Search This Blog

Jul 12, 2011

ஆன்மீகத்திற்கு குரு அவசியமா?


குருவருள் இருந்தால் தான் திருவருள் கிடைக்கும் என்று சொல்வார்கள் !!!! அது உண்மையா

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறார்கள். தாய்  ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து, செத்துப் பிழைத்து குழந்தையை பெற்றுபாலூட்டி, சீராட்டி, , எறும்பு கடிக்காமல், நல்ல உணவு ஊட்டி அன்போடு வளர்க்கிறாள். தந்தை அக்குழந்தைக்கு பாதுகாப்பாய் இருந்துஅறிவு புகட்டி வளர்க்கின்றார். அடுத்தது குருவானவர் அக்குழந்தைக்கு ஏற்ற சகல கல்வியையும், கலைகளையும் கற்று தருகிறார். குழந்தையின் ஆன்ம வளர்ச்சியை பொறுத்து அவனுக்கு தெய்வத்தை அடையும் வழியையும் காட்டுகின்றார்.(இது அந்த காலத்துல). இந்த காலத்தில் ஒவ்வொரு கல்விக்கும் அல்லது  பாடத்திற்கும் ஒரு குரு. அந்த காலத்தில் அ ஆ கற்று கொடுத்த குருவே ஆன்மீக குருவாக இருந்திருக்கலாம் ஆனால் இந்த காலத்தில் இதற்கு என்று தனியாக ஒரு குரு தேவைப்படுகிறார்.

அன்று பெரும்பாலானோர் ஒன்றிரண்டு குருக்களுக்கு மேல் தாண்டாமல் ஆண்டவனை அடையும் பாதையில் சென்றார்கள்.  இன்றோ தொழில் நுட்ப  வளர்ச்சியாலும், ஆன்மிகம் சம்பந்தமான நூல்கள் சுலபமாக கிடைப்பதாலும் ஒருவன் குரு இல்லாமலே ஆன்மீகத்தில் நுழைந்து விடுகிறான். பல புத்தகங்கள் படித்து தானாகவே யோகம் செய்தாலும் அனைவராலும் ஆன்மீகத்தில் தொடர்ந்து பயணிக்க முடியுமா என்று சொல்ல முடியாது. இதுவே ஒரு நல்ல ஆன்மீக குரு மூலம் காற்றுக்கொண்டால் அவருடன் சேர்ந்தே பிறவிப் பெருங்கடலை சுலபமாக கடந்து விடலாம். ஆனால் எல்லோருக்குமே நல்ல குரு அமையும் பாக்கியம்  கிடைப்பதில்லை.

  ஜோதிட ரீதியாக பார்க்கையில் ஒன்பதாம் வீடு குருவைக் காட்டுகின்றது. யாருக்கு  ஒன்பதாம் வீடும், சொந்தக்காரனும் நன்றாக உள்ளனரோ அவர்களுக்கு நல்ல குரு கிடைக்க வாய்ப்புகள் மிக அதிகம் இந்த குரு ஆன்மீக குருவாக இருப்பார் என்று அறுதியிட்டு கூற  முடியாது.இந்த ஒன்பதாம் வீடு மற்றும் அதிபதிக்கும் யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும்? பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள  , குரு, கேது, ஐந்தாம் வீடு மற்றும் புட்டபர்த்தி  சாய் பாபா ஏன்  சந்நியாசி ஆனார் ? என்ற பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள லக்னம்,லக்னாதிபதி இவர்களுக்குள் நல்ல தொடர்பு இருந்தால்  "அந்த ஒன்பதாம் வீட்டு  குரு"  ஒரு  நல்ல ஆன்மீக குருவாக வாய்ப்புகள் மிக மிக அதிகம். என்னைப்பொருத்த வரை(இன்றைய நிலையில்) ஐந்தாம் வீடு அதன் அதிபதி,கேது, குரு இவர்களே  ஒருவனுக்கு தியானம் அல்லது குண்டலினி மூலம் ஆன்மீக முன்னேற்றத்தை அளிக்கவள்ளவர்கள்.  ஒன்பதாம் வீட்டு குரு இவர்களுடன் சம்பந்தம் கொள்ளவில்லை எனில் அவர் வெறும்  சமயம்  அல்லது - மற்றும் ஆன்ம கோட்பாட்டினை எடுத்துரைக்கும் குருவாக மட்டுமே அமைந்துவிட வாய்புகள் உண்டு. மகர கடகத்தில் கேது ராகு இருந்தாலும் ஒருவன் குரு இல்லாமலே ஆன்மீகத்தில் பயணம் செய்வான் என்றும்  படித்ததுண்டு. இதுவும் உண்மையாகவே தெரிகிறது. 
 
                                              
ஆன்மீக குரு கிடைக்காததும் ஒரு விதத்தில் நல்லதே. (ஒரு சிலருக்கு மட்டுமே இது பொருந்தும்). யாருக்கு ஆன்மீக குரு கிடப்பதில்லையோ அவர்களே புவியில் பலரது ஆன்ம எழுச்சிக்கு காரணமாய் இருந்திருக்கிறார்கள்.                                                 உதாரனத்திற்க்கு வள்ளலார் மற்றும் புத்தர். இவர்களுக்கு நல்ல குரு கிடைத்திருந்தால் அவர்கள் மட்டுமே ஆன்ம எழுச்சி அடைந்திருப்பார். கிடைக்காத காரணத்தினாலே  தான் அவர்கள் பலரது ஆன்ம எழுச்சிக்கு காரணமாய் இருந்திருக்கிறார்கள்.   ஆதலால்  ஆன்மீக குருவை தேடிக் கொண்டு இருக்காதீர்கள். 
                               உங்கள் கண்ணுக்கு பட்டால் அவர் வழியில் செல்லுங்கள் "விழிப்புணர்வுடன்". இது மிக சுலபமான பாதை. (நல்ல பாதையாக மற்றும் நல்ல குருவாக  இருப்பின்).ஆன்மீக குரு கிடைக்க வில்லையா. நல்லது...நாளை நீங்கள் பலருக்கு வழிகாட்டி யாக இருக்கலாம்...சுயமாக முயன்று பாருங்கள். இது மிகவும் கடினமான பதை. குருவின் மூலமோ அல்லது இல்லாமலோ முயன்று பாருங்கள், முக்தி அடையுங்கள். (குறிப்பு: இப்பதிவில் உள்ளது யாவும் என் மனதில் இருத்திய கருத்துக்களே ஆகையால் "எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும்" எனத் தொடங்கும் குறளை மனதில் வையுங்கள்)   


இக்கருத்தை நமது திருமூலர் ஆதி காலத்திலேயே சொல்லிட்டு போயிட்டார் ,

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.

-
திருமந்திரம் (10.6.105)
சிவயசிவ

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!