மௌனம் பேசியதோ!
பிள்ளை வான் நிலா
வெள்ளைப் பால் கொடுக்க
பூமித் தாய் அதை
பூரிப்புடன் பருகினாள்!
சிவந்த தன் இதழ்களிலே
கனிந்த தேன் சந்தமுடனே
முல்லைச் சிரிப்பை மூடித் திறந்தே
வெள்ளைப் புறாவைத் தோளிற் சுமந்தே
மெல்லென அவன் அருகினில் வந்தாள்!
வானத் தெருவில் அகல்
விளக்குகள் எரிய பாவை அவளைப்
பார்த்த அவன் விழிகளோ
மீள மறுக்க அவர்கள்
மனச் சமவெளியில் மௌனம் பேசியது!...Gowry Nesan


No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!