சித்தர் சிவவாக்கியர்
திருமழிசையாழ்வார்
சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்:
ஈசன் ஆணையின் வண்ணம் சட்டை முனி நாத சித்தர்
" ஸ்ரீ இராமானுஜராகவும்", சித்தர் சிவவாக்கிய "ஸ்ரீ திருமழிசை ஆழ்வாராகவும்" மீண்டும் இப்பூமியில் அவதரித்தனர்.
ஆழ்வாரிடம் பெருமதிப்பும், மெயபக்தியும் கொண்ட ஒரு வயதுமுதிர்ந்த மூதாட்டிக்கு, மாறாத இளமையும், பேரழகும் கிடைக்க வரம்கொடுத்தார். அவளின் அழகில் மயங்கிய அந்நாட்டு அரசன் பல்லவராயன் அவளை பட்டத்து ராணியாக்கி கொண்டான். தனக்கு மூப்பு ஏறும்பொழுது, தனது மனைவிக்கு என்றும் மாறாத இளமையும், அழகையும் கண்டு வினவ, திருமழிசையாழ்வாரின் வரமகிமையைக் கூறினாள். தனக்கும் அவ்வித வரம் வேண்டும் என்று கணிகண்ணன் மூலம் விண்ணப்பிக்க, தனது குருநாதர் அவ்விதம் செய்ய மாட்டார் என்று கணிகண்ணன் கூறினார். கோபம் கொண்ட மன்னன், கனிகண்ணனை நாடு கடத்த, அதனால் கோபம் கொண்ட திருமழிசை பிரான்,
"கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ண நீ கிடக்க வேண்டா
துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றேன்
நீயுமுன்றன் பை நாகப்பாய் சுருட்டிக் கொள்"
என்று பாடிவேண்டி திருவெக்காவில் கோயில் கொண்டிருந்த பெருமானையும் தனது சீடரையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஊருக்கு சென்றார்.
இவ்விதம் விஷ்ணுவும், உடன் லக்ஷிமிதேவியும் அவ்வூரை விட்டகன்றதால் நகர் எல்லா பொலிவும் இழந்து பெருந்துன்பங்கள் சூழ்ந்து மன்னனும் மக்களும் துன்புற்று வருந்தினர். இதன் காரணத்தை அறிந்து, திருமழிசையாழ்வாரிடம் தண்டனிட்டு மன்னிக்குமாறும், நாடு திரும்பவும் வேண்டுமென மன்னனும், அமைச்சர் பெருமக்களும் வேண்டிக் கொண்டதனால், திருமழிசைபிரான், தான் முன்னமே பாடிய பாடலை சிறிது மாற்றி
"கணிகண்ணன் போகொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ண நீ கிடக்க! வேண்டும்
துணிவுடைய செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன்
நீயுமுன்றன் பை நாகப்பாய் படுத்துக் கொள்"
எனப் பாடி வேண்ட, பெருமாளும், குருவும் உடன் வர கணிகண்ணன் கச்சியம்பதி திரும்பினான். நகர் தனது பழைய நிலையையும் பொலிவையும் பெற்றுத் திகழ்தது. இந்த வரலாறு காரனமாகவ் இவ்வூர் கோயில் கொண்ட திருமாலுக்கு "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்ற பெயர் வழங்கலாயிற்று இவர்கள் சென்று தங்கிய ஊரும் "ஓரிரவிருக்கை" என்று அழைக்கப் படுகின்றது.
ஒருசமயம் கும்பகோணத்தை அடுத்த பெரும்புலியூரில் வேத விற்பன்னர்கள்(அந்தணர்கள்) வேதம் ஓதிக் கொண்டிருந்த ஒரு இல்லத்தின் வெளித்திண்ணையில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்த சமயம், உள்ளிருந்து வந்த வேத விற்பன்னர்கள், அமர்ந்திருந்தது திருமழிசை ஆழ்வார் என்று அறியாமல் அவர் கேட்டுவிடக் கூடாது என்று வேதம் ஓதுவதை நிறுத்திவிட்டு அவரை ஏளனமாக பேசினார். அதனால் வருத்தமுற்ற திருமழிசையாழ்வார் அங்கிருந்து அகன்றார். அவர் சென்ற பின்பு வேதம் ஓத முயன்றனர். ஆனால் எந்த இடத்தில் அவர்கள் நிறுத்தினார்கள் என்பது ஞாபகத்திற்கு வரவில்லை. அதன் பிறகுதான் ஆழ்வாரை தூஷணம் செய்ததால்தான் இவ்வாறு ஆயிற்று எனக் கண்டு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். ஆழ்வாரும் அவர்களை மன்னித்து, அங்கிருந்த கருப்பு நெல்லை தனது நகத்தால் கீறியபடி, "க்ருஷ்ணாநாம் வ்ரிஹீநாம் நக நிர்ப்பிந்தம்" என்று வேதத்தில் விட்ட இடத்தை நினைப்பூட்டினார்.
அவ்வூரில் யாகங்கள் செய்து வாழ்ந்திருந்த பெரும்புலியுரடிகள் என்பவர் ஆழ்வாரின் சிறப்புக்களை அறிந்துகொண்டு, ஆழ்வார் செல்லும் பக்கமெல்லாம் அவ்வூர் கோயில் கொண்ட பெருமாள் திரும்புவதை கேள்வியுற்று ஆழ்வாரின் சீடரானார். தனது யாகத்தின் முதற்பூசையை தனது குருநாதருக்கு வழங்குவதை அவ்வூர் மக்கள் கேலி செய்வதை ஆழ்வாரிடம் கூறி, அவரின் உண்மை சொருபத்தைக் காட்டி அவர்களைத் திருத்தும்படி கேட்டார். பக்திசாரரான திருமழிசை ஆழ்வாரும்,
"அக்கரங் களக்கரங்களென்று மாவ தென் கொலோ
இக்குறும்பை நீக்கிஎன்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரங் கொள் கையனே சடங்கர் வாயடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே"
என்று பெருமாளை வேண்டி பாட, ஆழ்வார் உடம்பிலேயே திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில், தனது தேவிமார்களுடன், திருமால் காட்சி தந்தனன். மறுத்துப் பேசியவர்களும் ஏளனம் செய்தவர்களும் இக்காட்சியை கண்டு மனம் தெளிந்து திருந்தி ஆழ்வாரின் அடி பணிந்து வணங்கி அடியவர்கள் ஆயினர்.
ஜீவ சமாதி:
சிறிது காலத்திற்கு பின் கும்பகோணம் (திருக்குடந்தையை ) அடைந்து பெருமாளை சேவித்து வணங்கினார். பெருமாளை வேண்டி, "நடந்த கால்கள் நொந்தனவோ, கிடந்தவாறேழுந்து பேசு" என்று பாட சிலையுருவின் வரம்பு கடந்து அப்பெருமாள் எழ அப்பெருமாளின் எழிலுக்கு தீங்கு நேரா வண்ணம் "ஆழ்வார் வாழிகேசனே" என்று பாடி முடித்து மங்களாசாசனம் செய்து வைத்தார். அப்போழுதிருந்த படியே அப்பெருமானும் அப்படியே எழுந்தவண்ணம் நிலைத்து அருள் வழங்கி வருகின்றார். திருமழிசைப்பிரான் ஆழ்வாரும் நாலாயிரத்தேழு நூற்றாண்டுகள் பக்தியையும், ஞானத்தையும் வளர்த்து வைணவத்தை பரப்பி வாழ்ந்து கும்பகோணத்திலேயே ஜீவசாமாதி ஆகி மறைந்தார். இவருடைய ஜீவ சாமாதி கும்பகோணத்தில் கும்பேஸ்வரன் கோயிலுக்கு அருகில் உள்ள சாத்தார தெருவில் இருக்கின்றது.
சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்:(இருவரும் ஒன்றே-அரியும், சிவனும் ஒன்றே!!! )
இவர் சித்தராக இருந்தபோது இயற்றி பாடிய நூல் சிவவாக்கியம். இவர் சித்தராக maara குருவாக வந்தது ஸ்ரீ விஷ்ணுவே என்பதை உணர்ந்துகொண்டு அக்குரு சேவைக்காக ஈசன் ஆணையின் வண்ணம் திருமழிசை ஆழ்வாராக அவதரித்தார். "இறைவன் புத்தியைத் தருவான் ஆனால் பக்தியைத் தாரான்", என்ற வேத வாக்கியத்தை உணர்ந்து பக்தியை முழுவதும் அனுபவித்து தானே உணரவும் பக்தியை பரப்பவும் பக்திசாராராக ஞானம் வளர்ந்தார். திருமழிசை ஆழ்வாராக வைராக்கிய பக்தியை கடைப்பிடித்து வாழ்ந்து திருமாலின் அருளால் நான்முகன் அந்தாதி, திருச்சந்த விருத்தம் என்ற நூல்களை இயற்றினார், எண்ணற்ற சித்தாடல்களை செய்து காட்டினார்.ஆழ்வாரின் பாடல்கள் வைணவர்களின் தோத்திர நூலாகிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சேர்க்கப் பட்டுள்ளது, ஆனால் சிவத்தையும், பஞ்சாட்சரத்தையும் சிவாயமாக்கி சிவவாக்கியர் பாடிய "சிவவாக்கியம்" இவரை நாத்திகராக விமர்சித்த சிலரின் திட்டமிட்ட சதியால் சைவத்தின் திருமறையில் சேர்க்கப்படாது நிராகரிக்கப்பட்டு இச்சித்தரின் பாடல் இடம்பெறாமல் போனது.
"சிவவாக்கியம்" என்ற தலைப்பின் கீழ் இச்சித்தரின் 550 பாடல்களும் விளக்கங்களும் பதிவு செய்யப்படும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்...அன்புடன் கே எம் தர்மா..
http://nayanmargal.blogspot.com/
ReplyDeletehttp://alwargal.blogspot.com/
ஆழ்வார்களையும், நாயன்மார்களையும், வைஷ்ணவத்தையும் மேலும் அறிய மேலே கண்ட இணைப்பினை உபயோகிக்கவும்.
நன்றி. கே எம் தர்மா..