ஆலங்குடி (Alangudi)..............................:குரு (வியாழன்)......Guru / Jupiter....
திங்களூர் (Thingalur)............................. :சந்திரன் ...................Chandiran / Moon
திருநாகேஸ்வரம்(Thirunageswaram):ராகு ............................Ragu / Raagu
சூரியனார் கோயில் (Suryanar Koil).........:சூரியன்.......................Sooriyan / Sun
கஞ்சனூர்(Kanchanoor)...........................:சுக்கிரன்(வெள்ளி)..Sukiran / Venus
வைதீஸ்வரன் கோயில்(Vaitheeswrankoil).. :செவ்வாய்.................Shevai / Mars
திருவெங்காடு(Tiruvenkaadu)........................:புதன்............................Buthan / Mercury
கீழ் பெரும்பள்ளம்(Keezhperumpallam)....:கேது............................Kethu / Kethu
திருநள்ளார்(Thirunallar).......................:சனீஸ்வரன்.............Saneswaran / Saturn
When planets move from one direction to another it brings about changes in certain people's well being and fortune. By worshiping the planets we get immense benefits. Indian Astrology believes that the planetary positions of nine planets in a Geo centric orbit determine the way a person will live, progress and exemplify ones life to others before death. Nava means nine and Graham means planet. There are nine temples located in Tamil Nadu representing each planet in the Navagraha. All nine of them are located with in a 65 km radius around our paradise resort in Kumbakonam.
Any human being experiences mixtures of happiness and sorrows, Establishments too have their ups and downs, If we know the planetary positions at the time of commencing a job or enterprise, with its help, we will be able to find out how it will take shape or how we would fare in it.If our horoscope is cast on the basis of the configuration of the planets at the time of our birth, our fortunes over the entire period of our life can be predicted.
கிரகங்கள் தாங்கள் வானவெளிச் சுற்றுப் பாதையில் பயணிக்கும் பொழுது, ஒவ்வொரு ஜீவனின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி, நல்லனவும் தீயனவும் அந்த ஜீவனுக்கு கொடுக்கின்றன. இக்கிரகங்களை நாம் வழிபடுவதினால் அளப்பரிய நன்மைகளை நாம் பெற முடிகின்றது. இந்திய ஜோதிடக் கலை, இந்த கிரகங்களின் தாக்கம் ஒவ்வொரு ஜீவராசிகளின் மீதும் அமைந்து, அதன் பலனாக ஒவ்வொரு ஜீவனும் அதன் இறுதி காலம் வரை மற்ற ஜீவன்களில் இருந்து மாறு பட்டு இருக்கவேண்டுமோ, எப்படி வாழ்கை அமையவேண்டுமோ அப்படி அமைக்கின்றது என்று முழுமையாக நம்புகின்றது. நவகிரங்கள் என்பது ஒன்பது கிரகங்களைக் குறிக்கின்றது. இந்த நவகிரங்கங்களுக்கும் தமிழ் நாட்டில் ஒன்பது கோவில்கள் அமையப் பெற்றிருக்கின்றன. இந்த ஒன்பது கோவில்களும் தமிழகத்தில் கோவில்கள் நகரம் (கோவில்களின் சொர்க்க பூமி) என்றழைக்கப்படும் கும்பகோணத்தைச் சுற்றி 65 கி.மீ.சுற்றளவில் அமைந்துள்ளது.
இன்பமும், துன்பமும் கலந்து அனுபவிக்கும் எந்த ஒரு மனித ஜீவனும், தங்களின் வாழ்கை பயணத்தில் பல விதங்களில் உயர்வு தாழ்வுகளை சந்திக்க வேண்டி வருகின்றது. ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும் பொழுதோ, அல்லது வேறு ஒரு நடவடிக்கையை ஆரம்பிக்கும் பொழுது இந்த கிரகங்களின் சஞ்சாரத்தை மனதில் கொண்டு செய்தால் நலம் பல பயக்கும் என்பதும் ஒரு கருத்தாகும். நம்முடைய ஜனன கால ஜாதக்குறிப்புக்கள், நான் பிறக்கும் பொழுது இந்த ஒன்பது கிரகங்களின் சஞ்சாரத்தை அடிப்படையாக மனதில் கொண்டு அமைக்கின்றனர். இதனைக் கொண்டே நமது வாழ்கையின் உயர்வு, தாழ்வு, வாழ்க்கையில் நாம் பெறப்போகும் நன்மை தீமைகள் வாழ்கையின் தரம் போன்றவைகளை கணக்கிடுகின்றனர்.
இந்த நவகிரகங்கள் தனிப்பட்ட ஒருவருக்கு நன்மைகளையும், தீமைகளையும் தனது வான்வெளி சஞ்சாரத்தின் பயனாக, தாக்கத்தை தருகின்றது. இவ்விதம் தீய பலன்கள் அனுபவிக்கும் பொழுது குறிப்பிட்ட கிரகங்களுக்கு, கிரக சாந்தி என்றழைக்கப்படும், ஆராதனை, பூஜை போன்றவைகளை அந்த கிரகங்களுக்கும் அவைகளின் அதிதேவதை களுக்கும், மேலே குறிப்பிட்ட நவகிரக கோவில்களில் செய்தால் அத்தீவினைகளில் இருந்து அதிவிரைவில், நாம் விடுபடமுடியும் என இந்திய ஜோதிடம் கூறுகின்றது.
Surya(சூரியன்) :
Suryanar Koil, situated 21 kms from Paradise Resort is built by King Kulothunga Chola I in the year 1100 AD. This temple is dedicated to Sun God Surya who is known as the giver of health, sucess and prosperity. Every year in mid January, the harvest festival is celebrated in thanks giving and to honour, Surya or Sun Surya is the most powerful living God - whom everyone can see, perceive and pray. Though he is visible, he also has been presented in a variety of forms. Lord of this planet is God Siva Surya resides with his wives Chaya and Suvarcha in this holy place. With Surya at the centre, temples of the other Grahas are around Surya.
நவகிரகங்களில் முதன்மையானது சூரியன். இக்கிரகத்திற்குண்டான கோவில், கி.மு.1100 -ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்கச் சோழன் என்னும் மன்னனால், கோவில்களின் சொர்க்கபூமி கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சூரியனார் கோவில் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் வாழ்க்கையில் வெற்றியையும், வளத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கும் சூரிய கடவுள் என்னும் சூரியன் கிரகத்திற்குண்டானது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மத்தியில், (தமிழ் தை மாதம் ஆரம்பம்) உழார் திருநாளாம் பொங்கல் திருநாள், இந்த சூரியகடவுளை முன்னிறுத்தியே கொண்டாடப் படுகின்றது. கண்களால் காணக்கூடிய தெய்வமாக, வணங்கக் கூடிய தெய்வமாக, சக்திவாய்ந்த தெய்வமாக மனதில் கொண்டு பல்வேறு உருவகங்களில் ஆராதிக்கப் படுகின்றார். இக்கிரகத்தின் அதி தேவதை சிவனாக கொள்ளப் படுகிறது. சூரிய பகவான் கிரகத்திற்கு சாயா மற்றும் சுவர்ச்சா என்னும் இரண்டு துணைவிகளுடன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் இந்த கிரக மணடலத்தில் பவனி வருகின்றார் என்று கொள்ளப் படுகின்றது. மேலும் சூரியனை நடுநாயகமாகக் கொண்டு மற்ற கிரகங்கள் தங்களின் இருப்பிடங்களை அமைவிடங்கலாகக் கொண்டுள்ளன.
Rahu (ராகு)
Tirunageswaram, This vast temple known for its shrine to Rahu, one of the nine celestial bodies in the Navagraha situated 8kms from Paradise Resort. A legend has it that the mythological serpents Adiseshan, Dakshan and Kaarkotakan worshipped Shiva here. Legend also has it that King Nala worshipped Shiva here as in Thirunallar. Rahu is instrumental in strengthening one's power and converting even an enemy into a friend. He is ruled by Goddess Durga. The main deity's name is Nageshwarar and Ambal's name is Girigujambikai. She is decorated as a small girl in the Mornings, as young lady in Noons and as lady in evenings.. Here Ragu resides with his wife and everyday, during Rahu kalam, when Milk is poured over Rahu idol, it miraculously changes to blue colour. People having Ragu dosha come here during Rahu kalam and perform Abishekas.
திருநாகேஸ்வரம், ராகு கிரகத்தின் புனித, பெரிய கோவில் கோவில்களின் புனித நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. புராண வரலாற்றில் இந்த ராகு பகவானின் இத்தலத்தில், ஆதிசேஷன், தக்ஷன் மற்றும் கார்கோடன் போன்ற நாகங்கள் சிவபெருமானை வழிபட்டுள்ளன என்றும், நலமஹாராஜா என்னும் மன்னனும் சிவனை இத்தலத்தில், திருனள்ளாரைப் போல வழிப்பட்டதாகவும் கூறப் படுகிறது. இந்த ராகுவே ஒருவரின் ஆற்றலை வலிமை படுத்தவும் எதிரியை நண்பனாக மாற்றவும் முக்கிய காரணகர்த்தாவாக உள்ளார். இந்த ராகுவின் அதிதேவதை துர்காதேவி ஆகும். மூலநாதரின் பெயர் நாகேஸ்வரர் மற்றும் தேவியின் பெயர் கிரிகுஜாம்பிகை ஆவார். இத்தேவியை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார். இத்தலத்தில் ராகு தனது தேவியுடன் எழுதருளுகின்றார். ராகு காலத்தில் அபிஷேகம் செய்யப்படும் பாலானது அதிசயக்க விதத்தில் நீலநிறமாக தோன்றுகின்றது. பொதுவாக ராகு தோஷமுள்ளவர்கள், இங்கு வந்து ராகு காலத்தில் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு தங்களின் தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.
Sevvai (செவ்வாய்)
Vaitheswaran Koil, With the Vaitheswaran Koil, there is a special shrine dedicated to Ankarakan or Sevvai or Mars. It is situated 55 kms from Paradise Resort. The belief is that if prayers are offered to Ankarakan, he will bestow valour, victory and strength to the person. Upon entering the temple, devotees first go the Siddamrita tank. The water is said to have curative properties for various skin ailments. There ia also a widespread belief that a visit here would remove obstacles that delay marriage. Mars is regarded as a God of martial character, red in every aspect. Even the Romans held him as their Guru. He is the Son of Earth and is ruled by Lord Subramanya. This town is also called as Pull-irukku-Veloor. Jadayu - the eagle who made a gallant attempt to stop. Ravana from proceeding to Lanka with Sita, got relieved of his wings by Ravana, fell down here and eventually got Moksha. Even today we can see the place where Jadayu was cremated - 'Jadayu Kundam'.
Vaidheeswaran koil is a crowd puller for many reasons along with the Angarakan. Vaidyanadha Swamy ( Shiva ) is believed to cure illness of the ardent devotees. Lot of people throng here everyday, offer their prayers for regaining their health with the grace of the deity. Ambal is called Valambika alias Thaiyal Nayaki. Kiruthigai is an auspicious day here with special poojas performed for Selva Muthu Kumara Swamy (Lord - Murugan ). Nayanmars, Arunagiri Nadar, kumaraguruparar, kalamega pulavar have visited this temple and sung in praise of the deity. Separate sanctorum for Angaraka is a speciality out here as you cannot find it elsewhere.
கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வைத்தீஸ்வரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது வைதீஸ்வரன் கோவில். இக்கோவிலில் அங்காரகன் என்று அழைக்கப் படும் செவ்வாய் கிரகத்திற்கு சிறப்புத்தலமான கோவில் உள்ளது. ஆங்கிலத்தில் 'மார்ஸ்' (MARS) என்று அழைக்கப் படும் இந்த செவ்வாய் கிரகம் வீரத்தையும், வலிமையையும், வெற்றியையும் வழங்கக் கூடிய தகுதி உடையவர். பக்தர்கள் கோவிலில் நுழைந்தவுடன் முதலில் சரும உபாதைகளுக்கு சிறந்த நிவாரணியாகக் கருதும் குணங்களைக் கொண்ட திருக்குலமாகிய சித்தாமிர்த குளத்தில் குளியல் செய்கின்றனர். மேலும் இத்தலத்திற்கு விஜயம் செய்து, செந்நிற, மண வாழ்க்கைக்கு ஆதாரமான செவ்வாயை ஆராதனை செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கப் பெற்று விரைவில் மணவாழ்க்கை அமைகின்றது என்பதும் ஒரு நம்பிக்கையாகும். ரோமானியர்களும் இவரைத் தங்களின் குருவாகக் கொண்டுள்ளனர். சுப்ரமணிய கடவுளின் ஆதிக்கத்தில் உள்ள செவ்வாய் பூமாதேவியின் மைந்தனாவார். இவ்விடம் புள்-இருக்கு-வேலூர் என்றும் அழைக்கப் படுகிறது. ஜடாயு என்னும் கழுகு சீதா தேவியை கடத்திச் செல்ல முயன்ற ராவணனை வீரத்துடன் தடுத்து எதிர்த்த பொழுது இராவணனால் சிறகுகள் வெட்டப்பட்டு, இத்தளத்தில் விழுந்திறந்து மோட்சகதி அடைந்ததாக இராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதும் நாம் இந்த ஜாடாயுவை தகனம் செய்த இடமான ஜடாயு குண்டத்தை நாம் காணலாம்.
இந்த வைதீஸ்வரன் கோவில் எப்பொழுதும் பக்தகோடிகள் நிரம்பி காணப் படுகின்றது. இங்கு அங்காரகன் என்னும் செவ்வாய் -உடன் வைத்தியநாத சுவாமி (சிவா) தனது துணைவி தையல் நாயகி என்கின்ற வலம்பிகையுடன் எழுந்தருளி தனதருளால் பக்த கோடிகளுக்கு ஆரோக்கியத்தினையும் வளமான வாழ்க்கையினையும் அருள் பாலிக்கின்றார். இங்குள்ள செல்வ முத்து குமார சுவாமி என்னும் முருக கடவுளுக்கு கிருத்திகையில் விசேஷ பூஜைகளும், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. நாயன்மார்கள், அருணகிரிநாதர், குமரகுருபரர், காளமேக புலவர் ஆகியோர் இங்கு வந்து பல பாடல்களால் இத்தலத்தினையும் எழுத்தருளும் தெய்வங்களையும் வாழ்த்திப் பாடியுள்ளார்கள். அங்காரகன் எனப்படும் செவ்வாய் கிரகத்திற்கு வேறு எங்கும் காணாத சிறப்பிடமாக இத்தலம் கருதப் படுகின்றது.
Chandran(சந்திரன்)
Thingaloor, Though there is a question about when this temple was built, historians agree that it must have been in existence since before the beginning of the Bhakti period, which was well before the seventh century A.D. Dedicated to the Moon or Chandran in Sanskrit and Thingai in Tamil, a visit to this temple is said to grant a confortable and long lilfe. In astrology, Chandran is the planet that removes stress and sorrow. Chandra or Moon is a lovable God - Pleasing to the children as well as elders, universally appealing to everyone whatever may be the religion. Goddess Parvathi rules the planet. This temple is situated at 30kms from Paradise resort.
திங்களூர், என்றழைக்கப்படும் இந்த தலம் எப்போது, யாரால் அமையப் பெற்றது என்று ஐயப்பாடு இருந்தாலும், வரலாற்று ஆசிரியர்கள், பக்தி மார்க்க காலம் ஆகிய , கி.மூ.ஏழாம் நூற்றாண்டிற்கு வெகுகாலம் முன்பே, ஆங்கிலத்தில் MOON என்றும் சமஸ்கிருதத்தில் சந்திரன் என்றும் தமிழில் திங்கள் என்றும் அழைக்கப்படும் இந்த கிரகத்துக்குரிய இத்தலம் அமைந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றார்கள். நீண்ட ஆயுளையும் வசதியான வாழ்க்கையையும் பெற இக்கிரகத்தினை ஆராதிக்கின்றனர். ஜோதிடத்தில், இந்த சந்திரன் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களையும், துன்பங்களையும் போக்கக் கூடிய கிரகமாக கூறப்படுகிறது. தேவி பார்வதி இக்கிரகத்தின் அதி தேவதை ஆவார். கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம்.
Sani(சனி)
Thirunallar, 55kms from Paradise resort. is the only temple that is dedicated to Lord Sani Or Saturn. When the Planet Saturn transits between zodiac signs, literally millions throng this shrine. The Legendary King Nala is said to have been relieved of his afflictions, which were due to the malefic influence of Saturn, after worships in this temple. Of the numerous tanks theertams, the Nala theertam is the important one. By bathing here, it is believed that one washes off all kinds of misfortune , afflictions and to escape from the woes of Sani. Saniswara or Saturn, is generally known to affect one adversely on occasions when he occupies certain positions in one's horoscope.A prayer to him, especially on Saturdays, is said to mitigate the hardships one will have to face during these periods. Saniswara is considered equally a bestower of all benefits to the devotees who pray sincerely to him. He is ruled by Lord Yama.
Sukran(சுக்கிரன்)
Kanchanur, 22kms from Paradise resort. This Shiva Sthalam is associated with Sukran or Venus and is maintained by the Madurai Adinam. It is Located in a quite hamlet of Thiruvaaduturai.This Shrine is also referred to as Palaasavanam, Brahmapurai and Agnisthalam. Brahma is said to have had a vision here of Shiva's wedding with Parvati.Men visit to pray for the well being of their wives. Sukra or Venus is the bestower of long life, wealth, happiness, children, property and good education. He is ruled by Goddess Mahalakshmi.
கோவில் நகரமான கும்பகோணத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கஞ்சனூர், ஆங்கிலத்தில் VEENUS என்றும் தமிழில் சுக்கிரன்(வெள்ளி) என்றும் அழைக்கப்படும் கிரகம் தொடர்புடைய மதுரை ஆதீனத்தால் நிர்வகிக்கப் படுகின்ற ஒரு சிவஸ்தலமாகும். இத்தலம் திருவாடுதுறை என்னும் அமைதியான கிராம சூழ்நிலையில் அமைந்துள்ளது. இத்தலம் அக்னிஸ்தலம் என்றும், பிரம்மபுரி என்றும், பலாசவனம் என்றும் அழைக்கப் படுகிறது. சிவ பார்வதி திருமண கோலத்தை பிரம்மன் இங்கு கண்டதாக ஐதீகம். தங்களின் துனைவிமார்களின் நலம் நாடி பக்தர்கள் இங்கு வருகின்றனர். சுக்ரா அல்லது வீனஸ் என்னும் இந்த கிரகம் நல்ல கல்வி அறிவுடன், வளமான சுகமான வாழ்க்கையையும், வம்சாவழியையும், நீண்ட ஆயுளையும், செல்வ சம்பத்துக்களையும் வழங்கக்கூடியவர் ஆவார். இக்கிரகத்தின் அதி தேவதை மகாலட்சுமி ஆவார்.
Kethu(கேது)
Keezhperumpallam, 57kms from Paradise resort, is an ancient Shaivite temple and legend has it that Kethu, the other planetary node of the nine celestial bodies worshipped Shiva here. Rahu and Kethu are associated with legend of the serpent that helped Lord Shiva churn the milky ocean. There is a Shrine dedicated to Kethu in this temple. Ketu brings prosperity to the devotee's family. He grants good health, wealth, cattle and all round prosperity. He is ruled by Lord Ganesha and Indra. . Those who are affected by Kethu dosha come here for rectification.
கீழ்பெரும்பள்ளம், கும்பகோணத்தில் இருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புராதன, வரலாறு கொண்ட சிவஸ்தலம் ஆகும். கேது என்னும் கிரகம் இக்கோவிலில் சிவனை வழிபாடு செய்து அமைந்துள்ளார். ராகுவும் கேதுவும் பாற்கடலில் கிடைத்த அமுதத்துடன் தொடர்புகொண்டு, சாபத்திற்கு ஆளாகி, சிவனை வழிபாட்டு, கிரக அந்தஸ்த்தையும், மனித தலையும் பாம்பின் உடலையும், பாம்பின் தலையையும் மனித உடலையும் பெற்று, இத்துன்பங்களுக்கு காரணமான சூரிய சந்திரர்களை பழி கொள்ளும் நோக்கத்துடன் கிரக சஞ்சாரம் செய்வதாக ஜோதிடக் குறிப்புக்கள் கூறுகின்றன. அதன் பலனாகவே சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வதாகவும் கூறப் படுகின்றன. இத்தலத்தில் கேதுவுக்கு தனிக் கோவில் உண்டு. கேது என்னும் இக்கிரகம் தனது பக்தர்களுக்கு வளமான வாழ்க்கையையும், நல்ல ஆரோக்கியத்தையும், செல்வ சம்பத்துக்களையும், கால்நடை போன்றவைகளையும் பொதுவாக அனைத்து நலன்களும் அளிப்பவர் என்று கூறப் படுகிறது. இக்கேதுவுக்கு அதி தேவதைகள் கணேசர் எனப்படும் விநாயகக் கடவுளும், இந்திரனும் ஆவார்கள்.
Guru(குரு)
Alangudi, 19kms from Paradise resort. is regarded as a Guru Sthalam or Jupiter where Lord Dakshinamurthy is held in great revernce. The Shrine attracts a large number of devotees when Jupiter transits between zodiac signs. Parvathi, the consort of Lord Shiva, is said to have been reborn on the banks of the Amrita Pushkarini within the temple precincts before being reunited with siva. He results in a cure from ailments and helps one to ward off his/her sins and gives strength, valour, longevity, etc. He grants the boon of fatherhood to the childless, good education (Vidya). The speciality here is that Lord Guru is engraved on the wall and is not in the form of separate idol reunited with Shiva.
ஆலங்குடி, கும்பகோணத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குருஸ்தலம். தக்ஷிணாமூர்த்தி மூலவராகக் கொண்ட இத்தலத்தில் ஆங்கிலத்தில் JUPITER என்று அழைக்கப்படும் குரு(வியாழன்) என்னும் இந்த கிரகம், கற்றுளியால் சுவற்றில் புடைப்பு சிற்பமாகக் செதுக்கப்பட்டு, காணப்படுவது சிறப்பு அம்சமாகும். குருபெயர்ச்சி எனப்படும் காலகட்டத்தில் இந்த தலத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் பக்தகோடிகள். பார்வதி தேவியானவள் இங்குள்ள அமிர்தபுஷ்கரணி கரையில் பிறந்து, பின், சிவனுடன் இணைந்ததாக ஐதீகம். நோய் நொடிகளில் இருந்து நிவாரணம் கொடுப்பதும், பூர்வ புண்ணிய பாவங்களில் இருந்து நலம் தருவதும், நீண்ட ஆயுள், வலிமை, ஆரோக்கியம், குழந்தை பாக்கியம், நல்ல கல்வி வழங்குவதும் இக்குரு கிரகத்தின் ஆதிக்கமாகும். 'குரு பார்க்க கோடி புண்ணியம்' என்பது
Budhan(புதன்)
Thiruvenkadu, is 60kms from Paradise resort.There is a reference to this temple in Valmiki's Ramayana. Therefore it is said that the oldest part of the temple is more than 3000 years old. Dedicated to Budhan or Mercury this temple in Thiruvenkadu makes up the last of the Navagraha Temples. Budhan is said to bestow wisdom and intellect. Budha or Mercury is considered as the greatest among the wise. This Devata bestows wisdom and wealth on his devotees. He is ruled by Lord Maha Vishnu. This temple is referred in 'Saiva Thirumurais' and Sastras. This place is similar to Kasi with all the Snana Ghats. One can do all the karmas here, that is supposed to be done in kasi. We can find a separate sanctum sanctorum for bhudan. Bhudan holds the portfolio of Education and Arts and it is the next popular place students prefer to go after Tuition centers.
திருவெண்காடு, இத்தலம் கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. வால்மீகி ராமாயணத்தில் இதனைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஆகையால் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகப் பழமை வாய்ந்ததாக கருதப் படுகிறது. நவக் கிரகங்களில் இறுதியாக கருதப்படுகின்ற புதன் என்றும் ஆங்கிலத்தில் MERCURY என்றும் அழைக்கப் படும் இக்கிரகம் ஆற்றலையும் அறிவையும் கொடுக்கக் கூடிய கிரகமாக கருதப் படுகிறது. அதிமேதாவிதனத்தையும், அறிவுக் கூர்மையையும், செல்வ சம்பத்தையும் தனது பக்தர்களுக்கு வழங்குவதில் முதன்மை பெற்றது. இக்கிரகத்தின் அதி தேவதை மகா விஷ்ணு ஆவார். சைவதிருமறைகளிலும், சாஸ்திரங்களிலும் இத்தலம் குறிப்பிடப்படுகிறது. காசிக்கு இணையான அந்தஸ்த்தை பெற்றுள்ளது. காசியில் செய்யும் சிரார்த்தங்களுக்கு என்ன பலனோ அதே பலன் இத்தலத்திலும் உண்டு. அனைத்து கர்ம காரியங்களும் காசிக்கு ஈடாக இங்கு நடைபெறுகின்றது. புதன் என்று தமிழிலும், MERCURY என்று ஆங்கிலத்திலும் அழைக்கப் படும் இக்கிரகம் கல்வியும், கலைத்துறையும் தனது அதிகாரத்தில் கொண்டது.
இந்த வலைபூவினைக் காணும் நண்பர்களே ! தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யும்படி விரும்பி கேட்டுக் கொள்கின்றேன். நன்றி. அன்புடன் கே எம் தர்மா ..
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!