Search This Blog

Jul 30, 2011

மக்கள் விலை போகிறார்கள் சிந்தியுங்கள்?


மக்கள் விலை போகிறார்கள் சிந்தியுங்கள்?

எனது மதிப்பிருக்கும், மரியாதைக்கும் உரிய எனது குருஜியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த விளக்கம் என்னை மிகவும் சிந்திக்க வைத்துவிட்டது. இதனை எனது நட்புக்களும் காண வேண்டியே இந்த பதிவு. அன்புடன் கே எம் தர்மா....

??: மதிப்பிற்குரிய குருஜி அவர்களே
நான் 'உஜிலாதேவி'இணையதள பத்திரிக்கையை நாள் தவறாமல் படிக்கிறேன்.நான் இதுவரை படிக்காத,அறிந்திராத பற்பல விசயங்களை அறிந்துகொள்ள முடிகிறது.இதில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் என்னவென்றால், கருத்து சுதந்திரம். நான் பல பத்திரிகைகளில் செய்திகளைப் படித்தபின்னர் என் கருத்தினை பதிவு செய்வேன்.ஆனால் அவர்களுக்கு ஏற்றமாதிரி நாம் எழுதினால் தான் பிரசுகரிப்பார்கள். இல்லையென்றால் வராது. உதாரணமாக 'தமிழ் வெளி' இணைய தளபத்திரிக்கைக்கு கம்யூனிஸ்ட் கட்சி , அல்லது திக வுக்கு சாதகமாக நான் எழுதினால்தான் அதில் வரும். தினகரன், குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளில் கூட எழுதி இருக்கின்றேன். அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்கு சாதகமாக எழுதினால்தான் பத்திரிக்கையில் வரும். இல்லை யென்றால் வராது. 

கட்சி சார்பற்ற பத்திரிக்கையாக நான் கருதும் தினமணி, ,தினமலர் பத்திரிகைகளில் கூட அவர்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் உஜிலாதேவியில் அப்படியல்ல. உங்கள் கட்டுரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதினாலும் வெளியிடுகிறீர்கள். இதில், மாற்று மதத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் உங்கள் கட்டுரைகளை தாக்கி எடக்கு மடக்காக கருத்துகளை தெரிவிக்கிறார்கள்.அவற்றை எந்தவிதத்திலும் தணிக்கை செய்யாமல் வெளியிடுகின்றீர்கள். உங்கள் துணிச்சல் வியப்பைத் தருகின்றது. இதனால் என்ன தான்  இருக்க முடியும் என்பதையும் வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது.  வாழ்க உங்கள் கருத்து சுதந்திரம். உங்கள் பணி தொடரட்டும்
jairamesh என்ற ஒரு வாசகர் எழுதியிருந்தார்

னது கருத்துதான் சரி தான் சொல்வதுதான் உண்மை தான் செல்லும் பாதை தான் நேர்மையானது என எந்த மனிதனும் நினைத்து கொள்ளலாம் நம்பிக்கையும் வைக்கலாம், ஆனால் தனது கருத்தைத்தவிர மற்றவர்கள் கருத்துக்கள் அனைத்துமே தவறுதலானது  நான் அதை கண்கொண்டும் பார்க்கமாட்டேன் காது கொடுத்து கேட்கமாட்டேன் என்பது சர்வதிகாரதனம் மட்டும் அல்ல தன்னை தானே குறுக்கி கொள்ளும் இயல்பாகும்.
 

அதனால் கருத்து சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானது இந்த உலகமே சுதந்திரமான நல்ல கருத்துக்களால் தான் இயங்கி கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன்.  மேலும் ஒரு விஷயத்தை பொதுவில் எடுத்து வைக்கும் போது அதை பற்றி நாலாவிதமான கருத்துக்கள் வந்து குவிவது இயற்கையானது. அப்படி வந்தால் தான் வைக்கப்பட்டிருக்கும் விஷயம் சக்கையானதா சாரம் மிகுந்ததா என்பது தெரியவரும்.  ஆனால் நிறைய பேர் தற்போது தங்களுக்கு சாதகமானவற்றயே விரும்புகிறார்கள் பாதகமானவைகளை வெறுத்து ஒதுக்குகிறார்கள்.

 
இந்த நிலையால் தான் பல சச்சரவுகள் நாட்டில் ஏற்படுகிறது. வாதம் செய்வதிலும் கருத்துக்களை முன் வைப்பதிலும் சில சிக்கல்கள் இருப்பதை மறுக்க இயலாது. சிலர் எதை எடுத்தாலும் குறை சொல்வதையே தங்களது வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு ஆயிரம் நல்ல விஷயங்கள் இருந்தாலும் அது கண்ணில் படவே படாது எதாவது சின்னஞ்சிறிய குறைபாடுகள் இருந்தால் அது மலை போல தென்படும்.
 

அதை எடுத்து வைத்து கொண்டு நாள் கணக்காக பேசி கொண்டு திரிவார்கள் இதனால் நடக்க வேண்டிய வேலைகள் பல தடைப்படும். இன்னும் சிலர் தங்களது மேதாவி தனத்தை, காட்டுவதற்காகவே விமர்சனம் செய்வார்கள் இவர்கள் எல்லோருமே குறை காணுவதில் சூர புலிகளே தவிர குறைகளை நிறையாக்குவது எப்படி என்று  எள் முனை அளவுக்கு கூட சொல்ல மாட்டார்கள்

காரணம் அவர்களால் எதற்கும் தீர்வு காண முடியாது. அதனால் தான் ஒன்றை பற்றி வருகின்ற எல்லாவிதமான கருத்துக்களையும் சுதந்திரமாக அனுமதித்து விடுவது அதில் தக்கது எது தகாதது எது என்று படிப்பவர்கள் சிந்தித்து முடிவெடுத்து கொள்ளலாம் என விட்டு விடுகிறோம்.  மேலும் சிலர் எனது பதிவுகள் பிரச்சனைகளை கிளறி விடுவதாகவும் வாசகர்களை வீணாக மோத விடுவதாகவும் குறை சொல்கிறார்கள்.

 
ஆனால் உண்மையில் நான் எதையும் கிளறி விடுபவன் அல்ல முன்பே உள்ள பல சிக்கல்களை தீர்க்கப்படாத பல விஷயங்களை மக்களின் முன் தூசு தட்டி வைக்கிறேன். அது ஏன் என்றால் அவைகள் அப்படியே ஆழமாக புதைக்கப் பட்டு கிடந்தால் நாளை பூதாகரமாக பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பதனால் தான். அதை இப்போதே சரி செய்து விட்டால் நிலைமை சகஜமாகி விடும் அல்லவா.

 ???:ன்பு நண்பருக்கு வணக்கம்
நீங்கள் எழுதிய கட்டுரையை படித்து அதில் சில உண்மைகளும் இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன். கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் என்பது உண்மை ஆனால் ஏன் ஒரு இந்து மதத்தை சார்ந்தவர் மதம் மாறுகிறார் என சிந்தித்தீர்களா கிறிஸ்தவர்களுக்கு தங்கள் மதத்தை பரப்ப வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது (பணத்திற்காகவோ அல்லது இறைவனுக்காகவோ) எதுவாக இருக்கட்டும். ஏன் இந்து மத சகோதர சகோதரிகளுக்கு தங்கள் மதத்தின் மீது ஆர்வமோ பற்றோ இல்லாமல் ஒருவர் பணம் தருகிறார் என தங்கள் மத்ததையே மாற்றுகிறார்கள் என தெரியவில்லையே.

ஒருவர் பணம் தருகிறார் என்றால் தங்கள் அம்மாவை வேலைகாரி என யாராவது சொல்வார்களா? சிந்தியுங்கள். அப்படியானால் உங்கள் மதத்தில் ஏதோ குறையுள்ளது அல்லது மதத்தைப்பற்றி எடுத்துக் கூறுவோர்மீது ஏதோ குறையுள்ளது என்றுதானே அர்த்தம். உங்கள் மத்தையும் மத்தில் உள்ளவர்களையும் சரி செய்வதை விட்டுவிட்டு மதம் மாற்று கிறார்கள் சட்டம்  கொண்டு வாருங்கள் என கூறுவது சரியாக படவில்லையே. யார் வேண்டு மானாலும் மதம் மாற்றிக் கொள்ளலாம் என்ற அளவிற்கு ஏன் உங்கள் மக்கள் விலை போகிறார்கள் சிந்தியுங்கள்? அமலா என்ற ஒரு வாசகி எழுதியிருந்தார்.

ன்று உலக மக்கள் தொகையில் மிக அதிகமாக இருபது கிறிஸ்தவர்களே.  இவர்களில் எத்தனை பேருக்கு கிறிஸ்தவ மதத்தின் தத்துவம் தெரியும். அப்படி தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  பொதுவாக மனிதனுக்கு மதம் என்பது தனது தீராதகுறைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் மனக் குறைகளை கடவுளிடம் பிராத்தனை மூலம் வெளிப் படுத்தவுமே உதவுகிறது. இன்று முதல் யாரும் கடவுளிடம் குறைகளை சொல்லக் கூடாது என்ற ஒரு நிலை வருமேயானால் ஒருவன் கூட கோவிலுக்கு போக மாட்டான் கடவுள் இருக்கும் பக்கமே தலை வைத்துகூட படுக்க மாட்டான்.

 
மனிதன் தனது பிரச்சனைகளுக்கு எதாவது ஒரு வழியை தேடியே அலைந்து கொண்டு இருக்கிறான். உள்ளதை உள்ளவாறு சொல்வதென்றால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்றே ஆண்டியும் அரசனும் இருக்கிறார்கள்.  இந்த மனோ நிலையை மத பரப்புரையாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

 
நான் அறிந்த வரை தமிழகத்தில் மத மாற்றம் என்பது எழுபது விழுக்காடு நோய்களை தீர்க்கிறேன் பேய்களை ஓட்டுகிறேன் என்பதற்காகவே நடை பெறுகிறது. கடவுள் அருளாலோ மருந்தின் பயனாலோ நோய் குணமானால் கூட நீ என் மதத்திற்கு அல்லது மத வழிப்பாட்டிற்கு வந்ததால் தான் நன்மை நடந்தது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

எனவே மதமாற்றம் என்பது மன பலவீனத்தை ஆதாரமாக கொண்டு நடக்கிறதே தவிர மத பலவீனத்தை அடிப்படையாக கொண்டு நடை பெற வில்லை. ஒருவன் மூளை சலவையின் மூலம் மனமாற்றம் பெற்ற பிறகு நீ எடுத்த முடிவு சரியானது தான் என்னென்றால் உன் மதத்தில் இத்தனை குறைப்பாடுகள் உள்ளது என போலி சமாதானத்தை நிலை நாட்டவே மதங்களை விமர்சிக்கிறார்கள்

இந்த கலையை நன்றாக கற்று தேர்ந்தவர்கள் கிறிஸ்தவர்கள் எனவேதான் இதை ஓரு தொழிலாகவே செய்கிறார்கள். மத மாறிய ஒருவராவது நான் முன்பு இருந்த மதத்தில் இந்த தத்துவம் குற்றமாக இருந்தது அதனால் தான் நான் மாறினேன் என்று சொல்வதே கிடையாது.தத்துவ வழியில் யாரையும் மத மாற்றி விட முடியாது தத்துவத்தால் மத மாறி ஒருவர் வாழ நிலைத்தால் அது மத மாற்றம் அல்ல மன மாற்றமாகும்.

அந்த மன மாற்றம் தானாக நடக்க வேண்டுமே தவிர தடியால் அடித்து நடக்க கூடாது நடக்கவும் முடியாது. அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் மத மாற்றங்கள் நிச்சயம் மோசடி என்றே சொல்ல வேண்டும். கிறிஸ்தவ வரலாற்றில் இந்த மாதிரி மோசடிகளாலும் சதிகளாலும் அரசியல் போட்டிகளாலும் அந்த மதம் வளர்ந்ததாக தெரிகிறதே தவிர ஆரோக்கிய மான தத்துவங்களால் அது மக்களை ஈர்த்ததாக சொல்ல முடியாது.

காரணம் சாங்கியம் வைசேடிகம் மீமாம்சம் போன்ற இந்து மத இறை தத்துவ கட்டுமானங்கள் போல் கிறிஸ்தவத்தில் எதுவும் கிடையாது. இதை செய் அதை செய்யதே என்ற உபதேசங்கள் தான் உள்ளதே தவிர கடவுளை உணர்ந்து கொள்ளும் ஆத்ம தத்துவவியல் என்பதை கிறிஸ்தவ மத அறிஞர்கள் நினைத்து கூட பார்த்தது இல்லை. உபதேசங்கள் செய்வது மிக எளிது தத்துவ விசாரங்களை ஆதார பூர்வமாக நிருபித்து மனித மனதை செப்பனிடுவது எதுவும் மேற்கத்திய மதங்கள் எதிலும் கிடையாது. ஏன் என்றால் மேல் நாட்டார் வெளி உலகை ஆராய்ந்த போது கீழ் நாட்டார் அதாவது பாரத புத்திரர்கள் அகத்தை ஆத்மாவை ஆராய்வதில் ஈடுப்பட்டு இருந்தனர்

அதனால் தான் தத்துவம் என்பது இந்தியாவின் பரம்பரை சொத்தாக இன்றும் இருக்கிறது. இந்த கேள்வியின் சாராம்சம் ஒருவன் உன்னை கொலை செய்ய வந்தால் நீ ஏன் உயிரை விடுகிறாய் கத்தியால் குத்தினாலும் உயிர் பிரியாத அளவிற்கு உன்னை ஏன் திடகாத்திரமாக வைத்து கொள்ளவில்லை என்று கேட்பது போல் உள்ளது.
நன்றி:'உஜிலாதேவி'இணையதள பத்திரிக்கை

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!