Search This Blog

Apr 12, 2024

ஜோதிர்லிங்கங்கள்- 7/12. அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்.

அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் -ஜோதிர்லிங்கங்கள்: 7/12






                                                         
                


























மூலவர்: ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர். அம்மன்/தாயார்: பர்வத வர்த்தினி, மலை வளர்காதலி. தீர்த்தம்: கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும். (வெளியிலுள்ள 22 தீர்த்தங்கள் தேவி பட்டினம், திருப்புல்லாணி, பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் இடங்களில் உள்ளன.) . பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்.

புராண பெயர் : கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம் ஊர்: ராமேஸ்வரம், மாவட்டம்: ராமநாதபுரம், மாநிலம்: தமிழ்நாடு. இருப்பிடம் : மதுரையில் இருந்து 200 கி.மீ., தூரத்தில் ராமேஸ்வரம் உள்ளது. சென்னை, மதுரையில் இருந்து ரயில், பஸ் உண்டு. அருகிலுள்ள ரயில் நிலையம் : ராமேஸ்வரம் அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை. தங்கும் வசதி : ராமேஸ்வரம், ஓட்டல் தமிழ்நாடு போன்:+91-4573 - 221277 , 221064. ஓட்டல் ராயல் பார்க் போன்:+91-4573 - 221680 , 221321. ஓட்டல் மகாராஜாஸ் ஏ/சி போன்:+91-4573-221271, 221721,222511. ஓட்டல் சண்முகா பாரடைஸ் ஏ/சி போன்:+91-4573-222984, 222945. ஓட்டல் ஐலண்ட் ஸ்டார் போன்:+91-4573-221472, கோசுவாமி மடம் தங்கும் விடுதி. போன்: +91-4573 221108, 222419.

Apr 10, 2024

ஜோதிர்லிங்கங்கள் 6/12. அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில்.

                    
     
                          
அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில்.

மூலவர் : திரியம்பகேசுவரர். அம்மன்/தாயார்: ஜடேசுவரி. தீர்த்தம்: குசாவர்த்த தீர்த்தம், கங்காத் துவாரம், கோடிதீர்த்தம், பல்வ தீர்த்தம், நீலகங்காதீர்த்தம், கோதாவரி, ராமகுண்டம், லட்சுமண குண்டம், கவுதம குண்டம், வாணாசி தீர்த்தம், மணிகர்ணிகத் தீர்த்தம், கஞ்சன் தீர்த்தம். பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன். ஊர் : திரியம்பகம். மாவட்டம் : நாசிக். மாநிலம் : மகாராஷ்டிரம் திருவிழா: பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, கும்பமேளா. தல சிறப்பு: சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். முகவரி : அருள்மிகு திரியம்பகேசுவரர் திருக்கோயில், திரியம்பகம், நாசிக் மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலம்.

Apr 9, 2024

ஜோதிர்லிங்கங்கள்-5/12. அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில்.


       



ஜோதிர்லிங்கங்கள்-5/12.
அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில்.

மூலவர்: மல்லிகார்ஜுனர், (ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்) அம்மன்/தாயார்: பிரமராம்பாள், பருப்பநாயகி

தலவிருட்சம்: மருதமரம். தீர்த்தம்: பாலாநதி. பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன். புராண பெயர்: திருப்பருப்பதம்.  ஊர்: ஸ்ரீசைலம். மாவட்டம்: கர்நூல். மாநிலம்: ஆந்திர பிரதேசம்

ஜோதிர்லிங்கங்கள் 4/12. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்.

             









 






அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி-221 001, வாரணாசி மாவட்டம்,- உத்தரப்பிரதேசம் மாநிலம். தொலைபேசி: +91 542-239 2629

மூலவர்: காசி விஸ்வநாதர்.  அம்மன்/தாயார்: விசாலாட்சி.  தீர்த்தம்: கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாவி என்ற சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள். பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன். புராண பெயர்: வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம். ஊர்: காசி. மாவட்டம்: வாரணாசி. மாநிலம்: உத்திர பிரதேசம்இருப்பிடம் : காசி உத்திரப் பிரதேச மாநிலத்தில், காசி மாவட்டத்தில் புனிதகங்கையின் மேற்குக் கரையில் உள்ளது. வாரணம், அசி என்னும் இரு நதிகளுக்கு இடையே காசி உள்ளது. காசியில் கங்கை 60 கி.மீ. க்கு வடக்கு நோக்கிப் போகிறது. லக்னோவிற்கு தென் கிழக்கேயும், அலகாபாத்திற்கு நேர் கிழக்கேயும், பைசாபாத் அல்லது அயோத்தி தென் கிழக்கேயும், பீகார் மாநில அவுரங்கபாத்திற்கு மேற்கேயும் காசித்தலம் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் : வாரணாசி, காசி அருகிலுள்ள விமான நிலையம் : டெல்லி, காசி தங்கும் வசதி : காசியில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.

Apr 8, 2024

ஜோதிர்லிங்கங்கள் - 3/12. அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்.


               
1)கோயில் தோற்றம்.
2) கோயில் கோபுரம்
3) மூலவர் வைத்தியநாதர்
4) வைத்தியநாதர் 
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்: 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.

மூலவர்: வைத்தியநாதர். அம்மன்/தாயார்: தையல்நாயகி. தீர்த்தம்: பரளி தீர்த்தம், சூரிய தீர்த்தம், கங்கா தீர்த்தம்பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன். ஊர்: பரளி, மாவட்டம்: பீட் மாநிலம்: மகாராஷ்டிரா

இருப்பிடம் : மும்பையிலிருந்து 500 கி.மீ., அவுரங்காபாத்திலிருந்து 12 மணி நேர பஸ் பிராயணம் செய்தால் பரளி வைத்தியநாதர் தலத்தை அடையலாம். இல்லை யேல் பர்பிணி ஜங்சனிலிருந்து ரயிலில் சென்றால் இத்தலத்தை அடையலாம். அருகிலுள்ள ரயில் நிலையம்: பரளி, அருகிலுள்ள விமான நிலையம் : அவுரங்காபாத். 

ஜோதிர்லிங்கம் கோவில்கள் – 2 / 12 :: அருள்மிகு சோமநாதர் திருக்கோயில்.

                                                              
1) கோயில் முன்தோற்றம். 2) கோயில் முழுத்தோற்றம். 3) அலங்காரத்துடன் சோமநாதர். 4) மூலவர் சோமநாதர். 5) மலர் அலங்காரத்தில் மூலவர்- சோமநாதர் சன்னதி. 6) அருள்மிகு சோமநாதர் திருக்கோயில்
அருள்மிகு சோமநாதர் திருக்கோயில்.  மூலவர்: சோமநாதர். அம்மன்/தாயார்: பார்வதி, சந்திரபாகா. தீர்த்தம்: திரிவேணி தீர்த்தம், கபில தீர்த்தம், சூரிய சந்திர குண்டம். பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்.  ஊர்: பிரபாசப் பட்டணம், மாவட்டம்: ஜுனாகட், மாநிலம்: குஜராத்.

தல பெருமை;சோமன் என்று சொல்லக்கூடிய சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றமையால் சோமநாதம் எனப் பெயர் உண்டாகியது. சோமநாதபுரம் உலகம் தோன்றிய காலம் முதலே சிறந்த தலமாக விளங்கியது. பிரபாசப் பட்டணம் எனப் புகழ்பெற்றது. ஏனெனில், இத்தலத்தின் கடற்கரையில் ஓரிடத்தில், ஒரு குறிப்பிட்ட சமயத்தில், சூரிய ஒளியும், சந்திர ஒளியும் பிரகாசிக்கும். புராணகாலம், வேத காலம், இதிகாச காலம், தற்காலம் என இப்படிப் பல காலங்களிலும் புனிதத் தலமாக விளங்கி வருகிற சிறப்புடையது இத்தலம். நமது நாட்டின் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தலையாய தலம். இரண்யா நதி, கபில நதி, சரஸ்வதி நதி ஆகிய மூன்று நதிகளும் திரிவேணி சங்கமத்தில் ஒன்று கூடுகின்றன. இந்த  இடம் புனிதமாகக் கருதப்படுகிறது.

Dec 4, 2023

ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (3) தடை விதிக்கும் மூன்று மனநிலைகள்


ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (3)
ஆழ்மன சக்திகளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை மேலே வர விடாமல் தடுத்துப் புதைக்கும் மூன்று மனநிலைகளை முதலில் மனதில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மூன்றும் உள்ள வரை ஆழ்மன சக்திகள் கைகூட வாய்ப்பேயில்லை. அவை - அவநம்பிக்கை, அவசரம், அமைதியின்மை.


அவநம்பிக்கை
அவநம்பிக்கையிலும் இரு வகைகள் உண்டு. ஒன்று ஆழ்மன சக்திகள் இருப்பது உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தால் ஏற்படுவது. மாயாஜாலக் கதைகளில் வருவது போலல்லவா இருக்கிறது, இது நிஜமாக இருக்க சாத்தியமில்லையே என்ற எண்ணத்தால் ஏற்படுவது. இந்த அவ நம்பிக்கை வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் தொடரின் ஆரம்பத்தில் இருந்து பல அற்புத சக்தியாளர்களைப் பற்றியும், அவர்களை வைத்தும், தனித்தும் செய்த ஆராய்ச்சிகள் பற்றியும் இவ்வளவு விவரமாகக் குறிப்பிடப்பட்டன. குறிப்பாக எட்கார் கேஸ், நினா குலாகினா, லியனாரோ பைப்பர் போன்றவர்கள் எல்லாம் எவ்வித பரிசோதனைக்கும் தயாராக இருந்தவர்கள் என்பதைக் கண்டோம். அமெரிக்கா, ரஷியா உட்படப் பலநாடுகளில் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. மேலும் இத்தொடரில் சொல்லப்படாத எத்தனையோ ஆழ்மன சக்தியாளர்கள் எல்லாக் காலத்திலும் உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்திருக்கிறார்கள். உலகில் பல நாடுகளிலும், பல காலமாக, ஒருவருக்கொருவர் பரிச்சயமில்லாத பல மனிதர்கள் சேர்ந்து கூட்டு சதி செய்திருக்கிறார்கள் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமாக இருக்கும்.

என்ன தான் சொன்னாலும் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்ற வில்லையே என்று சிலர் சொல்லலாம். நாம் இருக்கும் பூமி சுற்றுவது போல நமக்குத் தோன்றுகிறதா? இல்லையே. பூமியில் வசிக்கும் நமக்கு பூமி சுற்றுவது சிறிதளவாவது தெரியவேண்டாமா? பூமி ஸ்திரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது. நம் பார்வைக்கு சூரியன் அல்லவா பூமியைச் சுற்றுவதாகத் தெரிகிறது. கிழக்கிலிருந்து மேற்கில் போன சூரியன் சுற்றி வந்து மறுபடியும் கிழக்கில் அல்லவா எட்டிப்பர்க்கிறான். பள்ளிக் கூடத்திற்கே செல்லாதவன், எந்த விஞ்ஞானமும் அறியாதவன் அப்படி அடித்து அல்லவா சொல்லுவான். படித்ததை மறந்து விட்டுப் பார்த்தால் அவன் சொல்வது சரி என்றல்லவா நமக்கும் தோன்றும். எனவே புலன்களின் அறிவுக்கு எட்டாத சக்திகள் உண்டு என்பதாலும், நாம் ஆதாரங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் என்பதாலும் ஆழ்மன சக்திகள் உண்மையிலேயே உள்ளதா என்று அவநம்பிக்கை கொள்ளவே தேவையில்லை.

இரண்டாவது வகை அவநம்பிக்கை நம் மீதே ஏற்படலாம். இதெல்லாம் பிரம்மாண்டமான சக்திகளாகத் தெரிகிறது. நம்மைப் போன்ற சாதாரணமான மனிதர்களுக்கு இதெல்லாம் வருமா? என்று தோன்றலாம். ஏகப்பட்ட பிரச்னைகள், பலவீனங்கள் எல்லாம் நம்மிடம் நிறைந்திருந்திருக்கிறது நமக்கல்லவா தெரியும். எத்தனையோ பலவீனங்களை அடுத்தவர் அறியாமல் நமக்குள் மறைத்து வைத்திருந்து அவற்றுடன் போராடி வரும் அவஸ்தையை நாமல்லவா அறிவோம். அப்படியிருக்கையில் ஆழ்மன சக்திகள் எல்லாம் நமக்கு கைகூடுமா என்ற அவநம்பிக்கை நமக்குள் எழலாம்.

ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். படைப்பாளியின் விசேஷ குணங்களை அவன் படைப்பில் பார்க்காமல் வேறெங்கே பார்க்க முடியும்? நம் எல்லா பிரச்னைகளும் நமது இயல்பான தெய்வாம்சத்தை மறந்து சில்லறை ஆசைகளுடனும், விஷயங்களுடனும் நம்மை இணைத்து அவற்றையே நம் அடையாளமாகக் காண்பது தான். மேல் மனக் குழப்பங்களை வைத்து எடை போடாமல் ஆழமாகச் சென்றால் தான் நம் உண்மையான சக்திகளை உணர முடியும். அடிக்கடி ஆழமாக நமக்குள் போக முடிந்தால், அந்த சக்திகளை ஒரு வினாடியாவது தரிசித்தால் நமக்கு ஒரு போதும் சந்தேகம் வராது. (இது குறித்து பல நூறு பக்கங்கள் எழுதலாம் என்றாலும் தற்போதைய தலைப்பிற்கு இந்த அவநம்பிக்கை தேவையில்லை என்பது உணர்ந்தால் போதுமானது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்).

அவசரம்
அடுத்த பெரும் தடை அவசரம். இது இன்றைய காலத்தில் மிக நியாயமானது என்று நாம் நினைக்கும் சாபக்கேடு. இயற்கையைப் பொறுத்த வரை எதிலும் எப்போதும் அவசரம் கிடையாது. அவசரப்படுத்தினால் நல்ல இயற்கையான விளைவுகள் கிடைக்காது. ஒரு விதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும். 

விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு அரை மணி நேரத்தில் தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடி வரவில்லை, என்ன ஆயிற்று?” என்று தோண்டிப்பார்ப்பதோ, இந்த முயற்சியே வியர்த்தம் என்று அடுத்த நாள் முதல் தண்ணீர் ஊற்ற மறுப்பதோ முட்டாள்தனம். அது போலத் தான் ஆழ்மன சக்தி வளர்த்தலும்.

ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா? இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை. ஆனால் நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.

அமைதியின்மை
மனதை முழுவதுமாக அமைதிப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சுலபமான செயல் அல்ல என்றாலும் அவ்வப்போது சிறிது நேரத்திற்காவது மனதை அமைதிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஆழ்மனதில் இருந்து வரும் செய்திகளைக் கேட்க முற்படுகிற நேரத்தில் உள்ளே மற்ற இரைச்சல்கள் அதிகம் இருக்குமானால் நம்மால் எதையும் அறிய முடியாது. நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு ஆகியவை இருக்குமானால் மனம் அமைதியடைய மறுக்கும். முதலில் என்னைக் கவனி, இதற்கு எதாவது செய் என்று அந்த உணர்ச்சிகள் கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்குமானால் எவ்வளவு முயன்றாலும் ஆழ்மன செய்திகளை அறிந்து கொள்ள முடியாது. ஆழ்மன சக்திகளை பயன்படுத்தவும் முடியும்.

நல்ல இசை, நல்ல இலக்கியம், நல்ல புத்தகங்கள், ஆன்மீகம், தியானம், இயற்கைக் காட்சிகள் போன்றவை மனதை ஓரளவு அமைதிப்படுத்த உதவலாம். அவரவர் தன்மைக்கு எது உதவுகிறதோ அதை உபயோகித்து மன அமைதி கொள்ளலாம். பயிற்சிகளின் போதும் சரி, ஆழ்மன சக்திகளின் போதும் சரி மனம் அமைதியாக இருப்பது மிக முக்கியம். பல ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆழ்மனசக்தி பெற்றவர்கள் கூட வெற்றிகரமான முடிவுகளைத் தரத் தவறும் தருணங்கள் அவர்கள் அமைதியிழந்த தருணங்களாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இந்த மூன்று தடைகளை முறியடித்து விட்டால் ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சூழ்நிலையை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள். இனி அவற்றைப் பெறும் வழிமுறைகளையும் காண்போமா?

மேலும் பயணிப்போம்.... (தொடரும்)
நன்றி:விகடன்