யுகாதி புண்ணிய காலங்களும் சிரார்த்த பலன்களும் :
யுகாதி என்றால் : யுகம் + ஆதி அதாவது யுகத்தின் ஆரம்பம் என்று பொருள். யுகங்கள் கிரேதாயுகம், திரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் என நான்கு வகைப்படும். யுகங்களும் அதற்குரிய வருடங்களும் : 1. கிரேதாயுகம் = 17,28,000, ௨) திரேதாயுகம் = 129600, 3 ) துவாபரயுகம் = 864000 , 4 ) கலியுகம் = 432000 ஆக கூடுதல் 4350000 வருடங்கள் ஒரு சதுர யுகம் எனப்படும். இது போன்று 2000 சதுர யுகங்கள் கூடியது பிரம்மா தேவனுக்கு ஒரு நாளாகும். கிரேதாயுகத்தில் நான்கு பாதங்களால் நடக்கும் தர்ம தேவதையானது, திரேதாயுகத்தில் மூன்று பாதங்களாலும், துவாபரயுகத்தில் இரண்டு கால்களாலும், கசியுகத்தில் ஒரு பாதத்திலும் நடக்கின்றது. இதன் காரணமாகவே ஒவ்வொரு யுகத்திலும் நான்கில் ஒரு பக்கு குறைந்து கொண்டு வருகின்றதி. கிரேதா யுகத்தில் கலியுகத்தில் உள்ளது போல் நான்கு மடங்கு ஆண்டுகளும், திரேதாயுகத்தில் மூன்று மடங்கு ஆண்டுகளும், துவாபரயுகத்தில் இரண்டு மடங்கு ஆண்டுகளும் உள்ளன.
இந்த யுகங்கள் ஆரம்பமான நாட்கள் மிகவும் புண்ணிய தினங்களாகக் கருதப் படுகின்றன. இந்த நாட்களில் மூதாதையருக்கு சிரார்த்தம் செய்வது மிகவும் சிறப்பாகும். அந்த புண்ணிய தினங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.
1 . கிருத யுகாதி: இந்த நாள் சித்திரை மாத அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய திருதியை திதியில் வரும். அதாவது விசாக சுத்த மாதத்தில் சுக்ல பட்ச திருதியை திதியில் வரும்.
2 . திரேதா யுகாதி: இந்த நாள் ஐப்பசி மாத அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய நவமி திதியில் வரும். அதாவது கார்த்திக சுத்த மாதத்தில் சுக்லபட்ச நவமி திதியில் வரும்.
3 . துவாபர யுகாதி:- இந்த நாள் ஆவணி மாத பௌர்ணமிக்குப் பின்னர் வரக்கூடிய திரயோதசி திதியில் வரும். அதாவது பாத்ரபத பகுளத்தில் கிருஷ்ணபட்ச திரயோதசி திதியில் வரும்.
4 . கலியுகாதி:- இந்த நாள் மாசி மாத அமாவாசையன்று வரும்.
இந்த நான்கு தினங்களும் திதிகளும் மிகவும் புண்ணிய காலம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த தினங்களில் எள்ளுடன் கூடிய தண்ணீரை பிதுர்க்களை நினைத்து ஒருவன் பக்தியுடன் விடுவானாகில் அவன் ஆயிரம் ஆண்டுகள் சிரார்த்தம் செய்த பயனை அடைகிறான் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.
மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தில் வருமேயானால் அது பிதுர்க்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். மாசி மாத அமாவாசைஅவிட்டம் நட்சத்திரத்தில் வரும் வேளையில் பிதுர்க்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீரை கொடுப்பவனுக்கு பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்க்களைத் திருப்தி செய்த பயன் கிடைக்கும். மாசி மாத அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும் வேளையில் சிரார்த்தம் செய்தால் பிதுர்க்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாகத் தூங்குவார்கள் என்றும் விஷ்ணு புராணம் கூறுகின்றது.
அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி ஆகிய நட்சத்திரங்களுடன் கூடுமேயானால் அப்பொழுது செய்கிற சிரார்த்தம் ஒரு வருஷத்துக்கு பிதுர்க்களுக்கு திருப்தியினை உண்டாக்கும். திருவாதிரை, புனர்பூசம், பூசம் இந்த நட்சத்திரங்களுடன் கூடிய அமாவாசையன்று செய்கின்ற சிரார்த்தத்தினால் பிதுர்க்கள் பண்ணிரெண்டு ஆண்டுகள் திருப்தியடைவார்கள். அவிட்டம், சதயம், பூரட்டாதியோடு கூடிய அமாவாசை தேவர்களுக்கும் கிடைக்காத் புண்ணிய காலமாகும். இந்த ஒன்பது நட்சத்திரங்களிலும் அமாவசை கூடிய பொது சிரார்த்தம் செய்தால் பிதுர்க்களுக்கு திருப்தி உண்டாகும்.

புண்ணிய காலங்களை அறிந்து நம் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய சிரார்த்தங்களை முறையாக செய்து அவர்களின் அருளும் ஆசியும் பெற்று வளமுடன் வாழ்வோமாக.. அன்புடன் கே எம் தர்மா...
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!