பதினெண் கீழ்கணக்கு:
தமிழகத்தில் சங்கம் மருவிய காலகட்டத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில்தான் அகம், புறம் தவிர அறநூல்களும் உள்ளது. இவ்வகை அறநூல்கள் எந்த காலத்திலும் ஏற்புடைய தாகும். இணைய வெளிகளில் சில தளங்களில் இந்த நூல்களைப் படிக்கலாம் என்றபோதும் பரவலாக மக்கள் மத்தியில் சேர்வதில்லை.
நூல்வகைகள்: பதினெண் கீழ்கணக்கு நூல்கள் குறித்த வெண்பா:
"நாலடி,நான்மணி,நா நாற்பது,ஐந்திணை,முப்
பால்,கடுகம், கோவை,பழமொழி, மா மூலம்,
இன்னிலைந் காஞ்சியோடு,ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க்கனக்கு".
இத்தொகுதியில் அடங்கிய நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினோரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று மட்டும் புறத்திணை நூல். இந்நூல்கள் அணைந்ததும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.
நீதி நூல்கள்: திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி,
ஆகிய பதினோரு நூல்கள்.
அகத்திணை நூல்கள்: ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது ஆகிய ஆறு நூல்கள்.
புறத்திணை நூல்கள்: களவழி நாற்பது - ஒரு நூல் மட்டுமே.
பதினெண் கீழ்கணக்கு நூல் அட்டவணை:-
வ.எண் - நூல்பெயர் - பாடல்கள் - பொருள் - ஆசிரியர்
மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!! தமிழ் சங்க இலக்கியங்களைத் தேடி... அன்புடன் கே எம் தர்மா...

௦௧ /01 நாலடியார் .. - 400 - அறம்/நீதி - சமண முனிவர்கள்.
௦௨/02 நான்மணிக்கடிகை - 101- - அறம்/நீதி - விளம்பிநாகனார்
௦௩/03 இன்னாநாற்பது - 40+1 - அறம்/நீதி - கபிலர்.
௦௪/04 இனியவைநாற்பது - 40+1 - அறம்/நீதி - பூதஞ் சேந்தனார்.
௦௫/05 திரிகடுகம் - 100 - அறம்/நீதி - நல்லாதனார்.
௦௬/06 ஏலாதி - 80 - அறம்/நீதி - கணிமேதாவியார்.
௦௭/07 முதுமொழிக்காஞ்சி - 10*10 - அறம்/நீதி - கூடலூர் கிழார்.
௦௮/08 திருக்குறள் - 1330 - அறம்/நீதி - திருவள்ளுவர்.
௦௯/09 ஆசாரக்கோவை. -100+1 - அறம்/நீதி - பெருவாயின் முள்ளியார்.
௧௦/10 பழமொழி - 400 - அறம்/நீதி - மூன்றுரை அரையனார்.
௧௧/11 சிறுபஞ்சமூலம். - 104 - அறம்/நீதி - காரியாசான்.
௧௨/12 ஐந்திணை ஐம்பது - 50 - அகம் - பொறையனார்.
௧௩/13 ஐந்திணை எழுபது - 70 - அகம் - மூவாதியார்.
௧௪/14 திணைமொழி ஐம்பது- 50 - அகம் - கன்னஞ் சேந்தனார்
௧௬/16 கைந்நிலை - 60 -அகம் -புல்லங்காடனார்.
௧௭/17 கார் நாற்பது - 40 -அகம் -கண்ணங்கூத்தனார்.
௧௮/18 களவழி நாற்பது - 40+1 -புறம் -பொய்கையார்.மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!! தமிழ் சங்க இலக்கியங்களைத் தேடி... அன்புடன் கே எம் தர்மா...
மேலதிக தகவலுக்கு சொடுக்குக :...............................http://tawp.in/r/5n7
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!