இந்த எலிக்கு பசி கொஞ்சம் அதிகம் தான்!
சிறுத்தைகள் (Leopard) பற்றிய ஆராய்ச்சிக்காக, கசேய் குட்டெரிச் (Casey Gutteridge) எனும் மாணவர் ஒருவர் இங்கிலாந்தின் Hertfordshire பல்கலைக்கழக விலங்குகள் சரணாலயத்திற்கு சென்றார்.ஒரு எலி, சிறுத்தைக்கு முன் நின்று இறைச்சித்துண்டு ஒன்றை நுகர்ந்து கொண்டிருப்பதை தற்செயலாக அவதானித்தார்! 'சிறுத்தையை அது கவனிக்கவே இல்லை!' என்றவர், சட்டென தனது கமெராவுக்குள் இந்த காட்சியை பதிவு செய்துள்ளார். எலியின் செயல் இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய போதும், சிறிது நேரத்தில் இன்னுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதையும் அவர் எடுத்த புகைப்படத்தில் பாருங்களேன்!
எலியை அங்கிருந்து மெதுவாக அகற்றி தன் உணவை எடுக்க சிறுத்தை எவ்வளவு முயற்சி செய்தும் எலி அசையவே இல்லையாம்!பாவம் சிறுத்தை! எலி சாப்பிட்டு முடிக்கும் வரை பொருத்திருந்ததுதான் மிச்சம்! பெண் சிறுத்தையாம், ஷீனா என்பது அதன் பெயர்! பிறந்து நான்கு மாதத்தில் இந்த வனவிலங்கு சரணாலயத்திற்கு எடுத்து வந்துவிட்டார்களாம். ரொம்ப அப்பாவித்தனமான ஆனால் நல்ல சிறுத்தையென சிரித்துக்கொண்டு கூறுகிறார் கசேய்! இந்தக் காட்சியை படமாக்கிய அவருக்கு நன்றி கூறி அதன் உரிமையை வாங்கியிருக்கிறது குறித்த பல்கலைக்கழகம்!
'உங்கள் அனுமதியில்லாமல் யாராலும் உங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது'.....
எலியின் செயல் ஒரு அழகான அர்த்தத்தை சொல்லிச் செல்கிறது!அன்புடன் கே எம் தர்மா...

No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!