Search This Blog

Aug 31, 2011

அனைத்து மதத்திலும் விநாயகர்...!

   மது இந்து மதத்தை தாக்கி அழிப்பதற்கு மாற்று மதத்தினர் தயாராக இருக்கிறார்கள் குதிரை எப்போது குப்புற விழும் சதையை எப்போது கொத்தி தின்னலாம் என கழுகு கூட்டம் காத்திருப்பது போல் நாத்திகர்கள் ஒரு பக்கம் நம்மை குறி வைத்து காத்திருக்கிறார்கள் இவர்களை மிக சுலபமாக வென்று விடலாம் ஏனென்றால் இவர்கள் நம் விரோதிகள் என்று நேர்முகமாகவே நமக்கு தெரியும் ஆனால் நம்மை வீழ்த்துவதற்கு நமக்குள்ளேயே ஒரு பகை கூட்டம் பெருகி கிடக்கிறது இவர்களை அடையாளம் காண்பது தான் மிகவும் கஷ்டம்.

நமக்குள் இருக்கும் பகையாளிகள் யார்? அவர்களை அடையாளம் காண கஷ்டம் என்றால் அவர்களிடம் இருந்து நாம் எப்படி தப்ப முடியும் என்று நம்மில் பலர் கவலைப்படுகிறோம் ஆனால் சற்று கவனமாக இருந்தால் அந்த உள் பகையாளிகளை நிச்சயம் நம்மால் இனம் கண்டுக் கொள்ள முடியும் உங்கள் காதுகளையும் கண்களையும் சற்று கூர்மை படுத்துங்கள் சிவனை வணங்குகின்ற தலை எவனையும் வணங்காது என்ற குரல் கேட்கிறதா திருநாமம் தரித்த நெற்றிதான் நெற்றி மற்றதெல்லாம் நெற்றி போலிருக்கும் மயானம் என்று பேசுகின்ற நாவுகளை உங்களால் காண முடிகிறதா அப்படி நீங்கள் கண்டுகொண்டால் இவர்கள் தான் நமக்குள் இருக்கும் நம் எதிரிகள் என்பதை உணர்ந்து கொள்ளாம்.
 
சைவ வைஷ்ணவ தகராறு இன்று நேற்று அல்ல பன்நெடுங்காலமாகவே நடந்து வருகிறது ருத்ர நர்த்தனம் ஆடுகின்ற சிவ பெருமானும் காளிங்க நர்த்தனம் ஆடுகின்ற மாதவனும் ஒன்றே தான் என்று பல ஞானிகளும் குருமார்களும் எத்தனையோ உபதேசம் செய்தும் நம்மில் பலர் திருந்தவே இல்லை சைவ வைஷ்ணவ சண்டை மட்டும் அல்ல அந்ததந்த பிரிவுக்குள்ளேயே ஆயிரம் உட்பிரிவுகள் அதற்கு பத்தாயிரம் தகராறுகள் சைவத்துக்குள் காஷ்மீரம் கர்நாடகம் என்ற சண்டைகள் வைஷ்ணவத்திற்குள் வடகலை தென்கலை என்ற குடுமி பிடிகள் இத்தனை சண்டை சச்சரவுகளிலும் நம் இந்து மதம் அழியாமல் இன்று வரை தழைத்து நிற்கிறது என்றால் அது இறைவனின் தனிக்கருனையே காரணம் என்று துணிந்து சொல்லலாம்

இந்த மனிதர்கள் இப்படி தான் சமய சண்டைகள் போட்டு சனாதன தர்மத்தை கெடுத்து விடுவார்கள் என்று எண்ணிய நமது குருமார்கள் இந்து மதத்தில் உள்ள எல்லா வழிப்பாட்டு முறைகளும் ஒரே வழியில் வர வேண்டும் என்பதற்காகவே விநாயகர் வணக்கத்தை கொண்டு வந்தனர் விநாயகர் மதசண்டைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் இன்னும் சொல்ல போனால் எல்லா மதமும் அவருக்குள்ளேயே அடங்கி விடுகிறது எனலாம்.
 
சைவ சமயத்தில் தனிப்பெரும் தலைவரான சிவபெருமானுக்கும் சாக்த சமயத்தில் இறைவியான பாராசக்திக்கும் விநாயகர் மகன் கெளமாற இறைவனான முருகனுக்கு பிள்ளையார் அண்ணன் வைஷ்ணவத்தின் ஓங்கி உலகளந்த உத்தமன் ஆன திருமாலுக்கு கணபதி மருமகன் செளரம் என்ற மத பிரிவின் கடவுளான சூரிய தேவனை தனக்குள் அடக்கி பிரபஞ்ச வடிவமாக விநாயகர் திகழ்வதால் தலைவனுமாகிறார் இப்படி ஆறு மத பிரிவுக்கும் விநாயகர் உறவு பாலமாக திகழ்வதால் அவர் சமயங்களையும் கடந்து நிற்கிறார்.

கணபதி உறவு மார்க்கத்தில் மட்டும் மதங்களை இணைக்க வில்லை தனது உருவத்துக்குள்ளேயே அனைத்து மத கடவுளையும் அடக்கி எல்லாமே ஓம்கார வடிவான தானே என்று நமக்கு உணர்த்துகிறார் விநாயகரின் நாபி பிரம்மாவின் சொருபம் அவரது திருமுகம் திருமாலின் அம்சம் விநாயகற்குள்ள மூன்று கண்கள் சிவபெருமானும் எனக்குள் அடக்கம் என்பதை சொல்லாமல் சொல்கிறது அவர் உடம்பின் இடது பாகம் சக்தியின் அம்சம் வலது பாகம் சூரியனின் அம்சம் பெரிய காதுகள் ஞானத்தை வாரி தனக்குள் கொட்டுவதனால் முருகனின் அம்சமாகவும் இருக்கிறது ஆக கணபதி ஒருவரை கைதொழுதாலே கடவுள்கள் அனைவரையும் வணங்குவதற்கு சமமாகி விடுகிறது.
 
வைஷ்ணவ மத சடங்குகளில் கணபதி வழிப்பாட்டை முதல் வழிப்பாடாக செய்வது இல்லை என்று பலர் நினைக்கிறார்கள் இது தவறு பெருமாள் வீதி உலா வருவதற்கு முன்பு விஷ்வசேனர் என்ற மூர்த்தி முதல் முறையாக ஆலயத்திலிருந்து வீதி உலா வந்து தெருவையும் மக்களையும் ஒழுங்குப்படுத்திவிட்டு போவார் இவரது சந்நிதானத்திலேயே பெருமாள் சன்னதியின் திருச்சாவி இரவில் வைத்து காலையில் எடுக்கப்படும் அப்படி எடுக்கும் முன் முதலில் விஷ்வசேனருக்கு முதல் பூஜை செய்யப்படும் அந்த விஷ்வசேனர் வேறுயாரும் அல்ல விநாயகப் பெருமானே தான்.

விநாயகர் வழிப்பாடு இந்து மதத்தில் உள்ள பிரிவுகளை மட்டும் இணைக்க வில்லை இந்து மதத்திலிருந்து முற்றிலுமாக மாறுப்பட்ட பெளத்த,ஜைன மதங்களையும் இணைக்கிறது ஜைன மதத்தில் கணேச பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும் புத்த மதத்தில் லாமா பிரிவினரும் மகாயான பிரிவினரும் கணபதியை வழிப்பட்ட பிறகு தான் மற்ற வழிப்பாடே செய்யப்படும் இது மட்டுமல்ல கணபதி கடவுள் என்பவர் ஆணாகவும் இருக்கிறார் பெண்ணாகவும் இருக்கிறார் என்பதை மக்களுக்கு விளக்க கணேசாணி என்ற பெயரில் பெண் உருவத்திலும் காட்சி தருகிறார் யாணை முகத்தோடு கூடிய கணேசாணி அன்னையின் திருக்கோலத்தை சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோவிலில் இன்று கூட நாம் தரிசனம் செய்யலாம்.
நமது பிள்ளையார் வழிப்பாடு இந்தியாவில் மட்டுமல்ல இன்று வரை இந்தோனேசியா,சீனா,ஜப்பான் போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கிறது இஸ்லாமிய மதம் உருவாவதற்கு முன்பு ஈரான்,ஈராக் போன்ற அரபு நாடுகளிலும் ரஷ்யாவிலும் கூட புகழ் பெற்று இருந்திருக்கிறது கால சூழலால் இன்று அங்கே விநாயகர் வழிப்பாடு இல்லை என்றாலும் புதைபொருள் ஆய்வில் பல பிள்ளையார் சிலைகள் கிடைகின்றன.

விநாயகரை வேதம் அறிந்தவன் வேத முறைப்படி மட்டும் தான் வழிப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை யார் வேண்டுமென்றாலும் எங்கே வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் வழிப்படலாம் ஏனென்றால் அவல் கடலை சுண்டலும் அரிசி கொழுக்கட்டையும் கவலை இன்றி அருந்திவிட்டு ஆற்றங்கரை ஓரத்தில் அரசமரத்து நிழலில் அமர்ந்திருக்கும் தொப்பை கணபதி மந்திரங்களுக்கு மட்டும் வசப்படுபவர் அல்ல உண்மை அன்பிற்கு வசப்பட்டு மனிதனின் வாழ்நாள் முழுவதும் துனைவருபவர் ஆவார் அவரை இந்த நல்நாளில் வணங்கினால் சகல தெய்வங்களின் அருளை பெறலாம் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

நமது மதத்துக்குள்ளேயே பங்காளி சண்டை போட்டு பகையாளியாக நிற்கும் தத்துவ மூடர்கள் விநாயகரின் சர்வவியாப நிலையை உணர்ந்து தங்களுக்குள்ள பேதா பேதங்களை மறந்து கைவிட்டு எல்லோரும் சனாதன தர்மத்தின் மைந்தர்கள் என்ற உண்மை நிலையில் நிற்பதற்கு விநாயகர் வழிப்பாடு துணை செய்கிறது  எனவே உள் பகையை அழிக்க விநாயகரை வணங்குவோம்.

நன்றியும் குருஜியின் அருளாசியுடனும் ... கே எம் தர்மா......

இடுக்கணழியாமை:அதிகாரம் 63/133 பொருட்பால்:அரசியல்

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்! வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!

இடுக்கணழியாமை:அதிகாரம் 63/133 
 பொருட்பால்:அரசியல் 
621/1330
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177194"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
Smile, with patient, hopeful heart, in troublous hour;
Meet and so vanquish grief; nothing hath equal power.
Explanation :If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.
****************************************
622/1330
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177195"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
Though sorrow, like a flood, comes rolling on,
When wise men's mind regards it,- it is gone.
Explanation :A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.
****************************************
623/1330
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177196"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
Who griefs confront with meek, ungrieving heart,
From them griefs, put to grief, depart.
Explanation :They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.
***************************************
624/1330
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177197"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
Like bullock struggle on through each obstructed way;
From such an one will troubles, troubled, roll away.
Explanation :Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.
****************************************
625/1330
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177198"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
Like bullock struggle on through each obstructed way;
From such an one will troubles, troubled, roll away.
Explanation :Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.
******************************************
626/1330
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177199"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
Who boasted not of wealth, nor gave it all their heart,
Will not bemoan the loss, when prosperous days depart.
Explanation :Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.
*********************************************
627/1330
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177200"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
'Man's frame is sorrow's target', the noble mind reflects,
Nor meets with troubled mind the sorrows it expects.
Explanation :The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.
****************************************
628/1330
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177201"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
He seeks not joy, to sorrow man is born, he knows;
Such man will walk unharmed by touch of human woes.
Explanation :That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).
******************************************
629/1330
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177202"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
Mid joys he yields not heart to joys' control.
Mid sorrows, sorrow cannot touch his soul.
Explanation :He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.
***************************************
630/1330
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177203"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
Who pain as pleasure takes, he shall acquire
The bliss to which his foes in vain aspire.
Explanation :The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.
*****************************************************************

ஆள்வினையுடைமை:அதிகாரம் 62/133 பொருட்பால்:அரசியல்

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்! வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!

ஆள்வினையுடைமை:அதிகாரம் 62/133 
 பொருட்பால்:அரசியல் 
611/1330
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177184"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
Say not, 'Tis hard', in weak, desponding hour,
For strenuous effort gives prevailing power.
Explanation :Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).
***************************************
612/1330
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177185"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
In action be thou, 'ware of act's defeat;
The world leaves those who work leave incomplete!
Explanation :Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.
***********************************************
613/1330
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177186"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
In strenuous effort doth reside
The power of helping others: noble pride!
Explanation :The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.
*****************************************
614/1330
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177187"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
Beneficent intent in men by whom no strenuous work is wrought,
Like battle-axe in sexless being's hand availeth nought.
Explanation :The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.
**********************************************
615/1330
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177188"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
Whose heart delighteth not in pleasure, but in action finds delight,
He wipes away his kinsmen's grief and stands the pillar of their might.
Explanation :He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.
**************************************************
616/1330
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177189"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
Effort brings fortune's sure increase,
Its absence brings to nothingness.
Explanation :Labour will produce wealth; idleness will bring poverty.
*******************************************
617/1330
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177190"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
Effort brings fortune's sure increase,
Its absence brings to nothingness.
Explanation :Labour will produce wealth; idleness will bring poverty.
**********************************************
618/1330
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177191"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
'Tis no reproach unpropitious fate should ban;
But not to do man's work is foul disgrace to man!
Explanation :Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.
********************************************
619/1330
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177192"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
Though fate-divine should make your labour vain;
Effort its labour's sure reward will gain.
Explanation :Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.
***********************************
620
/1330
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177193"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
Who strive with undismayed, unfaltering mind,
At length shall leave opposing fate behind.
Explanation :They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.
********************************************

மடியின்மை:அதிகாரம் 61/133 பொருட்பால்:அரசியல்

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்! வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!

மடியின்மை:அதிகாரம் 61/133 
 பொருட்பால்:அரசியல் 
601/1330
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177174"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Of household dignity the lustre beaming bright,
Flickers and dies when sluggish foulness dims its light.
Explanation :
By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.
******************************************
602/1330
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177175"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Let indolence, the death of effort, die,
If you'd uphold your household's dignity.
Explanation :Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.
*************************************
603/1330
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177176"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who fosters indolence within his breast, the silly elf!
The house from which he springs shall perish ere himself.
Explanation :The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.
*******************************************
604/1330
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177177"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
His family decays, and faults unheeded thrive,
Who, sunk in sloth, for noble objects doth not strive.
Explanation :Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.
****************************************
605/1330
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177178"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Delay, oblivion, sloth, and sleep: these four
Are pleasure-boat to bear the doomed to ruin's shore.
Explanation :Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction.
****************************************
606/1330
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177179"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Though lords of earth unearned possessions gain,
The slothful ones no yield of good obtain.
Explanation :It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.
*****************************************
607/1330
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177180"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who hug their sloth, nor noble works attempt,
Shall bear reproofs and words of just contempt.
Explanation :Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.
*********************************************
608/1330
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177181"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
If sloth a dwelling find mid noble family,
Bondsmen to them that hate them shall they be.
Explanation :If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.
***************************************
609/1330
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177182"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who changes slothful habits saves
Himself from all that household rule depraves.
Explanation :When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.
****************************************
610/1330
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177183"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis .
The king whose life from sluggishness is rid,
Shall rule o'er all by foot of mighty god bestrid.
Explanation :The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot.
********************************************

ஊக்கமுடைமை:அதிகாரம் 60/133 பொருட்பால்:அரசியல்

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்! வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!

ஊக்கமுடைமை:அதிகாரம் 60/133 
 பொருட்பால்:அரசியல் 
591/1330
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177164"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
'Tis energy gives men o'er that they own a true control;
They nothing own who own not energy of soul.
Explanation :Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?
****************************************
592/1330
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177165"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
The wealth of mind man owns a real worth imparts,
Material wealth man owns endures not, utterly departs.
Explanation :The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.
*******************************************
593/1330
க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.

இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177166"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
'Lost is our wealth,' they utter not this cry distressed,
The men of firm concentred energy of soul possessed.
Explanation :They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property."
****************************************
594/1330
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177167"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
The man of energy of soul inflexible,
Good fortune seeks him out and comes a friend to dwell.
Explanation :Wealth will find its own way to the man of unfailing energy.
********************************************
595/1330
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177168"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis  
With rising flood the rising lotus flower its stem unwinds;
The dignity of men is measured by their minds.
Explanation :The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds.
**************************************
596/1330
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177169"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
Whate'er you ponder, let your aim be loftly still,
Fate cannot hinder always, thwart you as it will.
Explanation :In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.
***********************************************
597/1330
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177170"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
The men of lofty mind quail not in ruin's fateful hour,
The elephant retains his dignity mind arrows' deadly shower.
Explanation :The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.
**************************************
598/1330
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு
.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177171"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
The soulless man can never gain
Th' ennobling sense of power with men.
Explanation :Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality".
**********************************************
599/1330
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177172"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
Huge bulk of elephant with pointed tusk all armed,
When tiger threatens shrinks away alarmed!
Explanation :Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.
**********************************************
600/1330
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.

இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177173"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
Firmness of soul in man is real excellance;
Others are trees, their human form a mere pretence.
Explanation :Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.
***********************************************