Search This Blog

Nov 15, 2011

பதினெண் மேற்கணக்கு : தமிழும் இலக்கியங்களும்







தமிழன்னையின் சிற்பம் மதுரை மாநகரில்.
பதினெண் மேற்கணக்கு:
அகத்தியம் மற்றும் தொல்காப்பியம் கண்ட இனிய நண்பர்களை பயணப்படுத்தி சங்க இலக்கியங்களின் ஊடாக பதினெண் மேற்கணக்கிணைக் காண பயணிப்போம்!!!

தமிழ் இலக்கியத்தின் கீழ் வரும் சங்க இலக்கியங்களாக, அகத்தியம், தொல்காப்பியம், பதினெண்மேல்கணக்கு, பதினெண்கீழ்கணக்கு ஆகியவைகளை வகைப்படுத்தி உள்ளனர். இந்த பதினெண் மேற்கணக்கினை இருபிரிவு களாக எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு என பகுத்து, எட்டுத்தொகை என்னும் பிரிவில் கீழ்காணும்: ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பரிபாடல், பதிற்றுப் பத்து என்பவைகளை தொகுத்துள்ளனர்.

பத்துப்பாட்டின் கீழ்: திருமுருகாற்றுப்படை, குறிஞ்சிப் பாட்டு, மலைபடுகடாம், மதுரைக் காஞ்சி, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, பெரும் பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஆகியவைகளைத் தொகுத்துள்ளனர்.

இந்த பதினெண் கீழ்கணக்கில்: நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை என்ற பதினெட்டு இலக்கியங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளனர்.

இத்துனை சங்கநூல்களும் நமக்கு அநேகச் செய்திகளை பறையறிவிக்கின்றன. அவைகளைக் காணலாம்: தமிழ்ச் சங்கம், சங்ககால நிலத்திணைகள், சங்ககாலப் புலவர்கள், சங்ககாலப் பெண் புலவர்கள், சங்ககால ஊர்கள், சங்ககால மன்னர்கள், சங்ககால நாட்டுமக்கள், சங்ககாலக் கூட்டாளிகள் போன்ற நானாவித செய்திகளைத் தருகின்றது.

பொதுவாக பண்டைய தமிழக பண்பாட்டையும் வாழ்க்கைத் தரத்தையும், பெருமைகளையும் காண இப்பாடல் தொகுதிகள் நமக்கு பெரிதும் துணை புரிகின்றன. தமிழருக்கு அகம் எனும் காதல் ஒழுக்கமும், புறம் எனும் வீர வெளிப்பாடுகளுமே இலக்கிய நோக்காக அமைந்தமை இப்பாடல் தொகுதிகளால் உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரியவரும்.

நிறைந்த அடிகளைக் கொண்டவைகளை பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும், குறைந்த அடிகளைக் கொண்டவைகளை பதினெண் கீழ்கணக்கு நூல்கள் எனவும் வகைபடுத்தப்பட்டது. மேலும் இந்நூல்கள் எழுதிய கால வரிசையினைக் கொண்டும் இவ்வாறு பிரிக்கப்பட்டதாக கருத இடமுண்டு.

மேற்கணக்கு நூல்கள் மூன்றடி முதல் ஆயிரம் அடிவரை எழுதப்படும் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மற்றும் பரிபாடல் ஆகிய வகைகளில் எழோப்பட்டவை. மாறாக கீழ்கணக்கு நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை. பாட்டின் நீளத்தைக் கொண்டே இவ்வாறு வகைப்படுத்தினார். பொருட்சுவையை எண்ணி அல்ல என்பதனை இங்கு கருத்தில் நிறுத்த வேண்டும்..
பதினெண் மேற்கணக்கில் உள்ள நற்றிணை இயற்றியவர்களில் 192 பெயர்கள் இதுவரையிலும் காணப்பட்டுள்ளது. குறுந்தொகையை 205 புலவர்களும், ஐந்குருநூற்றினை புலவர் கபிலரும், பலர் இயற்றிய பதிற்றுப்பத்தும், பரிபாடல் 13 புலவர்களாலும், நல்லாண்டுவனார் இயற்றிய கலித்தொகையும், பல புலவர்களால் இயற்றப்பட்ட அகநானூறு, மற்றும் புறநானூறும் அடங்கும்.

பதினெண் மேற்கணக்கில் உள்ள பத்துப்பாட்டில்: திருமுருகாற்றுப்படை நக்கீரராலும், பொருநராற்றுப்படை முடத்தாமக்கன்னியாராலும், சிறுபாணாற்றுப்படை நற்றாத்தனாராலும், கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் இயற்றப்பட்ட பெரும்பாணாற்றுப்படையும், நெடுநல்வாடை புலவர் நக்கீரராலும், கபிலரால் இயற்றப்பட்ட குறிஞ்சிப்பாட்டும், நப்பூதனாரால் இயற்றப்பட்ட முல்லைப்பாட்டும்,மாங்குடி மருதனாரால் இயற்றப்பட்ட மதுரைக்காஞ்சியும்,கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பட்டினப்பாளையும், மலபடுகடாமை புலவர் பெருங்குன்ற பெருங் காசிகனாரும் இயற்றி உள்ளார்கள்.
மேலதிகத் தகவல்களுக்கு காணவும்: இணைப்பினைச் சொடுக்கவும்....
http://ta.wikipedia.org/wiki/பதினெண்_மேற்கணக்கு  மிக்க வந்தனங்களுடன் மேலும் பயணிப்போம் வாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றேன்... அன்பன், இனிய நண்பன் கே.எம்.தர்மா..

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!