Search This Blog

Sep 28, 2011

சிவவாக்கியம் (061-065) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (061-065)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!! 

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை –061
அறத்திறங்களுக்கும் நீ அகண்டம் என்திசைக்கும் நீ
திறதிறங்களுக்கும் நீ தேடுவார்கள் சிந்தை நீ
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ
மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே

ஈஸ்வரா! தர்மகாரியங்கள் யாவும் நீ, அகண்டங்கள் அனைத்துக்கும் எட்டு திசைகளுக்கும் காரணமானவன் நீ. உன்னை அடைய வேண்டும் என்று தேடுவோர்களின் சிந்தையிலும் மெய்யறிவாகவும் உள்ளவன் நீ. மெய் ஞானா விஞ்ஞானத் திறன்களுக்கும் அதில் ஆராய்ந்து சாதிக்கும் திறமைகளுக்கும் காரணம் நீ. தூக்கத்தில் கிடைக்கும் சுகம் நீ. உன்னை உணரும் உணர்வும் நீ ஏன் உடலில் உட்கலந்து நிற்கும் சோதியும் நே. கனவிலும், நனவிலும் மறக்கக் கூடாத நின் திருவடியை அடியேன் அறியாது மறந்து போனாலும் ஏன் உடலாகிய வீட்டில் மனத் தாமரையில் வந்து குடியிருந்து ஆண்டு கொள்.
*******************************************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -062
அண்டம் நீ அகண்டம் நீ ஆதிமூல மானோன் நீ
கண்டம் நீ கருத்தும் நீ காவியங்கள் ஆனோன் நீ
புண்டரீக மன்றுளே புனருகின்ற புண்ணியர்
கொண்ட கோலமான நேர்மை கூர்மை என்ன கூர்மையே.

நாராயணா! இவ்வுலகம் நீ அகண்டங்கள் யாவும் நீ. முதலையின் பிடியில் அகப்பட்ட கஜேந்திரன் என்ற யானை ஆதிமூலமே என்று அபயக்குரலிட்டு அலற அதனைக் காத்து ரட்சித்து அனைத்துக்கும் ஆதிமூலமாக ஆனவன் நீ. ஆபத்து வரும் காலத்தில் காப்பவன் நீ. ஏன் கருத்தினுள்ளே தெளிவாகத் திகழ்பவன் நீ. இதிகாச காவியங்களான மகாபாரதத்தின் நாயகன் நீ. ஆயிரம் இதழ் தாமரையான சகஸ்ரதளத்தில் நின்று யோக தியானம் செய்யும் புண்ணியோர்கள் புண்டரீகம் எனும் மைப் பொருளில் சேர்ந்து அதிலேயே தவ்வக்கோலம் பூண்டிருப்பர். நடுவாக அமைந்த கூர்மையொத்த இடத்தில் உன்னைக் கண்டு ஆனந்தம் பெற்று உன்னுடைய கூர்ம அவதாரத்தை எண்ணி ஆமையைப் போல் ஐம்புலன்களை உள்ளடக்கி சமாதி எண்டும் பேரின்ப நிலையை அடைவார்கள்.
******************************************************************

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -063
மை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐ இறந்து கொண்டு நீங்கள் அல்லல் உற்றிருப்பீர்கள்
மெய் அறிந்த சிந்தையால் விளங்கு ஞானம் எய்தினால்
உய்யரிந்து கொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே
 மைத் தீட்டிய அழகிய கண்களை உடைய இளம் பெண்கள் ஆடவரை காம வலை வீசி வீழ்த்தி மயக்கிடும் பாழ்வாழ்வெனும் இம்மையையில் அகப்பட்டு வீணான சந்தேகங்களிலும், எம வேதனை பயத்தினாலும் பிடிக்கப்பட்டு நீங்கள் துன்பப்பட்டு வாழ்ந்து உழன்று வருகின்றீர்கள். உங்கள் உடம்பிலேயே உள்ள உயிரை அறிந்து அதில் விளங்கும் மெய்ப்பொருளை உணர்ந்து அதையே சிந்தையில் நினைந்து தியானியுங்கள். இதுவே இப்பிறவி உய்வடையும் வழி என்பத அறிந்து ஞானத்தினால் நீங்கள் தவம் புரிந்து வந்தால் மரணமிலாப் பெரு வாழ்வைப் பெற்று இறைவனோடு எக்காலமும் நித்தியமாய் வாழ்வீர்கள்.

******************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை-064
கருவிருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குருவிருந்து சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல்
உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்று நீர்
திருவளங்கு மேனியாகிச் சென்று கூடலாகுமே
பெண்களின் மீதுள்ள சிற்றின்ப ஆசையால் ஆழிவில் ஏற்படும் பல துன்பங்களாலும், நோய்களாலும் பாதிக்கப் பட்டு வெளியில் சொல்ல முடியாமல் கலங்கித் தவிக்கும் ஊமை மக்களே!! நல்ல குருவாக இருந்து வாழ்ந்து காட்டியவர்கள் சொன்ன உபதேச வார்த்தைகளை நன்கு புரிந்து கொண்டு அந்த ஒன்றையே குறித்து நோக்கி தியானம் செய்ய வல்லவர்கலானால் அருவாக இருந்த அப்பொருளே உருவாக இலங்கி சோதி மேனியாகி நின்ற ஈசருடன்.ஒன்றாகி இணைக்கும். அதுவே உங்களை உத்தமராக ஆக்கி உள் தமரைத் திறந்து ஈசன் திருவாக விளங்கி திகழும் பொன் மேனியில் பொன்னம்பலத்தில் சென்று கூடி பேரின்பத்தை கூட்டி வைக்கும்.
**********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -065   
தீர்த்தம் ஆடவேண்டுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தம் ஆடல் எவ்விடம் தெளித்து நீர் இயம்பிலீர்
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்த பின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயம் அஞ்செழுத்துமே.

தலம், தீர்த்தம், மூர்த்தம் என்றும் நல்ல தீர்த்தங்களில் மூழ்கி நீராடினால் அநேக பாவங்களும் அகன்றுவிடும் என்றும் காவிரி, கங்க, யமுனா என்று தீர்த்தங்களைத் தேடி ஓடும் அன்பர்களே!! அப்படியெல்லாம் தேடித் தீர்த்தமாடியதால் செய்த பாவம் யாவும் போய்விட்டதா? பாவங்கள் அகல தீர்த்தமாடுவது எந்த இடம் என்று நீங்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். உங்களுக்குள் தெளிந்த தீர்த்தமாக உள்ள நீரையும் அது இருக்கும் இடத்தையும் தெரிந்து கொண்டீர்களா? அவ்வாறு அனைத்து பாவங்களையும் போக்க வல்லதாக உள்ள தீர்த்தமாகிய அது பஞ்சாட்சரம் என்ற மெய்ப்பொருள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிலேயே பஞ்சபூதங்களும் உள்ளதை உணர்ந்து சிவயநம என்று அஞ்செழுத்தை ஓதி அதையே நினைந்து நெகிழ்ந்து நீராடும் வழியை அறிந்து தியானம் செய்யுங்கள். 
**************************************************************************** 
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

சிவவாக்கியம் (056-060) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (056-060)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!! 

சிவவாக்கியர் சிந்தனைகள் 056 
தில்லை நாயகன் அவன்  திருவரங்கனும் அவன்
எல்லையான புவனமும் அமர்ந்து  ஏகமுத்தியானவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே!

தில்லையில் ஆடும் நடராஜனும் அதுவே. திருவரங்கத்தில் பள்ளி கொண்ட நாராயணனும் அதுவே. எல்லா உலகங்களுக்கும் எல்லையான ஆகாயமாகவும், பிரம்மம் ஆனா ஏகமாகவும், முத்தீயாகவும் இருப்பது அதுவே. பாலும் தீ நாக்கும் உள்ளவர்கள் சிவனே பெரியவன் என்றும் அல்ல பெருமாளே பெரியவன் என்றும் அவரவர் எண்ணம்போல் படித்ததை மட்டும் வைத்து பேசி மகிழ்வார்கள். புராணக் கதைகளில் நடந்த வல்லபங்களை கூறி வேறுபடுத்தி பேசுபவர்கள் தன் ஆன்மாவை அறியமாட்டது வாய்புழுத்து மடிவார்கள்.
***************************************************************************************** 
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 057
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன் எம்பிரான்
முத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே.

எட்டு திசைகளுக்கும், எல்லா உயிர்களுக்கும் தந்தையாக இருப்பவன் எம்பிரானாகிய ஈசனே. சக்தியாகிய நம் உடம்பில் வித்தாகவும், உயிராகவும், அறிவாகவும் விளங்கும் வாலியை அறிந்து தியானம் செய்ய செய்ய அருட்பெருஞ் சோதியாக ஆண்டவன் வருவான். சித்தம் தெளிந்து, அறிவை அறிந்து நான்கு வேதங்களும் கூறும் உள்ளமாகிய கோயிலின் வாசலை திறந்து ஈசனின் நடனங்கண்டு ஆனந்தம் அடைந்து அமைதி பெறலாம்.
***********************************************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 058
உற்ற நூல்கள் உம்முளே உணந்துனர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்துவீர்
செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருந்திடில்
சுற்றமாக உம்முளே சோதி என்றும் வாழுமே.

இறைவனுக்கு உற்ற நூல்களை உணர்ந்துணர்ந்து பாடுங்கள். பற்றுக்களை அறத்து, தவத்தில் நிட்று பராபரமான எசனை சேருங்கள். பகைமைகளை ஒழித்து உள்ளத்தில் மாசுகளை அறுத்து, பத்தாம் வாசலை திறந்து ஆணவத்தையும், கர்வத்தையும் அழித்து மெய்ப்பொருளை அறிந்து தியானம் செய்து வந்தால் உனக்குள் பரிசுத்தமான மெய்ப்பொருளில் ஈசன் சோதியாக என்றென்றும் நிலைத்து வாழ்வார் மரணம் இல்ல பெருவாழ்வில் வாழலாம். 
*********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 059
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே

காலைப் பொழுதில் எழுந்தது அது என்ன என்பதையும், நீராகி, நின்று வந்த அது என்ன என்பதையும் நாத விந்தான தாதுவை புகுந்து நெருப்பாகி விளைந்த அது என்ன? என்பதி எல்லாம் நமக்குள் நன்கு அறிந்து அது "மெய்பொருளே" என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அது பஞ்சபூத தன்மையைக் காட்டும் "நமசிவய"  எனும் ஐந்தெழுத்தாகவும்    அறிவு, உணர்வு, நினைவு என்பவைகளை உணர்த்தும் அகாரம், உகாரம், இகாரம் என்ற மூன்றெழுத்து ஓம் எனும் ஓங்காரகமாக உள்ளதை உணர்ந்து ஓம் நமசிவய எனும் அச்சரத்தை  உங்களுக்குள் ஓதி உயர்வடையுங்கள். ஒரெழுத்தான வித்திலிருந்து ஐந்து மூன்றும் எட்டாகி உடம்பாக விளங்குவதை உணர்ந்து அதுவே ராம மந்திரமாக இருப்பதை அறிந்து ராமநாமத்தை ஓதி தியானியுங்கள்.
*******************************************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -060
அகாரம் என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ
உகாரம் என்ற அக்கரத்துள் உவ்வு வந்து உதித்ததோ
அகாரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே

அகாரம் என்ற '' எழுத்தில் ஒரெழுத்தான அவ்வு தோன்றியதோ! உகாரம் என்ற '' எழுத்தில் ஊமைஎழுத்தான உவ்வு வந்து தோன்றியதோ! இந்த எட்டிரண்டுமான ' '-வும் ''-வும் 'சி'என்ற சிகாரம் இன்றி தோன்றியிருக்க முடியுமா? இதனை எவ்வித மன விகாரமும் அற்ற யோகிகளே விரிவாக எடுத்துரைத்து விளக்க வேண்டும். எந்த மொழி எழுத்துக்களுக்கு முதல் எழுத்தாக இருப்பது (.) புள்ளியாகவும், பேசும் எழுத்தாக மாறும் பொது 'சி'யாகவும் உள்ளது, ஆதலால் சிகாரம் இல்லாமல் எந்த எழுத்தும் நிற்காது என்பதி புரிந்துகொண்ட அந்த ஓரெழுத்தை உணர்ந்து தியானியுங்கள்.
********************************************************************************************

 http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

மானம்:அதிகாரம் 97/133 பொருட்பால்:குடியியல்

 திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்! வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!

மானம்:அதிகாரம் 97/133 
 பொருட்பால்:குடியியல்  

வாழ்க வள்ளுவம்;வளர்க தமிழ்!!!! பொருட்பால்:குடியியல் !!!! மானம்:அதிகாரம்97/133
961/1330
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177534"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
Though linked to splendours man no otherwise may gain,
Reject each act that may thine honour's clearness stain.
Explanation :Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.
********************************************
962/1330
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177535"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis  
Who seek with glory to combine honour's untarnished fame,
Do no inglorious deeds, though men accord them glory's name.
Explanation :Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.
********************************************
963/1330
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177536"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
Bow down thy soul, with increase blest, in happy hour;
Lift up thy heart, when stript of all by fortune's power.
Explanation :In great prosperity humility is becoming; dignity, in great adversity.
*****************************************
964/1330
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177537"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
Like hairs from off the head that fall to earth,
When fall'n from high estate are men of noble birth.
Explanation :They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.
**********************************************
965/1330
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177538"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
If meanness, slight as 'abrus' grain, by men be wrought,
Though like a hill their high estate, they sink to nought.
Explanation :Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.
*****************************************
966/1330
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177539"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
It yields no praise, nor to the land of Gods throws wide the gate:
Why follow men who scorn, and at their bidding wait?
Explanation :Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven.
*******************************************************
967/1330
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177540"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
Better 'twere said, 'He's perished!' than to gain
The means to live, following in foeman's train.
Explanation :It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.
*********************************************
968/1330
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177541"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
When high estate has lost its pride of honour meet,
Is life, that nurses this poor flesh, as nectar sweet?
Explanation :For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.
***********************************************
969/1330
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177542"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
Like the wild ox that, of its tuft bereft, will pine away,
Are those who, of their honour shorn, will quit the light of day.
Explanation :Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.
*****************************************************
970/1330
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177543"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
Who, when dishonour comes, refuse to live, their honoured memory
Will live in worship and applause of all the world for aye!
Explanation :The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.
********************************************
மேலும் பயணிப்போம் நண்பர்களே!!! வள்ளுவனின் வாக்கினை பின்தொடர்ந்து.. அன்புடன் கே எம் தர்மா..

குடிமை:அதிகாரம் 96/133 பொருட்பால்:குடியியல்

 திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்! வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!

குடிமை:அதிகாரம் 96/133 
 பொருட்பால்:குடியியல்  

வாழ்க வள்ளுவம்;வளர்க தமிழ்!!!! பொருட்பால்:குடியியல் !!!! குடிமை:அதிகாரம்96/133 
951/1330
ல்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.

இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177524"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis  
 Save in the scions of a noble house, you never findInstinctive sense of right and virtuous shame combined.
Explanation Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born.
*************************************************************
952/1330
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177525"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis  
 In these three things the men of noble birth fail not:In virtuous deed and truthful word, and chastened thought.
Explanation The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty.
*************************************************************
953/1330
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177526"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis  
The smile, the gift, the pleasant word, unfailing courtesyThese are the signs, they say, of true nobility.
Explanation A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.
*************************************************************
954/1330
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.

இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177527"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis  
Millions on millions piled would never win  The men of noble race to soul-degrading sin.
Explanation Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.
*************************************************************
955/1330
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.

இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177528"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis  
Though stores for charity should fail within, the ancient race, Will never lose its old ancestral grace.
Explanation Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).
*************************************************************
956/1330
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.

இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177529"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis  
Whose minds are set to live as fits their sire's unspotted fame,Stooping to low deceit, commit no deeds that gender shame.
Explanation Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.
*************************************************************
957/1330
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177530"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis  
 The faults of men of noble race are seen by every eye,As spots on her bright orb that walks sublime the evening sky.
ExplanationThe defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.
*************************************************************
958/1330
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177531"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis  
 If lack of love appear in those who bear some goodly name,'Twill make men doubt the ancestry they claim.
Explanation If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.
*************************************************************
959/1330
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177532"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis  
 Of soil the plants that spring thereout will show the worth:The words they speak declare the men of noble birth.
Explanation As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth).
*************************************************************
960/1330
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்
வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.

இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177533"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who seek for good the grace of virtuous shame must know;
Who seek for noble name to all must reverence show.
Explanation He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.
********************************************
மேலும் பயணிப்போம் நண்பர்களே!!! வள்ளுவனின் வாக்கினை பின்தொடர்ந்து..
அன்புடன் கே எம் தர்மா..

Sep 26, 2011

மருந்து:அதிகாரம் 95/133 பொருட்பால்:நட்பியல்

 திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்! வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!

மருந்து:அதிகாரம் 95/133 
 பொருட்பால்:நட்பியல் 

931/1330
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177514"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
The learned books count three, with wind as first; of these,
As any one prevail, or fail; 'twill cause disease.
Explanation :If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.
*****************************************************
942/1330
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177515"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
No need of medicine to heal your body's pain,
If, what you ate before digested well, you eat again.
Explanation :No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.
***********************************************
943/1330
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177516"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who has a body gained may long the gift retain,
If, food digested well, in measure due he eat again.
Explanation :If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.
*************************************************
944/1330
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177517"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Knowing the food digested well, when hunger prompteth thee,
With constant care, the viands choose that well agree.
Explanation :(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you).
************************************************
945/1330
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177518"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
With self-denial take the well-selected meal;
So shall thy frame no sudden sickness feel.
Explanation :There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable.
*****************************************
946/1330
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177519"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
On modest temperance as pleasures pure,
So pain attends the greedy epicure.
Explanation :As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.
***********************************************
947/1330
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177520"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who largely feeds, nor measure of the fire within maintains,
That thoughtless man shall feel unmeasured pains.
Explanation :He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).
*************************************************
948/1330
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177521"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Disease, its cause, what may abate the ill:
Let leech examine these, then use his skill.
Explanation :Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).
*****************************************
949/1330
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177522"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
The habitudes of patient and disease, the crises of the ill
These must the learned leech think over well, then use his skill.
Explanation :The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).
************************************************
950/1330
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177523"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis 
For patient, leech, and remedies, and him who waits by patient's side,
The art of medicine must fourfold code of laws provide.
Explanation :Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.
********************************************
மேலும் பயணிப்போம் நண்பர்களே!!! வள்ளுவனின் வாக்கினை பின்தொடர்ந்து..
அன்புடன் கே எம் தர்மா..