கடந்த அத்தியாயத்தில் ஜோதிட கலைக்கு அடிப்படையான பஞ்சாகத்திற்கே அடிப்படையாக உள்ள வருடம், மாதம் இவைகளைப் பற்றி கவனித்தோம்.
சூரியனின் இயக்கத்தை அடிப்படை யாகக் கொண்டது ‘சௌரமானம்’ எனவும், சந்திர இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது ‘சந்திரமானம்’ எனவும், மாநிலத்திற்கு மாநிலம், மதத்திருக்கு மதம் வருட, மாத ஆரம்பம் வித்தியாசப்படுகின்றன எனவும், தமிழர்களின் வருட, மாதங்களை சுருக்கமாக கண்டோம்.
தமிழ் வருடத்திற்குரிய பெயர்கள்:-
மற்ற இன மக்களுக்கு வழக்கப்பட்டு வரும் வருடங்கள் எண்களின் அடிப்படையில் கணக்கிடப் படுகிறது. இந்த எண்கள் ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டே செல்லும். ஆனால், தமிழ் வருடத்திற்கு எங்களுக்குப் பதிலாக கீழே கண்ட பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1)பிரபவ, 2)விபவ, 3)சுக்கில, 4)பிரமோதூத, 5)பிரஜோற்பதி, 6)ஆங்கீரஸ, 7)ஸ்ரீமுக, 8)பவ, 9)யுவ, 10)தாது, 11)ஈஸ்வர, 12)வெகுதான்ய, 13)பிரமாதி, 14)விக்கிரம, 15)விஷு, 16)சித்திரபானு, 17)சுபானு, 18)தாரண, 19)பார்த்திப, 20)விய, 21)சர்வ ஜித்து, 22)சர்வதாரி, 23)விரோதி, 24)விக்ருதி, 25)கர, 26)நந்தன, 27)விஜய, 28)ஜய, 29)மன்மத, 30)துன்முகி, 31)ஹேவிளம்பி, 32)விளம்பி, 33)விகாரி, 34)சார்வரி, 35)பிலவ, 36)சுபகிருது, 37)சோபகிருது, 38)குரோதி, 39)விசுவாவசு, 40)பராபவ, 41)பிலவங்க, 42)கீலக, 43)சௌமிய, 44)சாதாரண, 45)விரோதி கிருது, 46)பரிதாபி, 47)பிரமாத்தீச, 48)ஆனந்த, 49)ராட்சஸ, 50)நள, 51)பிங்கள, 52)காளயுக்தி, 53)சித்தார்த்தி, 54)ரௌத்திரி, 55)துன்மதி, 56)துந்தபி, 57)ருத்ரோத்காரி, 58)ரக்தாஷி, 59)குரோதன, 60)அட்சய...
ஒரு முறை நாதருக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவர் பெண்ணாக மாறி 60௦௦ குழந்தைகளை பெற்றெடுத்ததாக புராணம் கூறுகிறது. இந்த 60௦௦ குழந்தைகளின் பெயர்களே தமிழ் வருடங் களாக சூட்டப் பட்டுள்ளது. கும்பகோணம் அருகில் உள்ள சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்திற்கு செல்லும் வழியில் உள்ள 60௦ படிகட்டுகளிலும் இந்த வருடங்களின் பெயர்கள் எழுதப் பட்டிருப்பதைக் காணலாம். இந்த 60 வருடங்களின் பெயர்களும் சுழற்சி முறையில் 60 வருடங்களுக்கு ஒரு முறை வந்து கொண்டே இருக்கும். இந்த 60௦ வருடங்கள் ஆண்டவனுக்கு ஒரு நாளாகும்.
தமிழ் மாதங்களும் அதற்குரிய ராசிகளும்:
சித்திரை—மேஷம், வைகாசி—ரிஷபம், ஆணி—மிதுனம், ஆடி—கடகம், ஆவணி—சிம்மம், புரட்டாசி—கன்னி, ஐப்பசி—துலாம், கார்த்திகை—விருச்சிகம், மார்கழி—தனுசு, தை—மகரம், மாசி--கும்பம், பங்குனி—மீனம்.... அகியவைகள் ஆகும்.
கேரளாவின் கொல்லம் ஆண்டு :
கேரளாவில் இந்த கொல்லம் ஆண்டானது கி.பி.824-முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் வருடத்திற்கு உள்ளது போல இந்த வருடத்திற்கு பெயர்கள் கிடையாது. வருடத்திற்கு எண்களே கொடுக்கப்பட்டு உள்ளன. வருடம் செல்ல செல்ல எண்களும் ஒவ்வொன்றாக அதிகரித்து கொண்டே செல்லும்.
சூரிய பகவான் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் நாள் முதல் (ஆவணி மாதம் 1-ம் தேதி) இந்த கொல்லமாண்டு ஆரம்பமாகிறது. ஒவ்வொரு மாதமும் சூரியன் எந்த ராசியில் சஞ்சரிக் கின்றாரோ அந்த ராசியின் பெயரே அந்தந்த மாதங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. 1)சிங்கம், 2)கன்னி, 3)துலாம், 4)விருச்சிகம், 5)தனு, 6)மகரம், 7)கும்பம், 8)மீனம், 9)மேடம், 10)இடபம், 11)மிதுனம், 12)கர்க்கடம் என இதற்கு பண்ணிரெண்டு மாதங்கள் உண்டு.
அடுத்து தெலுங்கு வருடம், சக வருடம், பசலிஆண்டு (பஸலி), கார்த்திக்க சுக்லாதி ஆண்டு, கலியாப்தம், ஹிஜ்ரி ஆண்டு, மற்றும் ஏனைய நடைமுறையில் உள்ள ஆண்டுகளை சுருக்கமாக அடுத்த பதிவில் காண்போம்!!!.......மேலும் பயணிப்போம்...
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!