சிவவாக்கியம் (051-055)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சிவவாக்கியர் சிந்தனைகள் 051
சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே
சொற்குருக்கள் ஆனவர்களும், சோதியான ஈசன் உடம்பில் ஆவதும், மெய்க்குருக்கள் ஆனவர்களும் வேண்டிய பூசை செய்வதும் சற்குருக்கள் ஆனவர்களும், சாஸ்திரங்கள் யாவும் சொல்வதும் செய்க்குருக்கள் ஆனவர்களும் ஆகிய அனைவருமே தூமையில் கருவாகி திரண்டுருண்டு உருவானவர்களே.
*****************************************************************
சிவவாக்கியர் சிந்தனைகள் 052
கைவடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டு நீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர்
பொய் இறந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல்
மெய் கடந்து உம்முளே விரைந்து கூடல் ஆகுமே.
எவ்விடங்கள் கண்டு நீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர்
பொய் இறந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல்
மெய் கடந்து உம்முளே விரைந்து கூடல் ஆகுமே.
எவ்வளவோ கை முறைகள் கொண்டு யோக ஞானம் கற்றாலும் நம் மெய்யில் மெய்யான இடம் எதுவென அறியாமல் கண்களை சிமிட்டி நிற்கிறீர்கள். .ஈசன் இருக்கும் இடம்எங்கே என்று தெரிந்து கொள்ளாமல் எவ்விடத்தில் மனதை இறுத்தி தியானம் செய்கிறீர்கள். பொய்யாயின யாவையும் ஒழித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து, அங்கேயே சிந்தையைப் பொருத்தி அதையே நோக்கி தியானிக்க வல்லவர்கலானால் மெய்ப்பொருளில் சோதியாக விளங்கி எல்லாவற்றையும் கடந்து நின்ற ஈசனை உங்களுக்குள்ளேயே கண்டு விரைவில் சேர்ந்து கூடி இறவா நிலையைப் பெறுங்கள்.
************************************************************************************************
சிவவாக்கியர் சிந்தனைகள் - 053
ஆடு காட்டி வேங்கை அகப்படுத்து மாறுபோல்
மாடு காட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ
கோடு காட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடு காட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே
ஆட்டை கட்டி வைத்து, வலை விரித்து வேங்கைப் புலியை பிடிப்பது போல் மாடு, மக்கள், செல்வம் என்ற ஆசை வலைக்குள் என்னை அகப்படுமாறு மயங்கச் செய்வது முறையோ!! தாருகாவனத்து முனிவர்கள் எல்லாம் நம் அறிவால் எதையும் சாதிக்கும் சக்தி நமக்கு இருக்க நாம் என் ஈசனை வணங்க வேண்டும் என ஆணவம் பெருகி இறைவனை மதியாது யாகம் செய்தனர். ஈசன் பிச்சடனராக நிர்வாண கோணத்தில் தாருகாவனம் சென்றார். ஈசனை கண்ட ரிஷி பத்தினிகள் அனைவரும் அவர் அழகில் மயங்கிய வண்ணம் அப்படி அப்படியே தங்கள் நிலை மறந்து பின் தொடர்ந்தனர். இதனைக் கண்ட முனிவர்கள் இறைவனை உணராது கோபம் கொண்டு யாகத் தீயிலிருந்து யானையை உருவாக்கி ஈசனைக் கொள்ள ஏவினர். ஈசன் அதனைக் கொன்று அதன் தோலை உரித்து அணிந்துகொண்டார். அதுபோலன்றி ஆணவம் அகங்காரம் என்னைப்பற்றாமல் என் அறிவை மயக்காமல் மெய்யான வீட்டை எனக்குக் காட்டி அந்த வழியிலே தியானம் கூட்டி உன்னை அடையும் வழியைக்காட்டி என்னை வெளிப்படுத்த வேண்டும்.
**********************************************************
சிவவாக்கியர் சிந்தனை 054
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு
எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல் கடந்து நின்ற மாயம் யாவர்காண வல்லரோ
உனது இடது கண் சந்திரன், வலது கண் சூரியன். இடது கையில் சங்கு சக்கரமும் வலது கையில் மான் மழுவையும் கொண்டு பிரம்மாவும் விஷ்ணுவும் அடிமுடி காண இயலாமல் பூமிக்கும் வானத்திற்கும், எட்டு திசைகளுக்கும் அப்புறமாய் நின்ற சிவனே! நீ என் உடம்பில் கலந்து நின்ற மாயத்தை யார் காண வல்லவர்கள்? என் உடம்பினில் மனதை அறிந்து மாயையே நீக்கி அறிவாய் நீ உள்ளதை அறிந்து கொண்டேன்.
******************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 055
நாழியப்பும் நாழியுப்பும் நாழியான வாறுபோய்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந் திருந்திடும்
ஏறில்ஏறும் ஈசனும் இயங்கு சக்ர தரனையும்
வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீண் நரகிலே.
ஒரு படி நீரில் ஒரு படி உப்பைச் சேர்த்தால் அது அந்நீரிலேயே கரைந்து ஒரு படி உப்பு நீராகத்தான் இருக்கும். அதுபோலதான் திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட விஷ்ணுவும் திருசிற்றம்பலத்தில் நடனமிடும் ஈசனும் ஒன்றாகவே நம் உள்ளத்தில் அமர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளுங்கள். எருதாகிய நந்தியில் ஏறும் ஈசனையும், சக்ராயுதத்தை உடைய விஷ்ணுவையும் அதுதான் பெரிது, இதுதான் பெரிது என வேறுபடுத்திக் கூறுபவர்கள் மெய்ப்பொருளை அறியமாட்டாது கொடுமையான நரகக் குழியில் வீழ்வார்கள்.

மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா. http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக மலர வாழ்த்துக்கள்.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!