீரு மண்ணும் நீள் விசும்பு மாகுவான்
கருபுகுந்து காலமே கலந்த சோதி நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே
எண்ணாகவும் எழுத்தாகவும் இருப்பவன் ஈசன், எனக்குள் எட்டான அகாரத்தில் இருந்து அதற்குள் சிகாரமாகி வேறாகி அதுவாகி நிற்பான். நெருப்பு, காற்று, நீர், மண், ஆகாயம் என ஐந்து பூதங்களாக ஐ வண்ணமாகி இருப்பான். கருவில் நாம் புகுந்த காலத்திலேயே அதற்குள் சோதியாகி கலந்த நாதனான அவனே குருவாக நீராக நின்றிருப்பான். குரு கற்றுத் தந்த யோக ஞான கலைகளை அறிந்து அந்நீரிலேயே நினைவாய் நின்று மூழ்கி தியானித்திருங்கள். குருவை நமக்குள்ளேயே குறித்து உணர்ந்து கொள்ளுங்கள்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!