Search This Blog

Oct 31, 2011

நெஞ்சொடுபுலத்தல்:அதிகாரம் 130/133 இன்பத்துப்பால்:கற்பியல்

 திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்! வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!

நெஞ்சொடுபுலத்தல்:அதிகாரம் 130/133 
  இன்பத்துப்பால்:கற்பியல்    

1291/1330.
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177864"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
You see his heart is his alone
O heart, why not be all my own?
Explanation :O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?
********************************************
1292/1330.
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177865"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
'Tis plain, my heart, that he 's estranged from thee;
Why go to him as though he were not enemy?
Explanation :O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."
********************************************
1293/1330.
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177866"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
'The ruined have no friends, 'they say; and so, my heart,
To follow him, at thy desire, from me thou dost depart.
Explanation :O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?
********************************************
1294/1330.
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177867"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
'See, thou first show offended pride, and then submit,' I bade;
Henceforth such council who will share with thee my heart?
Explanation :O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?
********************************************
1295/1330.
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177868"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
I fear I shall not gain, I fear to lose him when I gain;
And thus my heart endures unceasing pain.
Explanation :My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.
********************************************
1296/1330.
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177869"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
My heart consumes me when I ponder lone,
And all my lover's cruelty bemoan.
Explanation :My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.
********************************************
1297/1330.
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177870"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Fall'n 'neath the sway of this ignoble foolish heart,
Which will not him forget, I have forgotten shame.
Explanation :I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.
********************************************
1298/1330.
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177871"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
If I contemn him, then disgrace awaits me evermore;
My soul that seeks to live his virtues numbers o'er.
Explanation :My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.
********************************************
1299/1330.
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177872"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
And who will aid me in my hour of grief,
If my own heart comes not to my relief?
Explanation :Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?
********************************************
1300/1330.
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177873"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
A trifle is unfriendliness by aliens shown,
When our own heart itself is not our own!
Explanation :It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.
********************************************
மேலும் பயணிப்போம் வான்புகழ் வள்ளுவனின் இன்பத்துப் பாலை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா....

புணர்ச்சிவிதும்பல்:அதிகாரம் 129/133 இன்பத்துப்பால்:கற்பியல்

 திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்! வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!

புணர்ச்சிவிதும்பல்:அதிகாரம் 129/133 
  இன்பத்துப்பால்:கற்பியல்    

1281/1330.
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177854"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Gladness at the thought, rejoicing at the sight,
Not palm-tree wine, but love, yields such delight.
Explanation :To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.
********************************************
1282/1330.
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177855"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
When as palmyra tall, fulness of perfect love we gain,
Distrust can find no place small as the millet grain.
Explanation :If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.
********************************************
1283/1330.
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177856"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Although his will his only law, he lightly value me,
My heart knows no repose unless my lord I see.
Explanation :Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.
********************************************
1284/1330.
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177857"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
My friend, I went prepared to show a cool disdain;
My heart, forgetting all, could not its love restrain.
Explanation :O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.
********************************************
1285/1330.
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177858"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
The eye sees not the rod that paints it; nor can I
See any fault, when I behold my husband nigh.
Explanation :Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him.
********************************************
1286/1330.
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177859"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
When him I see, to all his faults I 'm blind;
But when I see him not, nothing but faults I find.
Explanation :When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.
********************************************
1287/1330.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177860"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
As those of rescue sure, who plunge into the stream,
So did I anger feign, though it must falsehood seem?
Explanation :Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?
********************************************
1288/1330.
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177861"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Though shameful ill it works, dear is the palm-tree wine
To drunkards; traitor, so to me that breast of thine!
Explanation :O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.
********************************************
1289/1330.
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177862"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Love is tender as an opening flower. In season due
To gain its perfect bliss is rapture known to few.
Explanation :Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.
********************************************
1290/1330.
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open(""http://www.raaga.com/player4/?id=177863"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Her eye, as I drew nigh one day, with anger shone:
By love o'erpowered, her tenderness surpassed my own.
Explanation :She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.
********************************************
மேலும் பயணிப்போம் வான்புகழ் வள்ளுவனின் இன்பத்துப் பாலை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா....

Oct 30, 2011

தியானமும், யோகமும் - ஸ்ரீ அரவிந்தரின் ஆத்ம சமர்ப்பணம் (இறுதிப் பகுதி)

அரவிந்தரின் ஆத்மா சமர்ப்பணம் (இறுதிப் பகுதி)
ஸ்ரீ அரவிந்தரின் ‘ஆத்ம சமர்ப்பணம் என்பது, ஆன்மா விடுதலை அடைய வழி செய்யும் ஒரு யோக நெறியாகும். யோகம் சித்தி பெற உதவும் உயர்ந்த சில முறைகளுள் இதுவும் ஒன்று. சமர்ப்பணம்என்ற தத்துவத்தின் ஆன்மிக அடிப்படைகளைச் சுருக்கமாகக் இறுதிப் பதிவில் தொடருகின்றது. மேலும் தொடருவோம் இனிய நண்பர்களே!!!

சமர்ப்பணம்என்ற தத்துவத்தின் ஆன்மிக அடிப்படைகளைச் சுருக்கம்: 
1.        கடந்தகால நிகழ்ச்சிகள் முடிந்து போனவை. நடந்தது நடந்ததுதான். இனி அது பற்றிச் செய்வதற்கு ஒன்றும் இல்லைஎன்ற உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு இருக்கின்றோம். இறையருளுக்கு அந்த உண்மையும் உட்பட்டதுஎன்று நினைக்கப் பழகிக் கொண்டால் நல்லது. நம்பிக்கை அளவற்ற பலனைக் கொடுக்கக் கூடியது.கடந்த நிகழ்ச்சிகளை மாற்ற முடியாதுஎன நினைத்தால் நம்பிக்கைக்கு இயற்கையாகவுண்டான பெரும்பலன் குறையும். அருள் கடந்ததையும் மாற்றும்என உணர்ந்தால், நம்பிக்கையின் திறம் வரையறையற்றதாக இருக்கும்.
2.        மனிதன் காலத்தால் கட்டுண்டவன். அதனால் கடந்தகால நிகழ்ச்சிகள் அவனுக்குக் கட்டுப்படா. அன்னையின் ஒளி காலத்தைக் கடந்தது. அதனால் கடந்தகால நிகழ்ச்சிகளும் அன்னையின் ஒளியைப் பெற்று, இப்பொழுது பலனாக விளைய முடியும். சமர்ப்பணத்தின் மூலம் கடந்தகால நிகழ்ச்சிகளை அன்னையின் ஒளிக்கு உட்படுத்த முடியும்.
3.        கடந்தகால நிகழ்ச்சிகளின் சுவடுகள் நம் இன்றையச் செயல்களில் படிந்திருக்கின்றன. அந்தச் சுவடுகளைப் புரிந்து கொண்டுவிட்டால் அந்தப் பழைய செயல்களையும், அவற்றின் பாதிப்புகளான இன்றையப் பலன்களையும் மாற்றலாம்.
4.        மனிதனுடைய வாழ்க்கையில் செயல்பட இறைவன் மனிதனுடைய புத்தியைக் கருவியாகப் பயன்படுத்துகின்றான். புத்தியின் செயல் அதன் குணங்களால் நிர்ணயிக்கப்பட்டது. ஆகையால் மனிதனுடைய குண விசேடங்களுக்குப் புத்தியின் செயலைச் சிறப்பாக்கும் ஆற்றல் உண்டு. உயர்ந்த குணங்களின் மூலம் இறைவன் மனித வாழ்க்கையில் சிறப்பாகச் செயல்படுகின்றான்.
5.        செயல்களின் கூறுகளும், குணத்தின் தன்மைகளும் பிரித்துப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு இருக்கின்றன.
6.        கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து அவற்றை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், கடந்தகால நிகழ்ச்சிகளின் பாதகமான பலன்கள் நீங்கும். ஆனால், அந்நிகழ்ச்சிகளுக்குக் காரணமான குண விசேடங்கள் அழியாமல் அப்படியே இருக்கும்.
7.        அந்தக் கடந்தகால மிச்சம் இன்றைய குணச் சிறப்புகளாக நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கும்.
8.        இன்றுள்ள இந்தக் குணச் சிறப்புகளிலிருந்து விடுபட முயன்றால், ஜீவன் கடந்தகால நிகழ்ச்சிகளின் இன்றையப் பலனிலிருந்து விடுதலை அடையும்.
9.        கடந்தகால நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் சமர்ப்பணத்திற்காக நினைவு கூர்ந்தால், அவற்றின் வேகம் ஒரு கட்டத்தில் அதிகரிக்கும். அதன்பின் நிகழ்ச்சிகளின் சுவடுகளான குண விசேடங்கள் மனோவேகத்தில் மனக் கண்ணில் தோன்றும்.
10.     மரணத்திற்குமுன் ஆத்மா வெளிவந்து இப்பிறவியின் செயல்களைக் கண நேரம் விமர்சனம் செய்து, அடுத்த பிறவிக்குரிய இடத்தைத் தீர்மானிக்க முயல்கின்றது. புனர்ஜன்மம் எடுப்பதற்கு இந்த மதிப்பீடு அடிப்படையாக இருப்பதைப் போல், நாம் அன்னைக்குச் செய்யும் சமர்ப்பணம் ஒரு சிறு அளவிலான புனர்ஜன்மமாகும். எந்தச் செயலைச் சமர்ப்பணம் செய்கின்றோமோ, அந்தச் செயலின் (கர்மத்தின்) பலன்களிலிருந்து விடுதலை அடைந்து, அதைப் பொறுத்த வரையில் புனர்ஜன்மம் எடுத்த பலன் உண்டு.
11.     கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து சமர்ப்பணம் செய்தால், அவற்றால் ஏற்பட்ட பிரச்சினைகள் நிச்சயமாகக் கரையும். ஆனால், நிதானமாகக் கரையும். ஆனால், அந்நிகழ்ச்சிகளுக்கு அஸ்திவாரமான உணர்ச்சிகளை (குணங்களை) நினைவு கூர்ந்து சமர்ப்பணம் செய்தால், பிரச்சினைகள் உடனடியாகவும் முழுமையாகவும் கரைந்து போகும்.
12.     ஒரு பிரச்சினையை அழிக்க வேண்டும்என்ற தீவிரமான எண்ணத்துடன் முயன்றால், அதற்குச் சமர்ப்பணம் ஒன்றே உரிய கருவி. அவ்வெண்ணம் பூரணமாகச் செயல் படும்பொழுது, மனிதனால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே இருக்க முடியாது. 
 ஆத்ம சமர்ப்பணம் என்பது, ஆன்மா விடுதலை அடைய வழி செய்யும் ஒரு யோக நெறியாகும். யோகம் சித்திபெற உதவும் உயர்ந்த சில முறைகளுள் இதுவும் ஒன்று
..  

மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!! 
ஸ்ரீ அரவிந்த சுவாமிகளின் ஆத்ம சமர்ப்பனத்தைத் மனதில் கொண்டு, தியானமும் யோக வழிகளை தொடர்ந்து...

தியானமும், யோகமும் - ஸ்ரீ அரவிந்தரின் ஆத்ம சமர்ப்பணம் (மூன்றாம் பகுதி)

அரவிந்தரின் ஆத்மா சமர்ப்பணம் (மூன்றாம் பகுதி)
ஸ்ரீ அரவிந்தரின் ‘ஆத்ம சமர்ப்பணம் என்பது, ஆன்மா விடுதலை அடைய வழி செய்யும் ஒரு யோக நெறியாகும். யோகம் சித்தி பெற உதவும் உயர்ந்த சில முறைகளுள் இதுவும் ஒன்று. மேலும் தொடருவோம் இனிய நண்பர்களே!!!

பெண்ணிற்குத் திருமணம் செய்தபிறகு, பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டிலேயே வைத்துக் கொண்டால், வீட்டில் உள்ள மகனின் வாழ்வு கெட்டுப் போகும்என்று நம்பும் வழக்கம் நம்மிடம் இருக்கின்றது. அந்த மரபுப்படியும், உளவியல் தத்துவப்படியும், வேறு எந்த வகையில் பார்த்தாலும் இது தவறுதான். உற்றோரும் மற்றோரும் கூறியதை எல்லாம் புறக்கணித்துவிட்டு இந்தத் தவற்றைச் செய்தார் ஒரு தொழில் அதிபர். 15 ஆண்டுகளுக்குப்பிறகு அவருடைய மகன் திடீரென்று மரணம் அடைந்தார். மாப்பிள்ளை திவால் ஆனார். அதற்குப்பிறகே அவர் தம் மாப்பிள்ளையைத் தனியாக அனுப்பினார். வசதி உள்ளவர்கள் பெண்ணின் மீதுள்ள பாசத்தால் இதைச் செய்கின்றார்கள்.

பல ஆண்டுகளுக்குமுன் 700 ரூபாய் வருமானம் உள்ள ஒரு கல்லூரி ஆசிரியர், ரூபாய் 30,000 கடன் வாங்கினார். அவருக்குக் கடன் வாங்க வேண்டிய அவசியமே இல்லை. சிறிய குடும்பம்தான். ஆனாலும் ஆடம்பரக் குடையை விரித்துப் பழகிவிட்டார். அதனால் கடன். நாளாக நாளாக கடன் சுமை அவரை அழுத்தத் தொடங்கிவிட்டது. கவலைப்பட்டுக் கவலைப்பட்டு அவருடைய உடல் நலம் ஒரேடியாகக் கெட்டது. அவர் அன்னையின் பக்தர். அன்னையிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். நாளெல்லாம் அவர் செய்து கொண்ட பிரார்த்தனையால் கடன் குறைந்தது. மூச்சு முட்டும் அளவுக்கு இருந்த கடன் சுமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சுமக்கக் கூடிய அளவுக்கு இறங்கிவிட்டது.இனிமேல் வருமானத்திற்கு மேல் செலவு செய்வதில்லைஎன்று அவர் முடிவு செய்து கொண்டார். இந்த முடிவே அவருடைய பிரச்சினைக்கு ஏற்பட்ட முடிவாகவும் அமைந்தது.
ஒருவன் வாயைத் திறந்தால் நீதியும், நேர்மையும் கரை புரண்டோடி வரும். ஆனால், தன் சொந்த வாழ்க்கையில் தன் மனைவியைக் கண்கலங்க வைத்துவிட்டு ஒழுங்கீனமான வழியில் உல்லாசமாய் வாழ்கின்றான். பிரச்சினை பூதாகாரமாகிறது. அப்பொழுது தன் பிரச்சினையை உருவாக்கியவர்கள் தன் மனைவியும், ஊராரும் என்றுதான் நினைக்கின்றானே தவிர, பிரச்சினைக்குக் காரணமானவனே தான்தான் என்பது அவனுக்குப் புரிவதில்லை. 

அதாவது, ஊர் அறிந்ததை அவன் அறியவில்லை. மன்னிக்க முடியாத குணக் கேடுகளால் ஒருத்தியை ஒருவன் விலக்கி விடுகின்றான். எல்லோருக்கும் அவளுடைய குணக்கேடுதான் அதற்குக் காரணம் என்பது புரிகின்றது. ஆனால், அவளுக்கு மட்டும் அது புரியாமல் போகின்றது! இன்னோர் சாரார் இருக்கின் றார்கள். அவர்கள் தம்மைப் பற்றி மற்றவர்கள் புரிந்து கொண்டிருப்பதற்கு எதிர்மாறாகப் புரிந்து கொள்வார்கள். வாய் ஓயாமல் பேசும் ஒரு வியாபாரி, “நான் அளந்துதான் பேசுவேன். அவசியம் இல்லாமல் ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டேன்என்பார். 

பிறர் பொருளுக்கு நான் ஆசைப்பட மாட்டேன்என்று தம்மைப் பற்றி உண்மையிலேயே நினைக்கக் கூடிய ஒருவர், தம் வியாபார நண்பர்களை அணுகி, “உங்கள் வியாபாரத்தை எனக்குக் கொடுத்துவிடுங்கள்என்கின்றார். திறமை சிறிதும் இல்லாத, ஆனால், இனிமையாகப் பழகக் கூடிய ஒருவர், தம்மைச் சிறந்த திறமைசாலி என்று நம்புகின்றார்.

கண்ணுக்கு முன்னால் காட்சியாக இருக்கும் விளக்கத்தைப் பார்க்க மறுத்து, இல்லாத ஒன்றை இருப்பதாக நம்புகின்றவர்கள் இன்னொரு வகையினர். தம்முடைய திருட்டுக் கணக்குப் பிள்ளையை விசுவாசத்தோடு வேலை செய்வதாக நினைக்கும் முதலாளி, அடுத்துக் கெடுக்கும் ஒருவரைத் தம் சிறந்த நண்பராகக் கருதும் அப்பாவி, மேலதிகாரியிடம் பொய்ப் புகார்களைக் கூறி வேலைக்கு வேட்டு வைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஒருவரை ஆபத்பாந்தவர்என்று நம்பும் ஏமாளி போன்றவர்கள், இந்த வகையில் வருவார்கள். நேர்மையாக இருந்ததாலேயே என் வேலை போய்விட்டதுஎன்று ஒப்பாரி வைப்பவர்களையும் இந்த வகையில் சேர்க்கலாம்.

நேர்மையே உயர்ந்தது. இதில் கொஞ்சம்கூடச் சந்தேகம் இல்லை. ஆனால், ‘அது ஆபத்தானதுஎன்பதையும் மறுப்பதற்கில்லை. காந்திஜியைவிட நேர்மையானவர் இந்த உலகில் உண்டா? அவருடைய முடிவு ஆபத்தில்தான் முடிந்தது. நேர்மையோடு விழிப்பும் வேண்டும். இல்லாவிட்டால், அது பார்வையற்ற விழிகளுக்குச் சமானம். இவர்களைப் போன்றவர்கட்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால், பிரச்சினையின் மூல காரணத்தை அவர்களால் அறிய முடியாது. அப்பொழுது அன்னையிடம் பிரச்சினையின் வரலாற்றைச் சொன்னால், அவர் காரணத்தைத் தெளிவுபடுத்துவார். அல்லது பிரச்சினையை விலக்குவார்.

இத்தகையோர் அன்னைக்குப் பிரார்த்தனை செய்து கொண்டால், உண்மையான காரணத்தைப் புரிய வைக்கக் கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். அநேக ஆண்டுகளுக்குமுன் அரசுப் பணியை விட்டுவிட்டு, மாமனார் சொத்துக் கொடுப்பார் என்ற எண்ணத்தால் மாமனார் வீட்டில் போய்த் தங்கி, மாமனாரின் சொத்துகளைப் பன்மடங்காகப் பெருக்கி, பின்னர் அதில் ஒரு பங்கைப் பெற்று, மைத்துனரிடமிருந்து பிரிந்து வந்து, பிற்காலத்தில் வாழ்க்கையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்சினையாக இருப்பதைப் பார்த்த ஒருவர், தாம் அடிப்படையில் செய்த செயல் சரி இல்லாதது என்பதைத் தெரிந்து கொள்ள இயலாதவராக இருக்கின்றார். இத்தனைக்கும் அவர் அன்னையின் பக்தர்! பிரார்த்தனை எல்லா விஷயங்களிலும் பலிக்கின்றது. ஆனால், அடிப்படையான பிரச்சினையில் மட்டும் வழிவிடவில்லைஎனக் குறைப்படுகின்றார் அவர்.இவர்களுக்கெல்லாம் உகந்த முறை சமர்ப்பணமாகும்.

சமர்ப்பணம்என்ற தத்துவத்தின் ஆன்மிக அடிப்படைகளைச் சுருக்கமாகக் அடுத்த இறுதிப் பதிவில் தொடருகின்றது.ஆத்ம சமர்ப்பணம் என்பது, ஆன்மா விடுதலை அடைய வழி செய்யும் ஒரு யோக நெறியாகும். யோகம் சித்தி பெற உதவும் உயர்ந்த சில முறைகளுள் இதுவும் ஒன்று.  மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!! ஸ்ரீ அரவிந்த சுவாமிகளின் ஆத்ம சமர்ப்பனத்தைத் தொடர்ந்து...