Search This Blog

Aug 17, 2011

மூச்சுப் பயிற்சி, தியானமும் மற்றும் யோகாசனமும்.


  
மூச்சுப் பயிற்சி-பிரணாயாமம் 
Pranayama. 
Assuming Padma posture, one should practice  Pranayama.  Closing the right nostril with right thumb, gradually draw in the air through the left nostril. Having restrained it as long as possible, again expel it through the right nostril slowly and not very fast. Then filling the stomach through the right nostril, retain it as long as he can and then expel it through the left nostril. 

Drawing the air through that nostril by which expelled, continue this in uninterrupted succession. The time taken in making a round of the knee with the palm of the hand, neither very slowly nor vary rapidly and snapping the fingers once is called a Matra. Drawing the air through the left nostril for about sixteen Matras and having retained it (within) for about sixty-four Matras, one should expel it again through the right nostril for about thirty-two Matras. 

Again fill the right nostril as before (and continue the rest). Practise cessation of breath four times daily (viz.,) at sunrise, noon, sunset and midnight, till eighty (times are reached). By a continual practice for about three months, the purification of the Nadis takes place. When the Nadis have become purified, certain external signs appear on the body of the Yogi.
************************************************************************
பிரணாயாமம்:
இதனை(மூச்சுப் பயிற்சி) பயிலும் ஒருவர், பத்மாசனத்தில் அமர்ந்து, வலது நாசித்துவாரத்தை இடது கை மோதிர விரலால் மூடி, இடது நாசித்துவரத்தின் வழியாக சீராக மூச்சினை உள்ளிழுக்கவேண்டும். அவ்வாறு உள்ளிழுத்த சுவாசக் காற்றினை எவ்வளவு நேரம் நெஞ்சினுள் நிறுத்த முடியுமோ, அவ்வளவு நேரம் நிறுத்திய பின்னர் இடது கை கட்டை விரலால் இடது நாசிதுவாரத்தை மூடிக் கொண்டு, வலது நாசித் துவாரத்தின் வழியாக மெதுவாகும், ஒரே சீராகவும் வெளியிடுதல் வேண்டும். பின்னர் இடது நாசிதுவாரத்தை மூடி வலது நாசி துவாரத்தின் வழியே சீராக மூச்சினை உள்ளிழுத்து, நிலை நிறுத்திய பின்னர், வலது நாசி துவாரத்தின் வழியே சீராக மூச்சினை வெளியிட வேண்டும். இவ்வாறு செய்வது ஒரு சுழற்சியாகும்.

இவ்வாறு இடது நாசி வழியாக உள்ளிழுக்கும் சுவாசம் பதினாறு மத்திரைகால அளவும், உள் நிலை நிறுத்தும் கால அளவு அறுபத்தி நான்கு மாத்திரை கால அளவும், வலது நாசிவழியாக வெளிவிடும் சுவாசகால அளவு முப்பத்திரெண்டு மாத்திரை கால அளவும் இருக்க வேண்டும். இதனைபோலவே வலது நாசி துவாரத்தில் ஆரம்பித்து இடது நாசி துவாரத்தில் வெளியிட வேண்டும், மீண்டும் சுழற்சியினை தொடரவேண்டும்.

இவ்விதம் மூச்சுப் பயிற்சி ஒரு நாளில் நான்கு முறை சூரியஉதயம், மதியம், சூரிய அஸ்தமனம், நடு இரவு ஆக என்பது எண்ணிக்கை வரையில் செய்யவேண்டும். தொடர் பயிற்சியின் விளைவாக மூன்று மாதங்களில் நாடி சுத்தி நடைபெற ஆரம்பிக்கும். இவ்வாறு நாடி சுத்தம் அடைந்தால் யோகம் செய்பவரின் உடலின் தோற்றத்தினில் மாறுதல்கள் ஏற்படத் துவங்கும்.

அன்பு நண்பர்களே!! ஆழ்மனத்தின் அற்புதசக்திகள் என்னும் தலைப்பின்கீழ் வரும் இந்த தியானம் மற்றும் யோகா பதிவுகளை தனியாக ஒரு உப தலைப்பின் கீழ் தொகுத்துள்ளேன். தியானம் மற்றும் யோகா பதிவுகளை மட்டும் விரும்பும் அன்பர்கள் தனியே காணவேண்டியே இந்த பதிவு, இறுதியில் மீண்டும் நாம் ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் தலைப்பில் இணைந்து கொள்வோம். 

மீண்டும் சந்திப்போம் அன்பு நட்புக்களே.. பல பயனுள்ள பதிவுகளுடன்.. அன்புடன் கே எம் தர்மா....

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!