Search This Blog

Jul 21, 2011

96 வகை தத்துவங்கள்: ஆன்மிகம் அறிந்து கொள்வோமே:;





96  வகை தத்துவங்கள்:

 
இறைவனின் படைப்பு துருவ வேற்றுமை ஒற்றுமைகளாக, வினையும் எதிர்வினையும் கொண்டவைகளாக, இது வரையிலும் அவிழ்க்க முடியாத புதிராகவும் உள்ளது. அவைகளில் சிலவற்றை ஞான, விஞ்ஞான, அஞ்ஞான, வேதாந்த விளக்கங்களின் மூலம் ஆன்றோர்கள், சான்றோர்கள் விளக்கி உள்ளனர். அறிந்து கொள்வோமா!!!!

ஒன்பது வாசல் கொண்ட நம் உடம்பில் உள்ள 96 தத்துவங்கள்:
அறிவு .........................................1 புத்தி
வினைகள் ................................2 நல்வினை, தீவினை
ஆசைகள் ..................................3 மண், பொன், பெண்
அந்த கரணங்கள்.....................4 மனம், புத்தி, அகங்காரம், சித்தம்
பஞ்ச பூதங்கள்..........................5 (பிருதிவி/பூமி/நிலம்/மண்),(அப்பு/ஜலம்/நீ​ர்/புனல்),(தேயு/அக்னி/நெருப்பு/அனல்),(வா​யு/கால்/கற்று/கனல்),(ஆகாயம்/வெளி/வானம்/விசும்பு)
பஞ்ச ஞானேந்திரியங்கள்....5 மெய், ,கண், மூக்கு, செவி
பஞ்ச கன்மேந்திரியங்கள்....5 (வாக்கு-வாய், பாணி-கை, பாதம்-கால், பாயுரு-மலவாய், உபஸ்தம்-கருவாய்)
பஞ்ச தன்மாத்திரைகள்........5 (சுவை-ரசம், ஒளி-ரூபம், ஊறு-ஸ்பரிசம், ஓசை-சப்தம், நாற்றம்-கந்தம்)
பஞ்சகோசங்கள்......................5 (அன்னமய கோசம், பிராமணய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்)
மூன்று மண்டலங்கள...........3 ( அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் )
குணங்கள்.........................​........3 ராஜசம், தாமசம், சாத்வீகம்.
மலங்கள்..........................​.........3 ஆணவம், கன்மம், மாயை
பிணிகள்..........................​..........3 வாதம், பித்தம், சிலேத்துமம்.
ஏட.......................................​........3 லோக ஏடணை, அர்த்த ஏடணை, புத்திர ஏடணை.
ஆதாரங்கள்.......................​.......6 மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா
அவஸ்தைகள்.........................​5 சாக்கரம்-நனவு, சொப்பனம்-கனவு, கழுத்தி-உறக்கம், துரியம்-நிஷ்டை, துரியாதீதம்-உயிர்ப்படக்கம்
தாதுக்கள்........................​..........7 இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம்/சுரோனிதம்
ராகங்கள்.........................​..........8 காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம், இடம்பம், அகங்காரம்.
தசநாடிகள்.........................​ .....10 இடகலை/இடபக்க நரம்பு, பிங்கலை/வலபக்க நரம்பு, சுழுமுனை/நாடு நரம்பு, சிகுவை/உள்நாக்கு நரம்பு, புருடன்/வலக்கண் நரம்பு, காந்தாரி/இடக்கண் நரம்பு, அத்தி/வலச்செவி நரம்பு, அலம்புடை/இடச்செவி நரம்பு, சங்கினி/கருவாய் நரம்பு, குகு/மலவாய் நரம்பு.
தசவாயுக்கள்..........................10பிராணன்/உயிர்க்காற்று, அபாணன்/மலக்கற்று, வியானன்/தொழிற்காற்று, உதானன்/ஒலிக்காற்று, சமானன்/நிரவுக்காற்று, நாகன்/விழிக்காற்று,கூர்மன்/இமைக்காற்று, கிருகரன்/தும்மல்காற்று, தேவதத்தன்/கொட்டாவிக்காற்று, தனஞ்செயன்/வீங்கல்காற்று.

ஆக கூடுதல் 96 தத்துவங்கள்.ஆகும்

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!